வசூல் ராஜாக்கள் - பிபி, எல்.எஸ்.எஸ்,சூப்பர் டீலக்ஸ், அல்ட்ரா டீலக்ஸ்......

விருதுநகர்: சாதாரண பேருந்துகளை நிறுத்தி விட்டு பிபி, எல்.எஸ்.எஸ்,சூப்பர் டீலக்ஸ், அல்ட்ரா டீலக்ஸ் என பெயரை மாற்றி மக்களிடம் கட்டணத்தை அதிகமாக வசூலிக்கின்றனர் என்று சிஐடியு மாநில பொதுச் செயலாளர் அ.சவுந்தரராசன் குற்றம் சாட்டினார்.

இது குறித்து விருதுநகரில் சிஐடியு மாநில பொதுச் செயலாளர் அ.சவுந்தரராசன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

புதிய போக்குவரத்து வழித் தடங்களை அரசே இயக்காமல் தனியாருக்கு தாரைவார்க்கப்படுகின்றது.

தனியார் பேருந்து வேகமாக செல்ல அனுமதிக்கப்படுகிறது. ஆனால், அரசு பேருந்து வேகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், தனியாரோடு போட்டி போட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

சென்னையில் மட்டும் மினி பஸ்சை அரசு இயக்கும் என அமைச்சர் அறிவிக்கிறார். ஆனால் மற்ற பகுதிகளில் அதை செய்யவில்லை.

அரசு விரைவுப் பேருந்துகளை விட 2 மடங்கு கட்டணம் கூடுதலாக ஆம்னி பஸ்களில் வசூல் செய்யப்படுகிறது. இதற்கு நீதி தேடி நீதிமன்றம் சென்றாலும் உரிய பலன் கிடைக்கவில்லை. வெறும் அபராதம் மட்டுமே போடப்படுகிறது.

பராமரிப்பு பிரிவில் 17 ஆயிரம் வேண்டும். ஆனால் தற்போது 12 ஆயிரம் பேர் மட்டுமே உள்ளனர். பணி உயர்வு இல்லை. ஏற்கெனவே போட்ட ஒப்பந்தத்தில் இன்னும் 19 சரத்துகள் அமலாகவில்லை.

விபத்து ஏற்பட்டால் கொலைக் குற்றவாளியை போல் பார்க்கும் நிலை உள்ளது. அதை விபத்தாகத்தான் பார்க்க வேண்டும். ஜாமீன் மறுப்பு, லைசென்ஸ் ரத்து போன்றவை செய்யப்படுகிறது. இதனால் போக்குவரத்து தொழிலாளர்கள் குடும்ங்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன.

தமிழகத்தில் மறைமுக பேருந்து கட்டண உயர்வு செய்துவிட்டு அமைச்சர் உயர்த்தவில்லை என்கிறார்.

தற்போது சாதா பேருந்துகளை நிறுத்தி விட்டு பிபி, எல்.எஸ்.எஸ்,சூப்பர் டீலக்ஸ், அல்ட்ரா டீலக்ஸ் என பெயரை மாற்றி மக்களிடம் கட்டணத்தை அதிகமாக வசூலிக்கின்றனர் என்று குற்றம் சாட்டினார்.

Posted in Labels: | 0 comments

இனி முழு நேர அரசியலாம்


காங்கிரஸில் இணையப் போவதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் நடிகை குஷ்பு திடிரென்று இன்று திமுகவில் இணைந்தார்.

முதல்வர் கருணாநிதி முன்னிலையில் அண்ணா அறிவாலயத்தில் அவர் திமுகவில் இணைந்தார்.

கற்பு குறித்துப் பேசியதை எதிர்த்து குஷ்பு மீது தமிழகத்தில் தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தையும் சமீபத்தில் உச்சநீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்தது. மேலும், குஷ்பு பேசியதில் ஒருதப்பும் இல்லை என்றும்கூறி விட்டது.

இதையடுத்து கருத்து தெரிவித்த குஷ்பு தான் அரசியலில் ஆர்வம் கொண்டிருப்பதாகவும், காங்கிரஸை மிகவும் பிடிக்கும் எனவும், ராஜீவ் காந்தி படத்தை எனது பெட்ரூமில் வைத்திருப்பேன் என்றும் பேட்டி அளித்திருந்தார். இதையடுத்து அவர் காங்கிரஸில் இணையப் போவதாக செய்தி பரவியது. இதை காங்கிரஸ் தலைவர்களும் பலமாக வரவேற்றிருந்தனர். குஷ்புவை வரவேற்பதாக
தங்கபாலு, இளங்கோவன், சுதர்சனம் ஆகியோர் மகிழ்ச்சி பொங்ககருத்து கூறியிருந்தனர்.

ஆனால், அதிரடித் திருப்பமாக திமுகவில் இணைய முடிவு செய்தார் குஷ்பு. இன்று மாலை முதல்வர் கருணாநிதி முன்னிலையில் அவர் திமுகவில் இணைந்தார்.

முதல்வர் கருணாநிதி மீது தனக்கு எப்போதும் பெரிய மரியாதை உண்டு என்றும், அதனால் திமுகவில் இணைவதாகவும், இனி முழு நேர அரசியலில் ஈடுபடப் போவதாகவும் குஷ்பு கூறியுள்ளார்.

Posted in Labels: , , | 0 comments

உலக செஸ் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்து கொண்டார், ஆனந்த்

கடைசி ஆட்டம் அட்டவணை

நன்றி chessdom.


உலக செஸ் சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துகொண்ட ஆனந்த்,

இந்த இறுதி ஆட்டம் போல் கடுமையான ஆட்டம்  ஏன் வாழ்நாளில்  இருந்தது இல்லை . என்றார்.


மேலும், டோபோலோவ் ரொம்ப நல்ல விளையாட்டு வீரர் என்றும் புகழாரம் சுட்டினார். அவரும் கடைசி வரை விட்டு கொடுக்காமல் விளையாடினார்.

பீர் பாலுவும் கூலிங் பீரும்

பீர் பாலு - கூலிங் பீர் வேணுமுன்னா பாருக்கு போ, பேக்ரி க்கு இல்ல.

இது தான் பீர் பாலு அடிக்கடி சொல்லும் டயலாக். நம் கதைல வரும் பாலு ஒரு பெரிய சாப்ட்வேர் கம்பனி (ன்னு சொல்லிகொள்ளும் அளவு இல்லை) ல அதிக  சம்பளத்துக்கு வேலை  செய்கிறான்.

நம்ம தலைவர் வாரத்துக்கு ஆறு நாள் மட்டுமே டாஸ்மாக் கடைக்கு போவார், அம்ம்புட்டு செல்ப் கண்ட்ரோல், ன்னு பீத்தல் வேற

அதுவும் இந்த வெயில் காலதுள்ள, கூலிங் பீர் தேடி போவது தான் பெரிய கதை. எதுக்கு தலைவரே ன்னு கேட்டால் கூலிங் பீர் தான் டா கசக்காது.

டாஸ்மாக் இல் நடக்கும் கூத்து ரொம்பவும் சூப்பரா இருக்கும்,

பாலு: பாஸ் ...  பாஸ்சு .. சூப்பர் ஸ்ட்ராங் பீர் கூலிங்கா இருக்கா?
டாஸ்மாஸ் (மொதலாளி நினைப்பில்) ஊழியர்: இவ்ளோ கூலிங் தான் இருக்கு நு சொல்லி தண்ணி ல இருந்து ஒரு கல்யாணி பீர் பாட்டில் நீட்டினான் .
பாலு: கூளிங்கே இல்லையே பாஸ், வேற கூலிங்கா இருக்கும் பாருங்க.
 ஊழியர்: யோவ் சொல்றது புரியலையா ? வேணுன்னா வாங்கு இல்ல போய்டே இருயா...

வேண்டாம் பாஸ் ன்னு கடையில் இருந்து கோபத்துடன் வந்த பாலு. அடுத்த கடை நோக்கி பயணம் செய்தான்,

கூலிங் பயணம் தொடரும்.

பிரிலிஜி

உடலுறவின்போது கட்டுப்பாட்டை மீறி முன்கூட்டியே விந்தனுக்கள் வெளியாவைத் தடுக்க புதிய மாத்திரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இங்கிலாந்தில். விரைவில் இது சந்தைக்கு வரவுள்ளதாம்.

செக்ஸ் உறவின்போது நமது மூளையில் சுரக்கும் செரட்டோனின் என்ற சீரம்தான் உணர்வுகளை கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது. இந்த சீரத்திற்கு இதுமட்டுமல்லாமல் வேறு பல வேலைகளும் உள்ளன. இருப்பினும் உறவின்போது ஏற்படும் உச்சநிலையை கட்டுப்படுத்துவது இந்த சீரத்தின் முக்கிய வேலைகளில் ஒன்றாகும்.

சிலருக்கு இந்தக் கட்டுப்பாடு சரிவர கை கூடாமல் முன்கூட்டியே விந்து வெளியாகி உறவு கசக்கும் நிலை ஏற்பட்டுவிடும். இந்த நிலை ஏற்பட செரட்டோனின்தான் முக்கியக் காரணம். இப்படிப்பட்டவர்கள் இனி கவலைப்படத் தேவையில்லை. காரணம், இதை சரி செய்ய மாத்திரை கண்டுபிடித்து விட்டனர்.

இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த மாத்திரைக்கு பிரிலிஜி என்று பெயரிட்டுள்ளனர். 30 மில்லிகிராம் அளவிலான மாத்திரை இது. இதை உறவு கொள்வதற்கு 1 அல்லது மூன்று மணி நேரத்திற்கு முன்பு போட்டுக் கொள்ள வேண்டும். இந்த மாத்திரை செரட்டோனின் சுரப்பைக் கட்டுப்படுத்தி, உறவை இனிக்க வைக்க உதவுமாம்.

இந்த மாத்திரையின் மூலம் வழக்கமான நேரத்தை விட மூன்று மடங்கு கூடுதல் நேரத்திற்கு உறவை நீட்டிக்க முடியுமாம்.

இது தற்போது விலையில் காஸ்ட்லியாக உள்ளது. அதாவது 3 மாத்திரை கொண்ட ஒரு பேக் 76 பவுண்டுகளாகும்.

18 முதல் 64 வயது வரை உள்ளவர்கள் இதைப் பயன்படுத்த முடியும். சில ஐரோப்பிய நாடுகளில் இது ஏற்கனவே சந்தைக்கு வந்துவிட்டதாம். டாக்டர்களின் பரிந்துரையின் கீழ் மட்டுமே இந்த மாத்திரையை வாங்க முடியும். அதுவும் இப்போதைக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விற்க முடிவு செய்துள்ளனர்.

இந்த மருந்தை குடிபோதையில் இருப்போர் பயன்படுத்தக் கூடாதாம். அப்படிச் செய்தால், கடுமையான பக்க விளைவுகள் ஏற்படும் வாய்ப்புள்ளதாம்.

இந்த மருந்தினை இங்கிலாந்தில் விற்பனை செய்யும் உரிமையைப் பெற்றுள்ள லாயிட்ஸ் பார்மசி நிறுவனத்தின் ஆண்கள் செக்ஸ் சுகாதாரப் பிரிவின் தலைவர் நிதின் மகாடியா கூறுகையில், இது வயகாராவைப் போன்ற ஆடவருக்கான செக்ஸ் சுகாதார மருந்தாகும்.

இதன் மூலம் உறவுகளை மேம்படுத்த முடியும். இனிமையைக் கூட்ட முடியும். உறவின் நீளத்தை நீட்டிக்க முடியும் என்றார்.

Related Posts Plugin for WordPress, Blogger...