"லைலா" பெயர் உருவான கதை.

யார் இந்த பெயர் சுட்டுபவர்கள் ?





புதுடில்லி : தற்போது வங்கக் கடலில் உருவாகியுள்ள புயலுக்கு, "லைலா' என்ற பெயர் எப்படி வந்தது என்பது குறித்த சுவையான தகவல்கள் வெளியாகியுள்ளன.


இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது: வங்கக் கடல் மற்றும் அரபிக் கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும் நடைமுறை 2004ம் ஆண்டில் உருவானது. இந்திய வானிலை ஆய்வு மையம், இந்தப் பிராந்தியத்தில் உள்ள சிறப்பு வாய்ந்த வானிலை ஆய்வு மையம் என்பதால், இந்தியா தவிர வங்கதேசம், மாலத்தீவு, மியான்மர், ஓமன், பாகிஸ்தான், தாய்லாந்து மற்றும் இலங்கைக்கும் வானிலை தொடர்பான முன் அறிவிப்புகளை வழங்கும். அப்படி வானிலை பற்றிய தகவல்களைத் தரும் போது, புயல்களுக்கு என்னென்ன பெயர்கள் வைக்கலாம் என்பதை தெரிவிக் கும்படி, அந்த நாடுகளை கேட் டது. பின்னர் உறுப்பினர் நாடுகள் தெரிவித்த பெயர்களை அகர வரிசைப்படி பட்டியலிட்டுள் ளது.

இந்த பெயர்கள் சிறிய வார்த்தை கொண்டதாவும், உச்சரிப்பதற்கு எளிதாகவும் இருக்க வேண்டும். பண்பாட்டிற்கு எதிரானதாகவோ, மற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவோ இருக்கக் கூடாது. அப்படி உறுப்பினர் நாடுகள் தெரிவித்த 64 பெயர்களில், 22 பெயர்கள் இதுவரை உருவான புயல்களுக்கு சூட்டப்பட்டுள் ளன. தற்போதைய புயலுக்கு சூட் டப்பட்டுள்ள, "லைலா' என்ற பெயர் பாகிஸ்தானால், தெரிவிக்கப்பட்ட பெயர். அடுத்து ஒரு புயல் உருவானால், அதற்கு, "பந்து' என, பெயரிடப்படும். இந்தப் பெயரை இலங்கை அரசு பரிந்துரை செய் துள்ளது. மாலத்தீவு பரிந்துரைத்த "அய்லா', இந்தியா பரிந்துரைத்த "பிஜ்லி' ஆகிய பெயர்கள், கடந்த ஆண்டு ஏற்பட்ட புயல்களுக்கு வைக்கப்பட்டன.

புயல்களுக்கு பெயரிடும் வழக்கம் 20ம் நூற் றாண்டின் முற்பகுதியிலும் இருந்துள்ளது. அப்போது, ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையத்தினர், தங்களுக்கு பிடிக்காத அரசியல் வாதிகளின் பெயர்களை புயல்களுக்கு சூட்டியுள்ளனர். அமெரிக்காவில் 1954ம் ஆண்டில் புயல்களுக்கு பெயர் சூட்டும் நடைமுறை வந்துள்ளது. வானிலை ஆய்வு மையங்கள் பல விதமான பெயர்களைச் சூட்டி குழப்பம் உண்டாக்குவதை தடுக்கவும், இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. லைலா என்றால், கருங்கூந்தல் அழகி என்று பெயர் அல்லது பாரசீக இரவு என, அர்த்தமாகும். இவ்வாறு வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறினார்.

உற்பத்தி அதிகரிப்பு !.. தடை குறைப்பு !.. கட்டணம் உயர்வு !...

நெல்லை: தமிழகத்தில் காற்றாலை மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தின் அளவு அதிகரித்திருப்பதால் மின் தடை நேர அளவை மின்வாரியம் குறைத்துள்ளது.

தமிழகத்தில் அனல்மின் நிலையம், நீர் மின் நிலையம், காற்றாலை போன்றவற்றின் மூலம் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மின் தேவை என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுவும் தற்போது கோடை காலம் என்பதால் மின்தேவை வழக்கத்தை விட அதிகமாக இருக்கிறது.

ஏசி பயன்பாடும் அதிகரித்துள்ளதால் மின் தேவையை பூர்த்தி செய்வதில் சிரமம் ஏற்பட்டு வந்தது. அதோடு நீர்மின் நிலையங்கள் மற்றும் காற்றாலை மூலம் மின் உற்பத்தி கணிசமாக குறைந்தது. இதனால் தமிழகம் முழுவதும் சென்னை நீங்கலாக மற்ற மாவட்டங்களில் 1 நாளைக்கு மூன்று மணி நேரம் மின்தடையை கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக அரசு செயல்படுத்தி வருகிறது. இரண்டு மாதமாக வெயிலின் உக்கிரம் அதிகமாக இருக்கும் நிலையில் மின்தடை அதிகமாக இருந்ததால் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வந்தனர்.

இந்நிலையில் தமிழகத்தில் தற்போது காற்றாலை மூலம் மின்உற்பத்தி அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனால் மின்வாரிய அதிகாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் அக்னி வெயில் இன்னும் நான்கு நாளில் முடியப் போகிற நிலையில் மாநிலம் முழுவதும் பரவலாக நல்ல காற்று வீசதுவங்கியுள்ளது.

காற்று அதிகமாக வீச துவங்கியிருப்பதால் காற்றாலை மூலம் மின் உற்பத்தி அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதுவும் நேற்று காற்றாலை மூலம் 1,800 மெகாவாட் மின் உற்பத்தி ஆனது. இதே நிலை தொடரும் வாய்ப்பு இருப்பதாக மி்ன்வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

இதனால் மின்தடை நேரம் 3 மணி நேரத்தில் இருந்து 1 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் ஒரு மணி நேரம்தான் நேற்று மின்தடை இருந்ததாக மின்வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. இதே நிலை தொடரும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

மின் கட்டணம் உயர்கிறது:

இதற்கிடையே எரிவாயு விலை உயர்வு காரணமாக மத்திய அரசு வழங்கி வரும் மின்சாரத்துக்கான கட்டணம் யூனிட்டுக்கு ரூ.1 உயர்கிறது.

மத்திய அரசு நிறுவனங்களான ஓ.என்.ஜி.சி, ஆயில் இந்தியா ஆகியவை உற்பத்தி செய்யும் இயற்கை எரிவாயுவின் விலை 2 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது 1,000 கியூபிக் மீட்டர் எரிவாயுவின் விலை ரூ.3,200ல் இருந்து ரூ.6,818 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பல மின் உற்பத்தி நிறுவனங்கள் இந்த எரிவாயுவை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்கின்றன. எனவே, மத்திய அரசு வழங்கும் மின்சாரத்துக்கான கட்டணம் யூனிட்டுக்கு ரூ.1 வரை உயர்த்தப்படும் என்று மத்திய மின்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷின்டே கூறியுள்ளார்.

அதே போல இந்த மின் கட்டண உயர்வால் உர உற்பத்தி நிறுவனங்களின் செலவும் அதிகரிக்கும் என்பதால், உரங்களின் விலையும் அதிகரிக்கலாம் என்று தெரிகிறது.

Posted in Labels: | 0 comments

உயிரோவியம்

Posted in Labels: | 0 comments

உயிர்ச்சத்து (மணிச்சத்து)

பயிர்களுக்கு தேவைபடும் உரங்களில் தழை சத்துக்கு அடுத்தபடியாக மிக முக்கியமானது மணிச் சத்து.


உலக மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்றாற்போல் உணவு உற்பத்தியை பெருக்குவதற்கு உரங்களின் தேவை இன்றியமையாதது ஆகும்.

ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் 17 மில்லியன் டன் மணிச் சத்து சார்ந்த உரங்களை இடுகின்றனர். அதுமட்டுமன்றி இதன் தேவை ஆண்டொன்றுக்கு 3 சதவீதம் அதிகரித்து வருகிறது.

தற்போது மற்றொரு அதிர்ச்சிகரமான செய்தி வர தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரபடி இன்னும் 30-40 ஆண்டுகள் வரைதான் விவசாய வளர்ச்சிக்கு இணையாக மணிச் சத்து சார்ந்த உரங்களை உற்பத்தி செய்ய முடியும்.

அது மட்டுமல்ல. தற்போது உற்பத்தியாகும் மணிச் சத்தில் 90% மொராக்கோ, சீனா, தென் அமெரிக்கா , ஜோர்டான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் தான் கிடைக்கிர்றது.


எண்ணெய் வளம் கூட 75% பன்னிரென்டு நாடுகளிலிருந்து கிடைக்கிறது. ஆனால், மணிச் சத்தோ 5 நாடுகளிடம் மட்டுமே உள்ளது. தட்டுபாடு காலங்களில் சீனா மணிச் சத்துக்கான ஏற்றுமதி வரியை 135 சதம் உயர்த்தியது.

அமெரிக்காவின் மணிச் சத்து சுரங்கங்கள் இன்னும் 20 வருடங்களில் வற்றி விடும் அபாய நிலை உள்ளது. இதன் விளைவாக கடந்த 2003 முதல் 2006 வரை மணிச் சத்தின் விலை 350 சதம் உயர்ந்துள்ளது.

30 வருடங்களுக்கு பிறகு மணிச் சத்தின் உற்பத்தி பெருமளவு குறைந்தால் மால்தூஸ் கூறியபடி பெரும் பஞ்சம் வரக்கூட வாய்ப்புள்ளது.

இதற்கு தீர்வாக முழுமையான இயற்கை விவசாயத்தை நோக்கி சென்றாலும் வளரும் மக்கள் தொகைக்கு உணவளிப்பது கடினம்.

இதற்கு தீர்வு தான் என்ன?

1. முடிந்த அளவு மணிச் சத்தை தற்போதிலிருந்தே சானம் மற்றும் இயற்கை எருக்கள் (பசுந்தாள் உரம்) மூலம் இடத் தொடங்க வேண்டும்.

2. தேவையற்ற மணிச் சத்து உரத்தை அளிப்பதை தவிர்க்க வேண்டும். பயிருக்கு தேவையான அளவு மணிச் சத்தை தேவையான நேரத்தில் தேவையான முறையில் மட்டும் கொடுக்க வேண்டும். இதன் மூலம் மணி சத்து வீணாவதை குறைப்பதுடன் பயிரின் உற்பத்தி செலவை குறைத்து லாபத்தையும் பெருக்கலாம். மண் பரிசோதனை செய்வதன் மூலம் பயிருக்கு தேவையான மணிச் சத்தின் சரியான விகிதத்தை எளிதில் அறிந்து கொள்ளலாம்.

3. மண்ணில் அதிக அளவு மணிச் சத்து உள்ளது. ஆனால் அவை தாவரங்களால் உபயோகபடுத்த முடியாத நிலை உள்ளது. ஒரு சில நுண்ணுயிர்கள் அமிலத்தை உற்பத்தி செய்து மணிச் சத்தை கரைத்து பயிர்களின் வேர்கள் உறிஞ்சும் நிலைக்கு மாற்றித் தருகின்றன. இந்த நுண்ணுயிர் தொழில்நுட்ப ஆராய்ச்சிகளை தீவிரமாக்க வேண்டும்.

4. மணிச் சத்தை குறைந்த அளவு பயன்படுத்தி அதிக விளைச்சளைத் தரும் ரகங்களை வேளாண் விஞ்ஞானிகள் கண்டுபிடிக்க வேண்டும்.

எண்னெய் வளம் குறைந்தால் கூட அதற்கு மாற்று சக்தியாக சூரிய ஒளி,காற்று, அணு சக்தி என்று பல உள்ளது. ஆனால் மணிச் சத்து உரத்துக்கு மாற்று மேல் சொன்ன முறைகள் தான் என்பதை மறந்து விட கூடாது.
வருங்கால சந்ததியரின் உணவு தேவை குறித்து இப்போதே சிந்திப்பது நல்லது.

ஆனால், இந்த பிரச்ச்னையின் பரிமாணம் இன்னும் உலகுக்கு பெரிய அளவில் தெரியவில்லை என்பது தான் சோகம்.

Posted in Labels: | 0 comments

பார்வதி ஓமணக்குட்டன் தமிழில் கதாநாயகி


முன்னாள் இந்திய அழகியும், உலக அழகிப் போட்டியில் இரண்டாவதாக வந்தவருமான பார்வதி ஓமணக்குட்டன் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். படத்தின் பெயர் 'உமா மகேஸ்வரம்'.

'சிவனும் சக்தியும் (மகேஸ்வரனும் - உமாவலும்) சேரும்போதுதான் உலகில் உயிர்கள் பிறக்கின்றன. அதே நி்லையில்தான் கலையும் பிறக்கிறது. ஏனெனில் உயிர்தான் கலை' என்ற கதைக் கருவுடன் உருவாகிறதாம் இந்த உமா மகேஸ்வரம்.

ஹீரோவாக டான்ஸர் மணி அறிமுகமாகிறார். நிதின் ராமகிருஷ்ணன் இயக்கும் இந்தப் படத்தின் துவக்க விழா இன்று சென்னையில் நடந்தது.

பிரபல இயக்குநர் கே விஸ்வநாத் நேரில் வந்து வாழ்த்தினார்.

ட்ரூசோல் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் பிரகாஷ்ராஜ் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்.

ஒளிப்பதிவு மது அம்பாட், இசை சந்தோஷ் நாயர், பிஆர்ஓ வெங்கட்.

கர்நாடக மாநிலத்தின் ஹம்பி போன்ற கலைச் சிறப்பு மிக்க இடங்களில் இந்தப் படத்தின் ஷூட்டிங் நடக்கிறது.

தோல்விக்குப்பின் வெற்றி

பாலாசூர்: அணு ஆயுதங்களை ஏந்திச் சென்று எதிரி இலக்குகளைத் தாக்கும் வல்லமை படைத்த அக்னி-2 ஏவுகணை இன்று வெற்றிகரமாக பரிசோதித்துப் பார்க்கப்பட்டது.
ஏற்கனவே இரண்டு முறை இந்த ஏவுகணை சோதனை தோல்வியடைந்த நிலையில் இன்று வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது.

இந்த ஏவுகணை 2000 கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து சென்று தாக்கக் கூடியதாகும். ஒரி்ஸ்ஸாவில் சண்டிபூர் அருகே உள்ள வீலர்ஸ் தீவு ஏவுதளத்தில் இந்த ஏவுகணை ஏவப்பட்டது.

இந்திய ராணுவத்துக்காக ஏற்கனவே அக்னி-1ஏவுகணை தயாரிக்கப்பட்டு வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டு, ராணுவத்தில் சேர்க்கப்பட்டுவிட்டது.

இது 700 கிலோ மீட்டர் தூரம் வரை பறந்து சென்று தாக்கும் திறன் கொண்டது.

இந் நிலையில் நடுத்தர ஏவுகணையான அக்னி-2, முழுக்க முழுக்க உள்நாட்டு தொழில்நுட்பத்துடனும் தனியார் பங்களிப்புடனும் தயாரிக்கப்பட்டுள்ளது.

2,000 கிலோ மீட்டர் தூரம் வரை பாய்ந்து சென்று தாக்கும் சக்தி படைத்த இந்த ஏவுகணை 1 டன் கொண்ட அணு ஆயுதத்தை ஏந்திச் செல்லக்கூடியதாகும்.

21 மீட்டர் நீளம் ஒரு மீட்டர் அகலம் கொண்ட இந்த ஏவுகணையின் எடை 17 டன். ஒரு டன் அணு ஆயுதத்தின் எடையை குறைத்தால் 2,000 கிலோ மீட்டருக்கும் அதிகமாகவே சென்று தாக்கும் சக்தியுடன் அக்னி-2 வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஏவுகணை இன்று வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது. இன்று காலை ஏவப்பட்ட இந்த ஏவுகணை திட்டமிட்ட இலக்கை வெற்றிகரமாகத் தாக்கியது.

ஏற்கனவே இரண்டு முறை இந்த ஏவுகணையின் சோதனை தோல்வியடைந்த நிலையில் இன்று சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.

Related Posts Plugin for WordPress, Blogger...