இஸ்லாமிய நண்பர்க்களுக்கு.
Posted On Friday, August 13, 2010 at at 12:53 AM by Twilight Sense10 * 16 | குழந்தை திருமணம்?
Posted On Thursday, August 12, 2010 at at 10:58 AM by Twilight Senseடெல்லி: 16 வயது பெண்ணும் 18 வயது ஆணும் திருமணம் செய்து கொள்வதில் எந்தத் தவறும் இல்லை என்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
18 வயது கணவனும் 16 வயது மனைவியும் இணைந்து தாக்கல் செய்த வழக்கில் இந்தத் தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியது.
காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களை அவர்களது பெற்றோர் காலி செய்ய முயன்றதையடுத்து ஊரைவிட்டு ஓடினர்.
ஆனாலும் இவர்களை தேடிக் கண்டுபிடித்த பெண்ணின் பெற்றோர் இருவரையும் பிரித்தனர். மகளை தங்களுடன் அழைத்துச் சென்றுவிட்டனர்.
அவர்கள் தந்த புகாரின் அடிப்படையில் கணவர் மீது போலீசார் ஆள் கடத்தல், கற்பழிப்பு வழக்குகளைப் பதிவு செய்து கைது செய்தனர்.
இதை எதிர்த்தும் தங்களுக்கு பாதுகாப்பு கோரியும், தங்கள் பெற்றோர் மீது நடவடிக்கை எடு்க்கக் கோரியும் இந்தத் தம்பதி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இதை விசாரித்த நீதிமன்றம், இந்தத் திருமணம் செல்லும் என்று தீர்ப்பளித்துள்ளது. நீதிபதி அகமத், நீதிபதி ஜெயின் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் வழங்கிய தீர்ப்பில்,
குழந்தைத் திருமணங்களைத் தடுக்கவே திருமண வயது சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், அதையும் மீறி பெற்றோரே நடத்தி வைக்கும் குழந்தைத் திருமணங்கள் நடந்து கொண்டு தான் உள்ளன.
பெற்றோரின் நெருக்குதல்களால் நடக்கும் சிறு வயது திருமணங்களை முழுமையாகத் தடுக்க முடியவில்லை.
இந்த நிலையில் 18 வயது ஆணும் 16 வயது பெண்ணும் திருமணம் செய்து கொண்டதை செல்லாது என்று அறிவிக்க முடியாது. அவர்களில் யாராவது ஒருவர் இந்தத் திருமணத்தை எதிர்த்தால் தான் அது செல்லாதே தவிர, அவர்கள் விரும்பி செய்து கொண்ட இந்தத் திருமணம் செல்லும்.
வயதை காரணம் காட்டி யாருடைய திருமணத்தையும் அடுத்த நபர் தடுக்க முடியாது. மணம் முடிப்பவர்கள் மட்டுமே இந்த விஷயத்தில் முடிவெடுக்கலாம்.
நாடு முழுவதும் கெளரவக் கொலைகளும் வரதட்சணைக் கொலைகளும் நடந்து கொண்டிருக்கின்றன. மேஜரான பெண்ணுக்கோ ஆணுக்கோ நாம் பார்த்து செய்து வைக்கும் திருமணத்திலேயே பலவித சிக்கல்கள் வருகின்றன. அந்தப் பெண் கண்ணைக் கசக்கிக் கொண்டு வீட்டுக்குத் திரும்பும் காட்சிகள் எண்ணில் அடங்காதவை.
இந் நிலையில் பெற்றோர் கட்டாயப்படுத்தி நடத்தி வைக்கும் குழந்தைத் திருமணங்களையும் மேஜர் ஆகாத இளம் வயதினர் தாங்களே விரும்பி செய்து கொள்ளும் திருமணங்களையும் நாம் வித்தியாசப்படுத்தி பார்ப்பது தான் சரி. பெற்றோர் செய்து வைக்கும் கட்டாய குழந்தைத் திருமணம் மட்டும் சரி, அதே நேரத்தில் இளம் வயதினர் தாங்களே விரும்பி செய்து கொள்ளும் திருமணம் தவறு என்று எப்படி சொல்ல முடியும்?. இதனால் திருமண வயது சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து அதை தெளிவானதாக்குவது தான் சரியாக இருக்க முடியும். அதை ஆட்சியாளர்கள் செய்ய வேண்டும்.
இந்த சட்டம் எவ்வளவு சீக்கிரம் வருகிறதோ அவ்வளவு நல்லது. இல்லாவிட்டால் நாடு முழுவதும் நீதிமன்றங்களில் உடைந்த இதயங்களின் வழக்குகள், கண்ணீர் விடும் மகள், உயிருக்கு அஞ்சி ஓடும் மணமகன், மனம உடைந்து போன பெற்றோர்களின் வழக்குகள் குவிந்து வருவதை தவிர்க்கம முடியாது. காதல் ஒருவரின் வாழ்க்கையையோ அல்லது இரு குடும்பத்தினரின் வாழ்க்கையையோ கிரிமினல் குற்றவாளிகளாக்கிவிடக் கூடாது என்றனர் நீதிபதிகள்.
kurunji | குறுஞ்சி.
Posted On Monday, August 9, 2010 at at 11:50 AM by Twilight Senseகுறிஞ்சி என்றதும் மலையும் மலை சார்ந்த இடமும் என்று பாடப் புத்தகத்தின் இரண்டு மதிப்பெண் பதில் ஒன்று நினைவுக்கு வரும். மெத்த சரி. ஆனால் ஒரு மாவட்டத்துக்கே நீலகிரி என்று பெயர்
ஏற்பட இந்த குறிஞ்சி மலர்கள்தான் காரணம். நீல நிறத்தில்
பூக்கும் இந்தப் பூக்கள் அவ்வளவு வசீகரமானவை அல்ல.
நறுமணம் மிக்கவையும்கூட இல்லை. ஆனால் பூத்தால் ஒரு மலையையே நீல வண்ணமாகத் தோன்றச் செய்யும் அளவுக்குப்
பிரம்மாண்டமாகப் பூப்பவை. அதுதான் குறிஞ்சிப் பூவின் சிறப்பு.
இலக்கியத்தில் 5 வகை நிலங்கள் இருப்பதாக படிக்கிறோம். அவற்றில் முதன்மையானது குறிஞ்சி நிலம். இந்நிலம் முதன்மையானது மட்டுமல்லாமல் பல்வேறு சிறப்புகளையும் கொண்டுள்ளது.
இந்நிலத்தைக் குறித்த பெருமைகளை ஆரிய அரசனான பிரகதத்தனுக்குச் சொல்லிக் கொடுக்கும் வகையில் கபிலர் குறிஞ்சிப்பாட்டையே பாடினார் என்பது வரலாறு. நவீன தொழில் நுட்ப அறிவியல் வளர்வதற்கு முன்னரே இம்மண்ணில் மலரும், மலர்களைக் குறித்த பரந்த அறிவும் தமிழர்களுக்கு இருந்துள்ளது.
தமிழகத்தின் மலைப்பகுதிகளில் பரவியுள்ள குறிஞ்சிப் பூக்கள் தமிழர்களின் நிலமான குறிஞ்சி நிலத்தின் அருங்கொடையாக அமைந்தது எனப் புலவர்கள் பலர் பாராட்டுகின்றனர். சோலைக்காடுகளில் படர்ந்துள்ள குறிஞ்சி செடிகளில் தலையில் நீலநிறப் பூக்கள் மணியைக் கவிழ்த்தாற்போல காட்சியளிப்பதாக கவிஞர்களும் தங்களது கருத்துகளைப் பதிவு செய்கின்றனர்.
‘‘12 வருடங்களுக்கு ஒருமுறை பூக்கும் மலரான குறிஞ்சியைக் குறித்து இளங்கோவடிகளும் வேட்டுவ வரியில் பாடியுள்ளார். மதுரையை எரித்த பின்னர் கண்ணகி மலைப்பாங்கான பகுதிக்குச் செல்லும்போது, கோவலன் புஷ்பக விமானத்தில் தேவலோகம் சென்றதை குறிஞ்சி மலர்கள் பூத்திருந்த மலைப் பகுதியிலிருந்து கண்ணகி பார்த்ததாக இலக்கியம் கூறுகிறது. இதைத்தவிர சங்க இலக்கியங்களில் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என அனைத்து இலக்கியங்களிலும் குறிஞ்சிக்கு தனி இடமுண்டு'' என உதகை அரசு கலைக் கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் வி.ஆத்மஜோதி தெரிவிக்கிறார்.
‘‘உலகில் 250 வகைகளிலான குறிஞ்சி வகைகள் உள்ளன. இவற்றில் 59 வகையினங்கள் தென்னிந்தியாவிலுள்ளன. மலை மாவட்டமான நீலகிரியில் மட்டும் 31 வகைகள் உள்ளன. இதுவரை ஸ்டிரொபிலான்தஸ் என்ற தாவர குடும்பத்தின் வகையிலிருந்த குறிஞ்சி செடிகளின் தாவர இனம் தற்போது மாற்றப்பட்டுள்ளது.
ஸ்டிரொபிலான்தஸ் என்ற இனத்திலிருந்த பிளபோபில்லம் குந்தியானஸ் என்ற இனத்துக்கு மாற்றப்பட்டு விட்டது'' என உதகை தோட்டக்கலை தாவரவியல் ஆராய்ச்சியாளர் டாக்டர் ராம்சுந்தர் தெரிவிக்கிறார். தற்போது நீலகிரி மாவட்டத்தில் பூத்துள்ள குறிஞ்சி மலர்கள் பிளேகாலஸ் செசிலிஸ் என்ற இனத்தைச் சேர்ந்தவை எனவும் அவர் தெரிவித்தார்.
குறிஞ்சி மலர்கள் பொதுவாக 12 ஆண்டுகளுக்கு ஒரு முறையே பூக்கும் என்பது யாவரும் அறிந்ததாகும். ஆனால், எல்லா பூக்களும் அப்படியல்ல. சிலவகை செடிகளில் ஆண்டுக்கு ஒரு முறையாவது பூக்கும் தன்மை கொண்டவையாகும். இது பருவநிலை மாறுபாடோ அல்லது உலக வெப்பமயமாதலின் விளைவுகளோ அல்ல. இயற்கையிலேயே குறிஞ்சி மலர்களில் உள்ள பல்வேறு ரகங்களில் வித்தியாசமான காலக்கணக்கில் பூப்பவையாகும். இமயமலைப் பகுதிகளில் கிழக்குப் பகுதிகளில் ஆண்டுக்கொரு முறையும், மேற்குப் பகுதிகளில் குறித்த கால இடைவெளிகளில் மட்டுமே குறிஞ்சிப் பூக்கள் காணப்படும். இதற்கிடையே இவை ஏன் 12 வருடத்திற்கு ஒருமுறை மட்டும் பூக்கிறது என்பதைக் குறித்த ஆராய்ச்சிகளும் தற்போது நடைபெற்று
வருகின்றன.
ஆதிவாசி இன மக்களில் தங்களது வயதைக் கணக்கிட அவர் தனது வாழ்நாளில் எத்தனை முறை குறிஞ்சி மலர் பூத்துள்ளதை பார்த்துள்ளார் என்பதை அடிப்படையாக வைத்தே அவர்களது வயது கணக்கிடப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
‘‘தமிழனின் நாகரிகமே மலர்களில் தோன்றி மலர்களில் முடிவடைவதாகும். பிறப்பிலிருந்து இறப்பு வரை தமிழர்கள் தங்கள் நாகரிகத்தின் சின்னமாக மலர்களையே பயன்படுத்துகின்றனர்.
அதைத்தவிர பெண்களும் மலர்களுக்கு இணையாகவே ஒப்பிடப்படுகின்றனர். அதனால் பழந்தமிழர் வாழ்வில் மட்டுமின்றி இக்காலத் தமிழர் வாழ்வும் மலர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. அதில் குறிஞ்சி மலர்களுக்கான முக்கியத்துவம் குறிப்பிடத்தக்கது'' எனத் தோட்டக்கலை உதவி இயக்குநர் பிரகாசம் குறிப்பிடுகிறார்.
இத்தகைய குறிஞ்சி மலர்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி இனத்தை சேர்ந்த அனைத்து மலர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். இவற்றிலிருந்து பெறப்படும் தேன் அதிகளவில் மருத்துவ குணங்களை கொண்டவை என்பதால் குறிஞ்சித் தேன் என்ற சொல்லுக்கு மருத்துவ உலகில் அதிக மரியாதை உள்ளது. உலகம் முழுதும் குறிஞ்சி மலர்கள் பரவிக் கிடந்தாலும் ஆசியாவில்தான் இவற்றின் ஆதிக்கம் மிக அதிகமாகும்.
நீலகிரி மாவட்டத்திலுள்ள 31 வகையான குறிஞ்சி இனத்தில் நீலகிரியான்தஸ் என்ற ஒரு இனம் அழிந்துவரும் தாவரங்களின் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளது. இத்தகைய சூழலில்தான் கூடலூரில் ஜீன்பூல் பகுதியில் தற்போது பிளேகாலஸ் செசல்ஸ் என்ற வகையிலான குறிஞ்சி மலர்கள் பூத்துள்ளன.
குறிஞ்சி என்ற சொல்லை கேள்விப்பட்டிருக்கலாம். குறிஞ்சி மலர்களைக் சில இடங்களில் பார்த்துமிருக்கலாம். ஆனால் நீல மழை பொழிந்தாற்போல பரந்த வெளியில் நீல வண்ணத்தில் காட்சியளிக்கும் நீலக்குறிஞ்சி மலர்களை நேரில் கண்டால் மட்டுமே குறிஞ்சி மலருக்கான முக்கியத்துவம் நமக்கு தெரிவதோடு, எதிர்கால சந்ததியினருக்கு அதன் பெருமைகளும் தெரியவரும்.
eesal world record | ஈசல் உலக சாதனை முயற்சி.
Posted On Sunday, August 8, 2010 at at 8:30 PM by Twilight Senseஈசல் படத்துக்காகத்தான் இந்த கின்னஸ் சாதனை முயற்சியாம்.
ஈசல் என்ற பெயரில் ஒரு படம் உருவாகி வருகிறது. இது ஒரு ஆவிக்கதை. ஆனால் பயமுறுத்தும் ஆவிக் கதையோ அல்லது மாயாஜாலங்கள் நிறைந்த மாந்த்ரீகக் கதையோ அல்ல. சற்று வித்தியாசமாக எடுத்திருக்கிறார்களாம்.
இப்படத்தில் நாட்டுப் பற்றை வெளிப்படுத்தும் வகையில் ஒரு பாடல் இடம் பெறுகிறது. அந்தப் பாட்டை 24 பேர் சேர்ந்து, 24 மொழிகளில் பாடியுள்ளனராம்.
நடிகர் பார்த்திபன் மலையாள வரிகளையும், நடிகர் சுரேஷ் கோபி தமிழ் வரிகளையும் பாடியுள்ளனர். இதுபோல ஒவ்வொரு மொழிக்காரரும், இன்னொரு மொழியில் பாடியுள்ளனர்.
இப்படி ஒரு பாடல் இதுவரை எங்குமே பாடப்படவில்லையாம். எனவே இது கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெறும் என படத்தின் இயக்குநர் விஜய் ஆதித்யா கூறுகிறார்.
இப்படத்தில் ஹீரோவாக மிதுனும், ஹீரோயினாக சுனு லட்சுமியும் நடிக்கிறார்கள்.
சாதனையில் வெற்றி அடைய வாழ்த்துக்கள்.
வேற்றுமையில் ஒற்றுமை, இதுவே உதாரணம்.
infy weds tvs?
Posted On at at 8:25 PM by Twilight Senseபெங்களூர்: டிவிஎஸ் குழுமத் தலைவர் வேணு சீனிவாசனின் ஒரே மகளான லட்சுமி வேணுவை மணக்கவிருக்கிறார், இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மகன் ரோஹன்.
கார்னல் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்று, மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணியாற்றி, தற்போது ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பிஎச்டி செய்து வருகிறார் ரோஹன். முன்பு இவர் பெங்களூர் பிஷப் காட்டன் ஆடவர் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார்.
டிவிஎஸ் நிறுவனங்களின் தலைவர் வேணு சீனிவாசனின் ஒரே மகளான லட்சுமி, யேல் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர். பின்னர் வார்விக் பல்கலைக்கழகத்தில் தயாரிப்பு நிர்வாகம் தொடர்பாக பிஎச்டி ஆய்வுப் படிப்பை முடித்தவர். சென்னையில் உள்ள சிஷ்யா பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தவர்.
டிவிஎஸ் குழுமத்தின் சுந்தரம் கிளேட்டன் (ஆட்டோ உதிரி பாக தயாரிப்புப் பிரிவு) மற்றும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனங்களின் உத்திகளை வடிவமைக்கும் பொறுப்பை ஏற்று செயல்படுத்தியவர் லட்சுமி.
இந்த திருமண பந்தம் குறித்து நாராயணமூர்த்தி கூறுகையில், லட்சுமி அருமையான பெண். இந்த திருமணம் எங்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
திருமணத்தை எப்போது நடத்துவது என்பதை ரோஹனும், லட்சுமியும் பேசி முடிவெடுக்கட்டும் என விட்டு விட்டேன். இது அவர்களது பொறுப்பு. அவர்கள் முதிர்ச்சியானவர்கள், எனவே அவர்களது முடிவுக்கே விட்டு விட்டேன் என்றார் நாராயணமூர்த்தி.
தற்போது ரோஹன் சென்னைக்கு வந்துள்ளார். லட்சுமி குடும்பத்தினரை பார்ப்பதற்காக அவர் சென்னையில் முகாமிட்டுள்ளார்.