தல கங்குலியின் வெற்றி பயணம்
Posted On Saturday, March 13, 2010 at at 1:24 PM by Twilight Sense
IPL opening match highlights
எழுச்சி எண்ணங்கள்
Posted On at at 10:38 AM by Muthuபோதை
Posted On Friday, March 12, 2010 at at 5:34 PM by Muthuபோதை என்றால் என்னவென்று
இன்றுதான் உணர்ந்தேன்..!
ஆம் !
பிரம்மனின் அதிசயத்தைக் கண்டேன்
அந்த பெண்ணுருவில்.
இன்று ஐ.பி.எல்., கோலாகல துவக்கம்
Posted On at at 3:05 PM by Muthu
இந்தியன் பிரிமியர் லீக் எனப்படும் 20 ஓவர் கிரிக்கெட் மீண்டும் இந்தியாவில் இன்று கோலாகலத்துடன் தொடங்குகிறது. சென்ற
வருடம் பாதுகாப்பு பிரச்னை காரணமாக தென்னாப்பிரிக்காவிற்கு மாற்றப்பட்டது.
மூன்றாவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடக்கிறது. இதன் துவக்க விழா, நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் இன்று மாலை 6.45 மணிக்கு ஆரம்பமாகிறது. முதலில் 8 அணிகளின் கேப்டன்கள் சேர்ந்து அம்பயர்கள் மற்றும் எதிரணி வீரர்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படும் என உறுதி மொழி எடுத்துக் கொள்கின்றனர். பின் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தியும், கிரிக்கெட் உணர்வுடன் நடந்து கொள்வோம் என்றும் கையெழுத்திடுகின்றனர்.
அடுத்து ஆடல், பாடல் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் ஆரம்பமாகின்றன. பிரிட்டனை சேர்ந்த முன்னணி பாடகர் அலி கேம்பல் தனது குழுவினருடன்fgvfg சேர்ந்து ஆடிப் பாடுகிறார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிஜோர்ன் அகேன் தனது "டேன்சிங் குயின்' பாடலை பாடி ரசிகர்களை மகிழ்விக்க உள்ளார். ஐ.பி.எல்., தொடர் மீண்டும் இந்தியாவில் நடப்பதை குறிக்கும் விதமாக 240 கலைஞர்கள் சேர்ந்து அசோக சக்கரத்தை போல அணிவகுக்க உள்ளனர். பாலிவுட் கவர்ச்சி நாயகி தீபிகா படுகோனே மற்றும் 40 கலைஞர்கள் சேர்ந்து இந்தி பாடல்களுக்கு ஏற்ப நடனம் ஆடி, ரசிகர்களை கிறங்கடிக்க உள்ளனர். இறுதியாக பாப் உலகின் ஜாம்பவானான அமெரிக்காவை சேர்ந்த லயோனல் ரிச்சி தனது பிரபலமான "டான்சிங் ஆன் த சீலிங்' என்ற பாடலை பாடுகிறார். "லேசர் ஷோ' மற்றும் வண்ணமயமான வாணவேடிக்கையுடன் துவக்க விழா நிறைவு பெறுகிறது.
கங்குலி-கில்கிறிஸ்ட் மோதல்
துவக்க விழா முடிந்ததும், இத்தொடரின் முதல் மோதலில் நடப்பு சாம்பியனான டெக்கான் சார்ஜர்ஸ் அணி, கடந்த முறை கடைசி இடம் பெற்ற கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணியை சந்திக்கிறது. இரு அணிகளிலும் முன்னணி வெளிநாட்டு வீரர்கள் இடம் பெற முடியாதது பின்னடைவான விஷயம்.
கங்குலி மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதால் கோல்கட்டா அணி உற்சாகமாக காணப்படுகிறது. ஆனாலும் பிரண்டன் மெக்கலம்(நியூசி.,), கிறிஸ் கெய்ல்(வெ.இ.,), டேவிட் ஹசி(ஆஸி.,), ஷேன் பாண்ட்(நியூசி.,) போன்றவர்கள் பங்கேற்க முடியாதது ஏமாற்றமே. இவர்கள் தற்போது, தங்களது நாட்டு அணிக்காக சர்வதேச போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர். அஜித் அகார்கர் காயத்தால் அவதிப்படுகிறார். இதனால் கோல்கட்டா அணி இலங்கையின் "சுழல் மாயாவி' மெண்டிசை தான் அதிகம் சார்ந்துள்ளது.
டெக்கான் அணியின் பலம் கேப்டன் கில்கிறிஸ்ட் தான். கிப்ஸ், வாஸ், சைமண்ட்ஸ் போன்ற அனுபவ வீரர்கள் உள்ளனர். ஆர்.பி.சிங், பிரக்யான் ஓஜா இருப்பதால் பந்துவீச்சும் வலுவாக இருக்கிறது.
கடந்த 2008ல் நடந்த முதலாவது தொடரில் கோல்கட்டா அணி, டெக்கான் அணியை இரு முறையும் வீழ்த்தியது. இதற்கு பதிலடியாக 2009ல் நடந்த இரண்டாவது தொடரில் டெக்கான் அணி இரு போட்டிகளிலும் கோல்கட்டாவை வீழ்த்தியது. இம்முறை முதல் வெற்றியை பெற இரு அணிகளுமே கடுமையாக போராடும்.
ஆன்லைனில் நேரடி ஒலிபரப்பு
youtube.com முதல்முறையாக IPL T20 கிரிக்கெட்டை ஆன்லைனில்நேரடி ஒலிபரப்புசெய்கிறது. IPL-க்கு சொந்தமான www.iplt20.comமும் நேரடி ஒலிபரப்பு செய்கிறது.
நேரடி ஒலிபரப்பு செய்யும் website பட்டியல்:
சிலை
Posted On at at 9:33 AM by Muthuபிஞ்சு நெஞ்சில் நஞ்சு ?
Posted On Thursday, March 11, 2010 at at 8:21 AM by Twilight Sense
பள்ளிகளில் நடைபெறும் ஆண்டு விழாக்களில் சினிமா பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் மாணவர்களுக்கு படிப்பில் நாட்டம் குறைவதாக பெற்றோர்கள் கவலை அடைகின்றனர். இதனை தடுக்க பள்ளிகளுக்கு, கல்வி துறை உரிய அறிவுரை வழங்க வேண்டும்.
பின்னர் மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பேச்சு, கவிதை, கட்டுரை, விளையாட்டு மற்றும் தனி நடிப்பு உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்படும். அதனையடுத்து மாணவ- மாணவிகள் பங்குபெறும் நாடகங்கள், கலை நிகழ்ச்சிகள் நடக்கும்.கடந்த காலங்களில் பள்ளி ஆண்டு விழா கலை நிகழ்ச்சிகளில் நாட்டின் வரலாற்றை நினைவு கூறும் நாடகங்கள், மாணவர்களின் அறிவை, சிந்தனைகளை அதிகரிக்க செய்யும் நிகழ்ச்சிகள், நாட்டின் முக்கிய தலைவர்கள் போல் வேடமணிந்து அவர்களது கருத்துகளை சக மாணவர்களுக்கு கூறுவது போன்ற மாணவ சமுதாய வளர்ச்சிக்கு உகந்த நிகழ்ச்சிகளே நடந்து வந்தது.
தொடக்கத்தில் சினிமா பாடல்களை மைக்குகள் பிடித்து பாடி வந்த மாணவர்கள் பின்னர் பாடலுக்கு டான்ஸ் ஆடத் தொடங்கினர்.இதன் உச்சகட்டமாக தற்போது தெருக்களில் நடக்கும் ரெக்கார்டுடான்ஸ் நிகழ்ச்சி போல் டேப் ரெக்கார்டரில் பாடல் ஒளிக்க அதற்கு மாணவ- மாணவிகள் பள்ளி மேடையில் நடனமாடி வருகின்றனர்.
இதற்கு தேர்வு செய்யும் பெரும்பாலான பாடல்கள் ஆபாச பாடல்களாகவும், அருவருக்கதக்க அங்க அசைவுகளுடன் கூடிய நடனங்களாகவே உள்ளன.இதுபோன்று டான்ஸ் ஆடும் மாணவர்களுக்கு பள்ளியிலே வாரக் கணக்கில் பயிற்சி அளிக்கப் படுகிறது. சில தனியார் பள்ளிகளில் சிறப்பு பயிற்சியாளர்களை அழைத்தும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இவ்வாறு சினிமா பாடலுக்கு ஆடும் மாணவர்களுக்கு பாடல் முடிந்ததும் சக மாணவர்கள், பெற்றோர் பாராட்டி கைதட்டும் போது சாதனையின் உச்சத்தை அடைவதாக கருதுகின்றனர். அதனால் அவர்கள் தொடர்ந்து சினிமா தொடர்பான நிகழ்ச்சிகளிலே தங்களது சிந்தனையை செலுத்துகின்றனர். இதனால் படிப்பதை விட்டு விட்டு "டிவி'யில் ஒளிபரப்பாகும் சினிமா நிகழ்ச்சிகளை பார்ப்பதிலேயே கவனம் செலுத்துகின்றனர்.ஆண்டு விழாக்களில் அறிவு சார்ந்த நிகழ்ச்சிகள் குறைந்து, சினிமா நிகழ்சிகளுக்கு பள்ளிகள் முக்கியத்துவம் கொடுப்பதால் மாணவர்களுக்கு சினிமா மோகம் அதிகரித்து படிப்பு பாதிப்பதாக பெற்றோர்கள் கவலையடைகின் றனர்.
பள்ளிகளில் சினிமா நிகழ்ச் சிகள் நடத்துவது "பிஞ்சு நெஞ்சில் நஞ்சை கலப்பது' போலகும் என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.மாணவர்களின் எதிர்காலம் கருதியும், பெற்றோர்களின் கருத்தை ஏற்கும் விதத்திலும் பள்ளி ஆண்டு விழாக்களில் சினிமா தொடர்பான நிகழ்ச்சிகளை தவிர்க்க பள்ளிகள் தாமாக முன் வர வேண்டும். அதற்கு கல்வித்துறை அதிகாரிகள், பள்ளிகளுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.
IPL-2010 Schedule
Posted On Wednesday, March 10, 2010 at at 4:34 PM by Muthuஜீவன் முக்தி
Posted On at at 9:46 AM by Muthuநம்ம குருஜி எழுதிய புத்தகத்தோட தலைப்புதாங்க இது.
சில ஆண்டுகளுக்கு முன் நித்யானந்தர் எழுதிய 'ஜீவன் முக்தி' என்ற புத்தக வெளியீடு நடந்தது. ஏதோ எல்ஐசி பாலிசி மாதிரி இருக்கே என்று சுலபமாக நினைத்துவிட வேண்டாம். இந்தப் புத்தகத்தின் விலை ரூ 500க்கும் மேல்!
ரொம்ப கிராண்டாக இந்த விழாவை ஏற்பாடு செய்திருந்தனர் நித்யானந்தாவின் தியான பீடத்தினர். இந்த விழாவில் ஆன்மீக உலகைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கவில்லை. ஆனால் சினிமாக்காரர்கள்தான் திரளாகக் கலந்து கொண்டனர்.
புத்தகத்தை வெளியிட்டதே நடிகர் சங்கத் தலைவர் சரத் குமார்தான்.
இவரைத் தவிர எஸ்ஏ சந்திரசேகரன், நடிகர்கள் விவேக், பார்த்திபன், இயக்குநர் பாலுமகேந்திரா, நடிகை மனோரமா என பெரும் திரளானோர் கலந்து கொண்டனர்.
சாம்பிளுக்கு சிலரது பேச்சுகள்:
எஸ்ஏ சந்திரசசேகரன்...
"இந்துக்களுக்கு கீதை, முஸ்லிம்களுக்கு குரான், கிறிஸ்தவர்களுக்கு பைபிள்... ஆனால் மனித குலத்துக்கே புனித நூல் இந்த ஜீவன் முக்தி!"
விவேக்...
"30 வயதில் கலைஞர் பராசக்தி படத்துக்கு வசனம் எழுதினார். ஆனால் இங்கே பராசக்தியே (நித்யானந்தா!!) 30 புத்தகங்களை எழுதியிருக்கிறது...
கதவைத் திறந்த வச்சா திருடன் வந்துடறான், ஜன்னலைத் திறந்து வச்சா பீரோ புல்லிங்... ஆனால் மனசைத் திறடா மகிழ்ச்சி பொங்கும்னு சொன்னாரே என் தலைவன் (நித்யானந்தன்)... அதற்கு இணையான எளிய தத்துவத்தை யாராவது சொல்ல முடியுமா... வாழ்க்கையின் தத்துவங்களை டிசைன் டிசைனா சொல்லியிருக்கும் அரிய பொக்கிஷம் இந்தப் புத்தகம்...."
பார்த்திபன்...
"மனித குலத்துக்கே ஒளிதரும் அரிய ஆன்மீகப் பேரொளி... இந்தப் புத்தகத்தில் இல்லாத விஷயங்களே இல்லை... இந்த ஒரு புத்தகம் வாங்கினால் போதும், ஒரு லைப்ரரியே நம் வீட்டுக்குள் வந்த மாதிரி..."
சரத்குமார்...
"மனிதகுலத்தின் மிகச் சிறந்த குரு நித்யானந்தர்..."
சுப்ரீம் கோர்ட் குழு தேவையற்றது - தமிழக அரசு மனு
Posted On at at 9:32 AM by Muthuடெல்லி: முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தனது கடமையைத் தட்டிக் கழித்துள்ளது. இதுதொடர்பாக ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது தேவையற்றது. எனவே இதை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக கேரள அரசு இயற்றிய சட்டம் செல்லுமா? முல்லைப்பெரியாறு அணை வலுவாக உள்ளதா? என்பன உள்பட பல அம்சங்கள் குறித்து ஆய்வு செய்ய, சுப்ரீம் கோர்ட்டின் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி ஆனந்த் தலைமையில் 5 பேர் கொண்ட உயர்மட்ட குழுவை அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன பெஞ்ச் உத்தரவிட்டது.
ஆனால் இதில் பங்கேற்க வேண்டிய அவசியமில்லை என்று திமுக சமீபத்தில் தீர்மானம் போட்டது. இதையடுத்து தமிழக அமைச்சரவைக் கூட்டத்திலும் இதே முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
இதை நிரூபிக்கும் வகையில், நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில்,
முல்லைப்பெரியாறு அணை வலுவாக உள்ளது. புதிய அணை கட்டத் தேவையில்லை. பழுது பார்த்தால் போதும். அணையின் நீர்மட்டத்தை உயர்த்தலாம் என்றும், அவற்றுக்கு தேவையான ஏராளமான ஆதாரங்களையும் தமிழக அரசு ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் வழங்கி உள்ளது.
ஏற்கனவே தாக்கல் செய்துள்ள இந்த ஆதாரங்களின் அடிப்படையிலேயே சுப்ரீம் கோர்ட்டு வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கலாம். ஆனால் சுப்ரீம் கோர்ட் தனது கடமையை தட்டி கழித்து விட்டு, புதிய நிபுணர் குழுவை நியமித்து உள்ளது.
முல்லைப்பெரியாறு அணை பிரச்சினை தொடர்பான பொறுப்பையும், அதிகாரத்தையும் சுப்ரீம் கோர்ட் தனி குழுவிடம் ஒப்படைத்தது ஏற்றுக் கொள்ள முடியாதது. முல்லைப் பெரியாறு பிரச்சினை குறித்து ஆய்வு செய்ய மீண்டும் ஒரு குழு தேவை இல்லை.
ஆகவே சுப்ரீம் கோர்ட்டின் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையிலான இந்த நிபுணர் குழு தேவையற்றது. இதை ஏற்றுக் கொள்ள முடியாது. அந்த குழுவை சுப்ரீம் கோர்ட் வாபஸ் பெற்று, வழக்கை சுப்ரீம் கோர்ட்டே தொடர்ந்து விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவரெஸ்டை தொடும் தமிழர்
Posted On at at 9:25 AM by Muthuஎவரெஸ்ட் சிகரத்தின் உச்சியைத் தொடும் முயற்சியில் ஒரு தமிழர் இறங்கவுள்ளார்.
அவரது பெயர் சந்தோஷ் குமார். வயது 27. இவரது தந்தை ரியாத்தில் வேலை பார்த்து வந்தார். பின்னர் துபாய்க்கு இடம் மாறினார். இந்த மாதத்தில் தனது எவரெஸ்ட் சாதனைப் பயணத்தைத் தொடங்குகிறார் சந்தோஷ் குமார்.
65 நாட்களில் சிகரத்தின் உச்சியை அடைய திட்டமிட்டுள்ளார். சிறார்கள் மீதான பாலியல் கொடுமைகளுக்கு எதிராக இந்த பயணத்தை அர்ப்பணிப்பதாக அவர் கூறியுள்ளார். மேலும் சிறார் பாலியல் கொடுமைகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு உதவ நிதி சேகரிக்கவும் திட்டமிட்டுள்ளார்.
எவரெஸ்ட் சிகரத்தை ஏறும் முயற்சிக்கு 60 ஆயிரம் டாலர் வரை செலவாகும் என்று கூறுகிறார் சந்தோஷ் குமார். இதற்காக நிதியுதவியையும் அவர் எதிர்பார்த்துள்ளார்.
நித்யானந்தாவும் ரஞ்சிதாவும் திருமணம் செய்ய திட்டம்
Posted On Tuesday, March 9, 2010 at at 10:13 AM by Muthu"நித்யானந்தா தனது பிரம்மச்சரியத்தைத் துறந்து, ரஞ்சிதாவைத் திருமணம் செய்து கொள்ளச் சம்மதித்து விட்டார். ஆனால் அப்படி திருமணம் செய்தால் பல ஆயிரம் கோடி சொத்துக்களைக் காப்பாற்ற முடியாது என்பதால் கடைசி நேரத்தில் மறுத்தார். அதன் விளைவுதான் ரஞ்சிதாவும் லெனின் கருப்பனும் திட்டமிட்டு சாமியாரைக் கவிழ்த்தனர்", என்று புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஞ்சிதா ஆரம்பத்தில் நடிகை ராகசுதா மற்றும் ஒரு சினிமா தயாரிப்பாளர் மூலம்தான் சாமியாருக்கு அறிமுகமானாராம். அந்த சமயங்களில் எப்போதாவது ஒருமுறை பெங்களூர் போய் வருவாராம்.
ஆனால் நித்யானந்தாவுக்கு தன்மேல் ஒரு ஈர்ப்பு இருப்பது புரிந்ததும் அங்கே தங்க ஆரம்பித்தாராம். அவரது அந்தரங்க அறைக்குச் சென்று பணிவிடை செய்யும் அளவுக்கு இது வளர்ந்தது. பின்னர் சாமியாரின் பிரம்மச்சரியத்தை பனிக்கட்டியாய் உருக வைத்துவிட்டதாம் ரஞ்சிதாவின் வனப்பு.
சாமியாரை விட ரஞ்சிதா மூன்று வயது மூத்தவராம். ரஞ்சிதாவின் கட்டழகில் கட்டுண்ட சாமியார், அவர் சொன்னதையெல்லாம் கேட்க ஆரம்பித்தாராம். லெனின் கருப்பனுக்கு இந்த விவகாரம் முழுமையாகத் தெரியும் என்கிறார்கள் பெங்களூர் ஆசிரமத்தைச் சேர்ந்தவர்கள்.
இதனால் ஆரம்பத்திலிருந்தே ரஞ்சிதாவை 'அண்ணி' என்றே அழைக்க ஆரம்பித்தாராம் லெனின். இதனை நித்யானந்தரின் செய்லாளர் உள்ளிட்ட ஆசிரம நிர்வாகிகள் வெளிப்படையாகவே இப்போது சொல்கின்றனர்.
ஒரு கட்டத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தபோது, தனது சீடர்கள் மற்றும் மத அமைப்புகளை நினைத்து பயந்தாராம் நித்யானந்தம். அப்போதுதான், பிரம்மச்சர்யத்தைத் துறந்து இல்லற வாழ்க்கையை அனுபவிப்பதாக வெளிப்படையாக அறிவித்த குக்கே சுப்பிரமணிய மடத்தின் சாமியாரை உதாரணமாகச் சொல்லி நித்யானந்தா மனதை மாற்றியுள்ளார் ரஞ்சிதா.
இருவரும் திருமணத்துக்கு தயாரான போது, அதற்கு மடத்தின் முக்கிய நிர்வாகிகள் எதிர்ப்பு தெர்வித்ததோடு, ஆசிரம சொத்துக்களை முடக்கிவிடுவோம் என்றும் எச்சரிக்க, மிரண்டு போன நித்யானந்தா, திருமணத்துக்கு முரண்டு பிடித்துள்ளார்.
அதே நேரம் வேறு சில பெண்களையும் ஆசிரமத்துக்கு வரவழைத்து உல்லாசம் அனுபிவித்துள்ளார். இதை ரஞ்சிதா பார்த்து அதிர்ச்சியடைந்து லெனின் கருப்பனிடம் கூறினாராம். அப்போது உருவானதுதான் இந்த வீடியோ திட்டம் என்கிறார்கள் ஆசிரமத்தைச் சேர்ந்த சிலர். இந்த செக்ஸ் வீடியோ எடுக்கப்பட்டதில் ரஞ்சிதாவின் பங்கை லெனினும் மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து பெங்களூர் நித்யானந்தா மடத்தில் உள்ள நித்யானந்தாவின் அந்தரங்க செயலாளர் சேவானந்தா இப்படிக் கூறியுள்ளார்:
நாங்கள் ஆரம்பத்திலேயே ரஞ்சிதாவையும் லெனினையும் சந்தேகப்பட்டோம். இருவரும்தான் மிக நெருக்கமாக இருப்பார்கள். இருவரும் சேர்ந்து போட்ட சதித்திட்டம்தான் இது என்பது இப்போது தெரிகிறது. இதற்கு மேல் எதுவும் கேட்காதீர்கள்!" என்றார்.
LOVE marriage
Posted On Sunday, March 7, 2010 at at 11:34 PM by Twilight Senseமுதல் நேசம்
Posted On at at 5:06 PM by Chennai Rajanஎன்னை நேசித்த முதல் பெண்ணும்
நான் நேசித்த முதல் பெண்ணும்
எனது அன்புத் தாயே .
ஸ்ரீபெரும்புதூரில் மணை விலை குறையுமா?
Posted On at at 10:10 AM by Twilight Senseசென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் அமைக்க இருந்த கிரீன்பீல்டு ஏர்போர்ட் திட்டம் முற்றிலுமாக கைவிடப்பட்டுவிட்டது.