பென்னாகரம் தொகுதியில் அடிதடி
Posted On Saturday, March 27, 2010 at at 10:06 PM by Muthuபென்னாகரம்: இன்று இடைத் தேர்தல் நடக்கும் பென்னாகரம் தொகுதி எல்லையில் மேச்சேரி என்ற கிராமத்தில் குவிந்துள்ள திமுக மற்றும் பாமக தொண்டர்களிடையே மோதல் வெடித்தது.
பென்னாகரம் தொகுதிக்குள் வெளியூர்வாசிகள் இருக்கக் கூடாது என்ற தடையால் அவர்கள் மேச்சேரி கிராமத்தில் குவிந்துள்ளனர். இன்று காலை அங்கு குழுமியிருந்த திமுக, பாமகவினரிடையே மோதல் வெடித்தது.
திமுகவினரின் 2 கார்களை பாமகவினர் தாக்கி அடித்து நொறுக்கினர். இதையடுத்து திமுகவினர் பதில் தாக்குதலில் இறங்கினர். மேச்சேரி பாமக அலுவலகத்தை தாக்கி சூறையாடினர். அங்கிருந்த பொருட்கள் ரோட்டில் வீசப்பட்டன. விரைந்து வந்த போலீஸார் இரு தரப்பினரையும் கலைத்தனர்.
பாமக அலுவலகம் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து அக்கட்சியினர் சேலம்- மேட்டூர் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் பாமகவினர் மீது தடியடி நடத்தி கலைத்தனர்.
இந்த மோதலால் பெரும் பதற்றம் நிலவுவதால் அப் பகுதியி்ல் கடைகள் அடைக்கப்பட்டன. பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
வினாத்தாள் வினியோகத்தில் வேறு குளறுபடி - ஜெயலலிதா
Posted On Friday, March 26, 2010 at at 11:22 PM by Muthuசென்னை: புரட்சித் தலைவரின் வெற்றிச் சின்னமாம் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து, அதிமுக வேட்பாளரை அமோக வெற்றி பெற செய்யுமாறு வைக்குமாறு பென்னாகரம் தொகுதி வாக்காளப் பெருமக்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று அதிமுக பொதுச் செயலாளர் செல்வி.ஜெயலலிதா கோரியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு காரணமாக, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர்.
திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதற்குப் பிறகு, பகலில் ஆறு மணி நேரமும், இரவில் நான்கு மணி நேரமும் மட்டுமே விவசாயத்திற்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அறிவிக்கப்பட்டதும் அளிக்கப்படவில்லை என்பது தான் சோதனையிலும் வேதனை!.
விழுப்புரம் மாவட்டத்தில் கரும்பு பயிரிட்ட விவசாயிகள் மின் வெட்டு காரணமாக பயிர்களுக்கு போதுமான நீரைப்பாய்ச்ச முடியாமல், பயிர் வாடிப்போய் விடுமோ என்ற அச்சத்தில் உறைந்து போயுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் எந்தவித முன்னறிவிப்புமின்றி மின்தடை மற்றும் மின்னழுத்த குறைவு ஏற்பட்டு வருகிறது. இந்தப்பகுதியில் ஒரு நாளைக்கு மூன்று மணி நேரம் கூட மின்சாரம் வழங்கப்படுவதில்லை.
இதன் விளைவாக, இந்த மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்கள் கருகும் நிலையில் உள்ளன. கடுமையான மின்வெட்டு காரணமாக நாட்டின் தொழில் உற்பத்தி வெகுவாக குறைந்துவிட்டது. மேலும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடந்து கொண்டிருக்கின்ற சூழ்நிலையில், இரவு நேரங்களில் பெரும்பாலான இடங்களில் மின்வெட்டு ஏற்படுகிறது. தேர்விற்கு முந்தைய நாள், பெரும்பாலான இடங்களில் மின்தடை ஏற்படுவதால், மாணவ-மாணவியர் தேர்வுக்கு படிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். ஆனால், அமைச்சர் ஆற்காடு வீராசாமியோ மின்வெட்டு இல்லை என்கிறார்.
இந்தச் சோதனை போதாது என்று, மறுநாள் நடந்த தேர்வில் வினாத்தாள் வினியோகத்தில் வேறு குளறுபடி!
பெட்ரோல்-டீசல் விலை...
அடுத்தபடியாக, மத்திய அரசின் பட்ஜெட்டில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் மீது கூடுதல் வரிகள் விதிக்கப்பட்ட போது, அதை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி கடிதம் எழுதி இருப்பதாக கூறினார் கருணாநிதி. ஆனால், சென்னை உட்பட 13 பெருநகரங்களில் பெட்ரோலின் விலை லிட்டருக்கு மேலும் 41 பைசாவும், டீசலின் விலை லிட்டருக்கு மேலும் 26 பைசாவும் உயர இருப்பதாக மத்திய அரசு அறிவித்து இருக்கிறது. இதன் மூலம் விலைவாசி மேலும் உயரக்கூடும். இது குறித்து கருணாநிதி இதுவரை வாய் திறக்கவில்லை.
போலி மருந்துகள்..
அரசின் வன்முறைக்கு ஆதரவான போக்கு காரணமாக, தமிழ் நாட்டில் குற்ற செயல்களில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. காலாவதியான மருந்து, மாத்திரைகளில் உள்ள தேதி பற்றிய தகவல்களை மாற்றி அதை மீண்டும் விற்பனை செய்யும் அளவுக்கு குற்றவாளிகளுக்கு துணிச்சல் ஏற்பட்டு இருக்கிறது. இதன் மூலம் காவல் துறையும், மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையும் வலுவற்ற துறைகளாக விளங்குகின்றன என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம்.
பாலைவனமான பென்னாகரம்:
கடந்த நான்கு ஆண்டு காலமாக பென்னாகரம் தொகுதிக்காக எதையும் செய்யாததால் தான், இந்தத் தொகுதி வறட்சியாகவும், குடிநீரற்றும், பாலைவனமாகவும், தொழில் வளர்ச்சி இன்றியும் காட்சி அளிக்கிறது.
இந்தச் சோதனைகள் தொடர திமுகவுக்கு வாக்களியுங்கள் என்று கருணாநிதி கேட்கிறார் போலும்! இந்த நிலைமை தொடராமல் இருக்க, உங்கள் கோரிக்கைகளை வென்றெடுக்கக்கூடிய, உங்கள் கோரிக்கைகளுக்காக குரல் கொடுக்கக் கூடிய வேட்பாளரான ஆர். அன்பழகனுக்கு புரட்சித் தலைவரின் வெற்றிச் சின்னமாம் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து, அவரை அமோக வெற்றி பெறச்செய்ய வைக்குமாறு பென்னாகரம் தொகுதி வாக்காளப் பெருமக்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
பெண்களின் மார்பில் வெடிகுண்டு
Posted On Thursday, March 25, 2010 at at 11:59 PM by Muthu
ஆபரேஷன் மூலம் மார்பில் வெடி குண்டை புதைத்து வைத்து விமானங்களை தகர்க்க அல்கொய்தா தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டி இருந்தது தெரிய வந்துள்ளது.
அல்கொய்தா தீவிரவாதிகள்இப்போது ஏராளமானமனித குண்டுகளை பயன்படுத்த ஏராளமான பெண்களையும் தேர்வு செய்துள்ளனர்.
அவர்களை பல்வேறு வகையான தாக்குதலுக்கு பயன்படுத்த திட்டமிட்டு உள்ளனர். இதில் உடலில் வெடி குண்டை புதைத்து வைத்து தகர்க்கும் திட்டமும் ஒன்று.
பெண் தீவிரவாதிகள் மார்பில் பிளாஸ்டிக் சர்ஜரி ஆபரேஷன் மூலம் குண்டுகளை புதைத்து வைத்து விமானங்களில் தாக்குதல் நடத்துவது அவர்களது முக்கிய திட்டமாகும்.
அல்கொய்தா இயக்கத்தில் பல டாக்டர்களும் இருக்கின்றனர். பாகிஸ்தானில் மலைவாழ் மக்கள் கிராமங்களில் உள்ள அல்கொய்தா முகாமில் இருக்கும் இந்த டாக்டர்கள் ஆபரேஷன் மூலம் பெண்கள் மார்பில் குண்டுகளை புதைத்து வைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக இங்கிலாந்து உளவு துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
மார்பு அல்லது பின்பு சதை பகுதியில் 5 அவுன்சு உள்ள வெடி மருந்தை பிளாஸ்டிக் குப்பியில் அடைத்து புதைத்து வைத்து விடலாம். இதை ஸ்கேனர் கருவிகளால் கண்டு பிடிக்க முடியாது.
விமானத்தில் செல்லும் போது இந்த குண்டை வெடிக்க செய்தால் விமானத்தில் ஓட்டை விழும் அளவுக்கு தாக்கும் சக்தி இருக்கும். ஓட்டை விழுந்தால் மேற்கொண்டு விமானம் பறக்க முடியாமல் கீழே விழுந்துவிடும் இந்த முறையில் அவர்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு உள்ளனர்.
எனவே இதுபோன்ற தாக்குதல்களை எப்படி தடுப்பது என்பது குறித்து வல்லுனர்கள் குழு ஆய்வு செய்து வருகிறது.
பென்னாகரத்தில் இடைத் தேர்தல் தேவை இல்லை
Posted On at at 8:44 PM by Muthu
அவிநாசி : ''ஆளுங்கட்சியின் பண பலம், அதிகார செல்வாக்கு காரணமாக பென்னாகரத்தில் தேர்தல் நியாயமாக நடக்க வாய்ப்பில்லை; வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை கட்டுப்படுத்த முடியவில்லை என்று தேர்தல் கமிஷனே ஒப்புக்கொண்டுள்ளதால், தாராளமாக தேர்தலை நிறுத்தி விடலாம்,'' என்று தமிழக பா.ஜ., தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
திருப்பூருக்கு நேற்று வந்த அவர், நிருபர்களிடம் கூறியதாவது: பென்னாகரம் இடைத்தேர்தல் முக்கிய கட்டத்தை நெருங்கியுள்ளது. திருமங்கலம் 'பார்முலாவை' தி.மு.க., அமல்படுத்தி வருகிறது. எதிர்க்கட்சி தலைவர்களை தொகுதிக்குள் அனுமதிக்க மறுக்கின்றனர் என்ற புகாரும் வரத் துவங்கியுள்ளது. இதுதொடர்பாக, அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார். ஆளுங்கட்சியினர், அதிகார துஷ்பிரயோகம், பண பலம் ஆகியவற்றை தொடர்ந்து விரிவுபடுத்தி செல்கின்றனர். நேற்று முன்தினம் வரை பென்னாகரம் வாக்காளரின் சந்தை மதிப்பு (3,000 ரூபாய்). வாக்காளர்களின் உரிமை, மிக கேவலமாக விலை பேசப்படுகிறது.
'வாக்காளருக்கு பணம் கொடுப்பதை தடுக்க முடியவில்லை' என்று தேர்தல் ஆணையாளர் நரேஷ் குப்தா வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளார். தேர்தல் ஆணையத்தையும் மீறி தவறுகள் நடக்கின்றன. தவறு நடப்பது தெரிந்தும் கூட, 'தேர்தலை நடத்த வேண்டுமா' என்பதை ஆணையம் யோசிக்க வேண்டும். பா.ஜ.,வை பொறுத்தவரை, தேர்தலை நியாயமான முறையில் நடத்த முடியவில்லை என்றால், அதை ரத்து செய்வதில் தவறு ஏதுமில்லை என்றே கருதுகிறோம். அடுத்த மாதம் 10, 11 தேதிகளில் பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி சென்னை வருகிறார். கொடியேற்று விழா, பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் அவர், இரு தினங்களிலும் மாவட்ட, ஒன்றிய, நகர, ஊராட்சி கிளை நிர்வாகிகளை சந்திக்கிறார். இவ்வாறு, பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். மாநில பொது செயலாளர் ரமேஷ், செயற்குழு உறுப்பினர் செல்வக்குமார், திருப்பூர் மாவட்ட தலைவர் மணி உட்பட பலர் பங்கேற்றனர்.குஷ்பூவுக்கு கருணாநிதி சப்போர்ட்
Posted On at at 9:49 AM by Twilight Sense
மத்திய அமைச்சர் அழகிரி, வார இதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், 'முதல்வர் கருணாநிதிக்குப் பின் யாரையும் தலைவராக ஏற்றுக் கொள்ள மாட்டேன்' என கூறியுள்ளார். தி.மு.க.,வின் அடுத்த வாரிசாகவும், அடுத்த முதல்வராகவும் ஸ்டாலின் சித்தரிக்கப்பட்டு வரும் நிலையில், முதல்வரின் மூத்த மகனான அழகிரி இத்தகைய கருத்தை தெரிவித்திருப்பது தி.மு.க.,வில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இந்நிலையில், தேர்தல் பிரசாரத்திற்காக, பென்னாகரம் செல்வதற்கு முன், முதல்வர் கருணாநிதி சென்னையில் நேற்று அளித்த பேட்டி:
* பென்னாகரம் தொகுதியின் வெற்றி வாய்ப்பு பற்றி?
வெற்றி வாய்ப்பு நிச்சயம், அதில் சந்தேகம் வேண்டாம்.
* 'உங்களுக்கு பிறகு யாரையும் தலைவராக ஏற்றுக் கொள்ளப் போவதில்லை' என மத்திய அமைச்சர் அழகிரி கூறியுள்ளாரே?
அதைப் பற்றி அவரையே கேளுங்கள்.
* உங்களுக்கு பிறகு யாருக்கும் திறமை இல்லை என்பதைப் போல் சொல்லியிருக்கிறாரே?
எனக்குப் பிறகு... என்பது, எந்த ஆண்டு முதல் என்று எனக்கே தெரியாது.
* சுப்ரீம் கோர்ட்டில், குஷ்பு வழக்கு விசாரணையின் போது, திருமணத்திற்கு முன்பே உறவு கொள்வது தவறில்லை என்பதைப் போல நீதிபதி சொல்லியிருக்கிறாரே?
சங்க இலக்கியத்திலேயே, 'களவியல்' என்று ஒரு பகுதி உண்டு. அந்த அடிப்படையில் அதை அணுகிடுவோர் உண்டு. இவ்வாறு முதல்வர் பேட்டியளித்தார்.
சிரிக்க மட்டும்
Posted On Wednesday, March 24, 2010 at at 10:02 AM by Muthuகணவன்: டார்லிங், நான் இந்த மாத சம்பளத்திற்குப் பதிலாக 500 கிஸ் தரலாமுன்னு நினைக்கிறேன் சரிதானே.
மனைவி : எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை.
நானும் கேபிள்காரனுக்கு 50, பால்காரனுக்கு30, பேப்பர்காரனுக்கு 20, மளிகைகாரனுக்கு 150, அவுஸ் ஓனருக்கு 250, கிஸ் நானும் தரலாமுன்னு நினைக்கிறேன் உங்களுக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை தானே ?
கணவன் : !!!!!!!!!!!!!!!!
இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனி ஆரம்பித்து வைக்கும் நடிகர் விஜயகாந்த்தின் கேப்டன் டிவி 14th April 2010
Posted On Monday, March 22, 2010 at at 9:40 PM by Twilight Senseஇந்தியா ஏழை நாடு இல்லை
Posted On at at 12:51 AM by Muthuடெல்லி: ஐபிஎல் சீஸன் -4-ல் மேலும் இரு புதிய அணிகள் இன்று பட்டுள்ளன. கொச்சி மற்றும் புனே நகரங்களை மையப்படுத்தி இந்த அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
புனே அணியை சஹாரா அட்வென்ச்சர் ஸ்போர்ட்ஸ் நிறுவனமும், கொச்சி அணியை ரெண்டவஸ் ஸ்போர்ட்ஸ் லிட் நிறுவனமும் பெரும் பணம் கொடுத்து வாங்கியுள்ளன.
புனே அணிக்கு சஹாரா கொடுத்துள்ள விலை 370 மில்லியன் டாலர்கள்(1700 கோடி). அகமதாபாத், நாக்பூர் மற்றும் புனே ஆகிய மூன்று நகரங்களில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளுமாறு அந்த நிறுவனத்துக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. அவர்கள் புனே நகரை தலைமையிடமாக அறிவித்தததால், அதன் பெயரில் இந்த அணி அமைக்கப்படுகிறது.
கொச்சிக்கு ரெண்டவஸ் நிறுவனம் 333.33 மில்லியன் டாலர்(1533 கோடி) கொடுத்தது.
இந்த இரு அணிகளும் அடுத்த ஆண்டு நடக்கும் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கின்றன. இதன் மூலம் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது
இதன் மூலம் IPLக்கு வருமானம் பல மடங்கு பெருகியுள்ளது. தற்போதுள்ள எட்டு அணிகளை அறிவித்தபோது கிடைத்ததை விட 200 மடங்கு அதிக விலை புதிய அணிகளை ஏலம் விட்டதில் மட்டுமே கிடைத்துள்ளது.
யாரவது அப்துல் காலமா பார்த்தா சொல்லுங்க இந்தியா இப்பவே வல்லரசுதான்னு, 2020 - ல வல்லரசுக்கெல்லாம் வல்லரசு ஆகிடும். எவ்வளவோ துறை இருக்கிற இந்த நாட்டுல ஒரு விளையாடுலேயே இவ்வளவு பணம் புழங்குதுனா பாருங்க.....
எதிர்பார்ப்பு
Posted On Sunday, March 21, 2010 at at 4:12 PM by Muthuஎதிர்பாராமல் இருக்க
எதிர் பார்க்கிறேன்
வாழ்கையில்.......!
பத்தாம் வகுப்பு, பத்து லட்சம் பேர்
Posted On at at 3:07 AM by Twilight Senseசென்னை : பிளஸ் 2 தேர்வுகள் நாளையுடன் முடிவதையடுத்து, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை மறுநாள் (23ம் தேதி) துவங்குகிறது. எஸ்.எஸ்.எல்.சி., - மெட்ரிக் - ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஓரியன்டல் ஆகிய நான்கு வகையான தேர்வுகளை 10 லட்சம் மாணவ, மாணவியர் எழுதுகின்றனர்.
கடந்த முதல் தேதி துவங்கிய பிளஸ் 2 பொதுத் தேர்வுகள், நாளையுடன் (22ம் தேதி) முடிகின்றன. நாளை, வணிகவியல், 'ஹோம் சயின்ஸ்' மற்றும் புவியியல் ஆகிய தேர்வுகள் நடக்கின்றன. விடைத்தாள் திருத்தும் பணிகள், ஏப்ரல் 3ம் தேதியில் இருந்து நடக்கின்றன. இதன் முடிவுகள், மே மாதம் இரண்டாவது வாரத்தில் வெளியாகும். பிளஸ் 2 தேர்வுகள் முடிவதைஅடுத்து, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நாளை மறுதினம் முதல் நடைபெறுகின்றன. எஸ்.எஸ்.எல்.சி., உள்ளிட்ட நான்கு போர்டு மாணவர்களுக்கும் ஒரே தேதியில் தேர்வு ஆரம்பிக்கிறது. எஸ்.எஸ்.எல்.சி: இந்த தேர்வை, 6,493 பள்ளிகளில் இருந்து, எட்டு லட்சத்து 56 ஆயிரத்து 966 மாணவர்கள் எழுதுகின்றனர். இவர்களில், நான்கு லட்சத்து 22 ஆயிரத்து 523 பேர் மாணவர்கள்; நான்கு லட்சத்து 34 ஆயிரத்து 443 பேர் மாணவியர். கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு கூடுதலாக 14 ஆயிரத்து 616 பேர் எழுதுகின்றனர். தமிழ் வழியில் மட்டும், ஏழு லட்சத்து 66 ஆயிரத்து 328 பேர் தேர்வெழுதுகின்றனர். மீதமுள்ள மாணவர்கள், ஆங்கில வழியில் எழுதுகின்றனர்.
மெட்ரிக்: இந்த தேர்வை, ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 20 பேர் எழுதுகின்றனர். இவர்களில், 71 ஆயிரத்து 764 பேர் மாணவர்கள்; 58 ஆயிரத்து 256 பேர் மாணவியர். ஆங்கிலோ இந்தியன் தேர்வை 4,492 மாணவர்களும் (கடந்த ஆண்டை விட 205 பேர் குறைவு), ஓரியன்டல் தேர்வை 1,593 மாணவர்களும் எழுதுகின்றனர். புதுச்சேரியில், எல்லா தேர்வர் களும் சேர்த்து 15 ஆயிரத்து 391 பேர் எழுதுகின்றனர். நான்கு போர்டு தேர்வுகளும், 2,791 மையங்களில் நடக்கின்றன. 'ரெகுலர்' மாணவர்கள் மட்டுமின்றி, தனித்தேர்வு மூலம் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், பத்தாம் வகுப்பு தேர்வை எழுதுகின்றனர். அனைத்து மாணவர்களுக்கும், நாளை மறுதினம் முதல் தேர்வு துவங்கினாலும், எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் ஓரியன்டல் மாணவர் களுக்கு மட்டும், ஏப்ரல் 7ம் தேதியுடன் தேர்வு முடிகிறது. மெட்ரிக் - ஆங்கிலோ இந்தியன் மாணவர் களுக்கு, ஏப்ரல் 9ம் தேதி வரை நடக்கிறது. பிளஸ் 2 தேர்வைப் போலவே, இந்த தேர்வுகளுக்கும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை தேர்வுத்துறை செய்துள்ளது. இதன் முடிவுகள், மே மாதம் 20ம் தேதிக்குப் பின் வெளியாகும்.

