இந்திய ஐ.டி. நிறுவனங்கள் அமெரிக்காவில் 2.5 லட்சம் வேலை வாய்ப்புகள்
Posted On Saturday, September 18, 2010 at at 10:30 AM by Muthuஇந்திய சாப்ட்வேர் நிறுவனங்களால் கடந்த 3 ஆண்டுகளில் அமெரிக்காவில் 2.5 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன.
சென்ற ஆகஸ்டு மாதத்தில் மட்டும் 7,000 அமெரி்க்கர்களுக்கு வேலை கிடைத்துள்ளது. இந்த தகவலை மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா தெரிவித்தார்.
டி.சி.எஸ், இன்போசிஸ் உள்ளிட்ட முன்னணி ஐ.டி. நிறுவனங்கள் உள்நாட்டில் மட்டுமல்லாமல் அமெரிக்காவிலும் வலுவாக காலூன்றி அந்நாட்டிம் வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன.
இந்த நிறுவனங்கள் அமெரிக்காவில் கடந்த மூன்று ஆண்டுகளில் 2.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை அளித்துள்ளன.
இந்நிலையில் அமெரிக்க அரசு, இந்திய ஐ.டி. நிறுவனங்களுக்கு அதிக சுமையை ஏற்படுத்தும் வகையில், எச்-1பி உள்ளிட்ட விசாக்களுக்கான கட்டணத்தை கணிசமாக உயர்த்தியுள்ளது.
இது குறித்து ஆனந்த் சர்மா கூறுகையில், பொருளாதார மந்தநிலையின்போது, உள்நாட்டில் வேலைவாய்ப்பு குறைவதை தடுப்பது எந்த நாடும் எடுக்கும் இயல்பான நடவடிக்கை தான். அதே நேரத்தில் பிற நாட்டு நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயல்படுவது, எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும் என்றார்.