பள்ளிகளில் எல்லோருக்கும் கட்டாய செக்ஸ் கல்வி

மாணவ, மாணவிகளுக்கு எளிய முறையில் ஆங்கில பயிற்சி அளிக்க பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட டி.வி.டிக்களில் ஆபாச படங்கள் இருந்ததால் மாணவ-மாணவிகளும், ஆசிரியர்களும் அதிர்ச்சியடைந்தனர்.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை அடுத்த எஸ்.புதூர் ஒன்றியத்தில் அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தின் கீழ் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் நேற்று நடந்தது.

இந்த முகாமில் அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தின் சார்பாக மாணவ-மாணவிகளுக்கு எளிய முறையில் ஆங்கிலம் பயிற்சி கொடுப்பதற்காக டி.வி.டிகள் வழங்கப்பட்டன. இந்த டி.வி.டிக்களில் அனைவருக்கும் கல்வி இயக்க திட்டம் என்ற பெயரில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருந்தன.

இந்த டி.வி.டிக்ககளை எஸ்.புதூர் ஒன்றியத்தில் உள்ள பள்ளிக்கூடங்கள் அனைத்திலும் மாணவ -மாணவிகளுக்கு அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் டி.வியில் போட்டுக் காண்பித்தனர்.

அப்போது அதில் திடீரென மலையாள கவர்ச்சி நடிகை மற்றும் பல்வேறு துணை நடிகைகள் நடித்த ஆபாசப் படங்கள் ஓடின. இதைப் பார்த்தது ஆசிரியர்களும், மாணவ, மாணவர்களும் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து உடனடியாக அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட அதிகாரிகளுக்கு தகவல் தரப்பட்டது.

அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் உடனடியாக ஒவ்வொரு பள்ளிக்கூடமாக சென்று இந்த ஆபாச டி.வி.டிக்களை திரும்பப் பெற்றனர்.

ஆசிரியர்களுக்கு தரப்பட்ட டி.வி.டி. கேசட்டுகளில் மலையாள ஆபாசப் பட 'பிட்டுகள்' எப்படி பதிவானது என்பது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எல்லோருக்கும் கட்டாய பலியல(செக்ஸ்) கல்வி என்பது இதுதானா....

Posted in Labels: | 0 comments

தமிழனின் ரத்தத்தின் மீதுதான் இந்தியா - இலங்கை நல்லுறவு ஏற்பட வேண்டுமா ?

தமிழர்களின் ரத்தத்தின் மீதுதான் இந்தியா - இலங்கை நல்லுறவு ஏற்பட வேண்டுமா என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கை நாடாளுமன்றத்தில் இருந்து தமிழர் பிரதிநிதிகள் வெளியேற்றப்பட்ட பிறகு, அந்நாட்டின் அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டதால், அதனடிப்படையில் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண இயலாது.

இலங்கை தமிழர்களுக்கு சமவாய்ப்பு மறுக்கப்பட்டதுதான் இன்றைய அவல நிலைக்கு காரணம். அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் வகையில், அரசியல் தீர்வு காணப்படும் என்று இலங்கை அதிபர் ராஜபக்சே சொல்வது சிங்களர்கள் ஏற்றுக்கொள்ளாததை எதையும் தமிழர்களுக்கு தரமுடியாது என்பதையே காட்டுகிறது.

ஆயுதம் ஏந்திப் போராடியும் கிடைக்காத சமத்துவம் இப்போது அனாதைகளாக இருக்கும் தமிழர்களுக்கு எப்படி கிடைக்கப்போகிறது. குறைந்த பட்சம் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி அழிக்கும் பிரச்சனைக்குக் கூட தீர்வு காணப்படவில்லை. தமிழர்களின் படுகொலை மீதுதான் இந்தியா - இலங்கை நல்லுறவு ஏற்பட வேண்டுமா?", என்று கூறியுள்ளார்.

Posted in Labels: , | 0 comments

ராஜபக்சே வருகை எதிர்ப்பு போராட்டம்-வைகோ, நெடுமாறன், திருமா, சீமான் கைது

சென்னை: ராஜபக்சே இந்தியா வருவதை எதிர்த்து தலைநகர் சென்னை மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் பல்வேறு கட்சிகள், தமிழர் அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம், ரயில் மறியல், கொடும்பாவி எரிப்பு உள்ளிட்டவை நடத்தப்பட்டன. ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.


சென்னையில் நடந்த போராட்டத்தின்போது இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த பழ.நெடுமாறன், வைகோ, நல்லகண்ணு, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், இயக்குநர்கள் சீமான், டி.ராஜேந்தர் உள்ளிட்டோர் கைதாகினார்கள்.

ராஜபக்சே இன்று இந்தியா வருகிறார். 3 நாள் பயணமாக வரும் அவரைக் கண்டித்தும், அவரை வரவேற்கும் இந்திய அரசைக் கண்டித்தும் தமிழகத்தில் பல்வேறு கட்சிகள், தமிழர் அமைப்புகள் இன்று போராட்டத்தில் குதித்தன.

இலங்கை துணைத் தூதரகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயககம் அறிவித்திருந்தது. இந்தப் போராட்டத்திற்குப் போலீஸார் தடை விதித்திருந்தனர்.

இருப்பினும் தடையை மீறி பேரணியும், போராட்டமும் நடைபெறும் என வைகோ அறிவித்திருந்தார். அதன்படி இன்றுகாலை பத்து மணியளவில் மயிலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்கா அருகே ஆயிரக்ணக்கான தொண்டர்கள் திரண்டனர்.

வைகோ, பழ. நெடுமாறன், நல்லகண்ணு, நடராஜன், சீமான், விஜய டி.ராஜேந்தர் உள்ளிட்டோர் தொண்டர்களிடையே பேசினர். இனப்படுகொலை செய்த கொடுங்கோலன் ராஜபக்சே ஒழிக என்பது உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை முழக்கினர்.

பின்னர் அங்கிருந்து இலங்கை துணைத் தூதரகம் நோக்கி பேரணியாக கிளம்பினர். இதையடுத்து அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்திக் கைது செய்தனர்.

தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கில் கைது

இதேபோல, சென்னையில் இலங்கைத் தூதரகம் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற புதிய தமிழகம்கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

ஓசூரில் போராட்டத்தில் ஈடுபட்ட பெரும் திரளான மதிமுக, தமிழ் தேசிய பொதுவுடமைக் கட்சியினர் கைது கைது செய்யப்பட்டனர்.


திருச்சியில் ராஜபக்சேவின் கொடும்பாவியை சிவசேனா கட்சியினர் தீவைத்து கொளுத்தினர். இதையடுத்து 13 தொண்டர்களை போலீஸார் கைது செய்துஅப்புறப்படுத்தினர்.

திருப்பூரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 7 மதிமுகவினர் கைது செய்யப்பட்டனர்.

நாகர்கோவில் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் ராஜபக்சே கொடும்பாவி எரிக்கப்பட்டது. இதையடுத்து அக்கட்சித் தொண்டர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

கரூரில் பல்வேறு தமிழர் அமைப்புகளைச் சேர்ந்த 150 பேர் ராஜபக்சேவை கண்டித்து கருப்புக் கொடியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தி கைதாகினர்.

நாமக்கல்லில் போலீஸ் தடையைமீறி கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 50 மதிமுகவினர் கைது செய்யப்பட்டனர்.

கோவையில் ரயில் மறியல்

கோவையில் ரயில் மறியலில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கைதானார்கள்.

ரயில் நிலையம் முன்பு கருப்புக்கொடிகளுடன் திரண்ட அவர்கள் திடுதிடுவென ரயில் நிலையத்திற்குள் ஓடினர். இதை எதிர்பாராத போலீஸார் அவர்களை விரட்டிச் சென்று பிடித்துக் கைது செய்தனர்.

பல்வேறு கட்சிகள்சார்பில் சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டிருப்பதால் துணைத் தூதரகத்திற்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத் தலைநகரங்கள் அனைத்திலும் மதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தன. பல நூறு பேர் கைதானார்கள்.

43 தமிழ்ப் புலிகள் கைது

தேனியில் ராஜபக்சே வருகையை எதிர்த்து கருப்புக் கொடிகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழ்ப் புலிகள் அமைப்பினர் 43 பேர்கைது செய்யப்பட்டனர்.

சிவகங்கையில், கருப்புக்கொடிகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ குணசேகரன் உள்ளிட்ட 120 பேர் கைது செய்யப்பட்டனர்.

மயிலாடுதுறையில் ராஜபக்சேவின் கொடும்பாவி தீவைத்துக் கொளுத்தப்பட்டது. இதில் ஈடுபட்ட 20 பேரை போலீஸார் கைது செய்தனர்.

கைதாக மறுத்துச் சென்ற தமிழுணர்வாளர்கள்:

புதுக்கோட்டையில் நடந்த மறியல் போராட்டத்தின் போது ஒரு சுவாரஸ்யம் நடந்தது.

புதுக்கோட்டையில் நாம் தமிழர் இயக்கம், மதிமுக, சிபிஐ ஆகிய கட்சிகளூடன் மேலும் பல அமைப்பினர் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி இல்லையென்றாலும் தடையை மீறி பழைய பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது. இந்த ஆர்ப்பாட்ட பேரணி நீதிமன்றம் முன்பு முடிந்தது.

நீதிமன்றத்துக்குள் நுழைந்து கோஷமிட முயன்றனர். அதற்குள் போலீசார் வந்து தடுத்து விட்டனர். இதனால் நீதிமன்ற வாசலில் நின்றே கோஷமிட்டுவிட்டு மாலையில் பெரும் போராடம் நடத்துவோம் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

அவர்கள் போராட்டத்தை முடித்து விட்டு கலைந்து செல்லத் தொடங்கியபோது, அங்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்மாறன், ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் எல்லோரும் தயவு செய்து வாருங்கள். உங்களை கைது செய்ய வேண்டும் என்று அழைத்தார்.

அதற்கு தமிழுணர்வாளர்கள், ஆர்ப்பாட்டம் செய்த போது கைது செய்ய வேண்டியது தானே. இப்பொழுது வந்து கூப்பிட்டால் எப்படி என்று வர மறுத்தார்கள்.

இதையடுத்து தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள்...வாருங்கள்..என்று தமிழ்மாறன் கூப்பிட்டார். அதற்கு அவர்களோ, அப்படி என்றால் மாலையில் மீண்டும் ஆர்ப்பாட்டம் செய்யவிருக்கிறோம். அப்போது கைது செய்து கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு கிளம்பிச் சென்றனர்.

சென்னையில் திருமாவளவன் கைது

சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தலைமையில் ராஜபக்சேவை எதிர்த்துப் போராட்டம் நடந்தது. இதையடுத்து அனைவரையும் போலீஸார் கைது செய்தனர்.
Read: In English
கொடும்பாவிக்கு செருப்படி

புதுக்கோட்டை மன்னர் கல்லூரி வாசலில் நாம் தமிழர் இயக்கத்தின் சிவா, கமல் ஆகியோர் ராஜபக்சே உருவமொம்மையை எரித்தனர். பின்னர் செருப்பால் அடித்தனர்.அவர்களை போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரர் கைது செய்தார்.

Posted in Labels: | 0 comments

அதிபர் மனைவி கற்பம் யார் காரணம்?

கேப்டவுன்: தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஸூமாவின் 2வது மனைவி நோம்புமெலா டுலி கர்ப்பமாகியுள்ளார். ஆனால் அதற்கு டுலியின் பாடிகார்டுதான் காரணம் என பெரும் பரபரப்பும், சர்ச்சையும் வெடித்துள்ளது.

சம்பந்தப்பட்ட பாடிகார்டு தற்போது உயிருடன் இல்லை. சில நாட்களுக்கு முன்பு அவர் தற்கொலை செய்து கொண்டதால் பிரச்சினை பெரிதாகியுள்ளது.

தென் ஆப்பிரிக்க அதிபர் ஸூமாவுக்கு வயது 68 ஆகிறது. இவருக்கு மொத்தம் மூன்று மனைவிகள். முதல் மனைவி பெயர் சிசாகலே குமாலோ. 2வது மனைவிதான் டுலி. மூன்றாவது மனைவியின் பெயர் டொபோகா மடிபா. கடந்த ஆண்டுதான் மடிபாவை மணந்து கொண்டார் ஸூமா.

சமீபத்தில் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு விஜயம் செய்தார் ஸூமா. அவருடன் 2வது மனைவியான 35 வயதான டுலியும் உடன் சென்றிருந்தார். இந்தப் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய நிலையில்தான் டுலியின் கர்ப்பம் தொடர்பான சர்ச்சை வெடித்துள்ளது.

டுலிக்கு பாடிகார்டாக இருந்தவர் பின்டா தோமோ. இவர் மூலம்தான் டுலி கர்ப்பமடைந்துள்ளார் என்பதுதான் அந்த சர்ச்சை. இதனால் ஸூமா பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளாராம். இருப்பினும் இதுகுறித்து வெளியான செய்திகளை அவர் மறுத்துள்ளார். இது உலகக் கோப்பைப் போட்டிகள் நடக்கவுள்ள நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கும், தனக்கும் சங்கடத்தை ஏற்படுத்த நடக்கும் சதி என்று அவர் கூறியுள்ளார்.

ஸூமா மூலம் டுலிக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ளனர். தற்போது அவர் மூன்றாவது முறையாக கர்ப்பமாகியுள்ளார். ஸூமாவுக்கு தனது மூன்று மனைவியர் மூலம் 20 குழந்தைகள் உள்ளனர். தற்போது டுலிக்குப் பிறக்கப் போவது ஸூமாவின் 21வது குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

Posted in Labels: | 1 comments
Related Posts Plugin for WordPress, Blogger...