அதிகரிக்கும் (ஆ)பாச கொலைகள்!
Posted On Thursday, July 22, 2010 at at 9:33 AM by Twilight Senseநாடு முழுக்க தற்போது பரபர�பாக பேசபடும் விஷயம் கவுரவக் கொலைகள். `உயிர் ஒரு பொருட்டே அல்ல; ஜாதி மற்றும் குடும்ப கவுரவம்தான் முக்கியம்` என்பதை அந்த கொலைகள் தெள்ளத்தெளிவாக சுட்டிக் காட்டுகின்றன. வட இந்தியாவில் இவை அதிகம் நடக்கின்றன.
குறிபிட்ட ஒரு ஜாதியைச் சேர்ந்த ஒருவரது மகள், அதன் உட் பிரிவைச் சேர்ந்த இளைஞனை காதலித்து திருமணம் செய்து கொ�டால், மகள் என்றும் பாராமல் இருவரை�மே கொலை செய்து விடுகின்றனர். ஏன் என்றால் அதன் மரபுபடி அவர்கள் சகோதர சகோதரிகள் என்று அர்த்தமாம். அவர்களது திருமணத்தை ஆசீர்வதித்து வரவேற்றால் அவமானம், கவுரவக் குறைச்சல் ஏற்படுவதாக அவர்கள் கருதுகின்றனர். அதன்தொடர்ச்சியாக நட�பதுதான் கவுரவக் கொலைகள்.
தமிழ்நாட்டிலும் வேறுவிதமாக இந்த கவுரவக் கொலை கலாசாரம் இ�போது பரவி வருகிறது. இங்கே ஜாதி வெறிக்காக அல்லாமல் காதல், கள்ளக்காதல் பிரச்சினையால் ஏற்படும் அவமானத்தை துடை�பதாக கருதி கவுரவ கொலை செய்கிறார்கள் சில இடங்களில் இதன் பின்னணியாக சாதி�ம் இருக்கிறது.
தமிழகத்தில் கோவில்கள் நிறைந்த நகரத்தைச் சேர்ந்தவர்கள் அந்த தம்பதியர். இருவரும் ஒரே ஜாதிதான். பெற்றோர் பார்த்து முடித்த திருமணம்தான். அதுவரை, திருமண வாழ்க்கை நன்றாகவே சென்றது என்பதற்கு அடையாளமாக ஒன்றரை வயதில் ஒரு குழந்தை.
வர்த்தக நகரம் ஒன்றுக்கு வேலை செய்ய சென்ற இடத்தில் மனைவியானவள், தன்னுடன் வேலை பார்த்த இன்னொரு இளைஞனுடன் காதல் கொ�டு... கணவனை�ம், குழந்தையை�ம் மறந்து அவனுடன் சென்றுவிட்டாள். மனைவியை பழி வாங்க நினைத்த கணவன், `நம் குழந்தைக்காக - அதன் எதிர்காலத்துக்காக உன்னை மன்னித்துவிட்டேன்' என்று கூறி, அடுத்தவனுடன் இருந்த மனைவியை வீட்டிற்கு அழைத்து வந்தான். அன்று இரவே அவளைக் கொன்று, அதை தற்கொலையாக்க அவளை எரித்தும் விட்டான்.
- மனைவி அடுத்தவனுடன் சென்றுவிட்டாள்; அதனால் தனது கவுரவம் போய்விட்டது என்று கருதிய ஒரு கணவன் செய்த கொலை இது.
ASin drama. அசின் இனி பிசின் ?
Posted On Wednesday, July 21, 2010 at at 2:01 PM by Twilight Senseகோவை: தமிழ் இனத்தை அழித்து வரும் சிங்கள அரசின் விளம்பரதாரியாக மாறி விட்டார் நடிகை ஆசின். அவருக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டியது அவசியம் என தமிழின பாதுகாப்பு கூட்டமைப்பு மற்றும் மே 17 இயக்கம் ஆகியவை அறிவித்துள்ளன.
இதுதொடர்பாக இந்த அமைப்புகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் துண்டு பிரசுரங்களாக வெளியிடப்பட்டன.
அதில்,
தமிழின அழிப்பில் ஈடுபட்டுள்ள சிங்கள அரசின் விளம்பரதாரியாக ஆசின் மாறியுள்ளார்.
இலங்கையில் படப்பிடிப்புக்கு சென்றது மட்டுமல்லாமல் முள்வேலியில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களை ராஜபக்சே மனைவியுடன் சென்று சந்தித்து சிங்கள அரசை உயர்வானதாக சித்தரித்து உள்ளார்.
தமிழ் மக்களால் அங்கீகரிக்கப்பட்ட அசின் ராஜபக்சே அரசை பெருந்தன்மை கொண்டது போல் காட்ட முயற்சிப்பது கண்டிக்கத் தக்கது. அசினுக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டியது அவசியம்.
அவர் விளம்பரப்படுத்திய பொருட்களையெல்லாம் பயன்படுத்தாமல் புறக்கணிக்க வேண்டும். தமிழ் திரையுலகமும் அசினை ஒதுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.