சிம்மாசனம்

மீண்டும் அமர முடியாத சிம்மாசனம்
தாயின் கருவறை.......!

Posted in Labels: | 0 comments

நட்பின் பெருமை

காதல் என்றால் எதையும் தருவேன் !!
நட்பு என்றால் காதலையே தருவேன்.

Posted in Labels: | 1 comments

வாக்காளர்கள் எச்சரிக்கை

பென்னாகரம் : பென்னாகரம் தொகுதியில், வாக்காளர்கள் காலில் விழுந்து வேட்பாளர்கள், ஓட்டு சேகரிக்கின்றனர். பென்னாகரம் இடைத்தேர்தலில் ஏற்பட்டுள்ள கடுமையான போட்டி காரணமாக, அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு வாக்காளர்களைக் கவர, பல்வேறு யுக்திகளை கையாள்கின்றனர். பா.ம.க., வேட்பாளர் தமிழ்குமரன், கிராமப் பகுதி மக்களிடம், குறிப்பாக பெண்கள் காலில் விழுந்து ஓட்டு சேகரிக்கத் துவங்கியுள்ளார். இது, கிராமப் பகுதி மக்களுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்திருப்பதோடு, வரவேற்பும் ஏற்பட்டுள்ளது.

நேற்று முன்தினம், பென்னாகரத்தில் நடந்த அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன், "வாக்காளர்களின் காலில் விழுந்தாவது ஓட்டுகளைப் பெற வேண்டும்' என, கட்சியினருக்கு உத்தரவிட்டார். இதனால், வேட்பாளர்கள், தொகுதியில் வாக்காளர்கள் காலில் விழுந்து பிரசாரம் செய்வது அதிகரித்துள்ளது.

மக்கள் கொஞ்சம் சிந்தித்து பார்க்க வேண்டும், காலில் விழுவது வாக்குக்கு மட்டுமல்ல காலை வாருவதுர்க்கும் தான்.

Posted in Labels: | 0 comments

சச்சினே ஒரு பாரத ரத்னா!

மும்பை : "மும்பை யாருக்குச் சொந்தம்' என்ற பிரச்னையில் சச்சினை வார்த்தைகளால் வறுத்தெடுத்த, சிவசேனா கட்சித் தலைவர் பால்தாக்கரே, இப்போது "சச்சினே ஒரு பாரத ரத்னா தான்' என, புகழாரம் சூட்டியுள்ளார். சமீபத்தில் குவாலியரில் தென்ஆப்ரிக்காவுக்கு எதிராக நடந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சச்சின், 200 ரன் எடுத்து உலக சாதனை புரிந்தார். இதற்காக நாட்டின் தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, சிவசேனா கட்சித் தலைவர் பால்தாக்கரே தன் கட்சிப் பத்திரிகையான "சாம்னா'வில் எழுதியிருப்பதாவது: நூறு கோடி மக்களும் சச்சினை இப்போது பாரத ரத்னாவாகவே மதிக்கின்றனர். சச்சினுக்கு பாரத ரத்னா விருதளிக்க யாருடைய சிபாரிசும் தேவையில்லை. அவரே ஒரு பாரத ரத்னா தான். சிவாஜி மகாராஜா, போர்க்களத்தில் முகலாயர்களை எதிர் கொண்டு வெற்றி பெற்றார். அதேபோல், சச்சினும் கிரிக்கெட் களத்தில் வெற்றி பெற்றுள்ளார். சிவாஜி கையில் இருக்கும் வாள் போன்றது சச்சின் கையில் இருக்கும் கிரிக்கெட் மட்டை. இவ்வாறு பால்தாக்கரே குறிப்பிட்டுள்ளார்.

Posted in Labels: | 0 comments

2020ல் இந்தியா வல்லரசு !

இந்த அம்மனிகள பார்த்தா அதுக்கு முன்னாடியே ஆகிடும் போல.... பாருங்க நீங்களும், இந்த அம்மனிகள எவ்வளவு ஸ்டைலா அனுபவிக்கிறாங்க வாழ்கைய.....


இந்த புள்ள என்னத்தங்க பார்த்துட்டு இருக்கு...

பாருங்க அவரு எவ்வளவு சாதரணமா நிக்கிறாரு, இந்த புள்ளைய பாருங்க எவ்வளவு ஸ்டைலா நிக்குதுன்னு...

ரஜினிகூட இந்த மாதிரி விட்டு பார்த்தது இல்லைங்க


இந்த ஸ்டில்ல அஜித் பார்த்திருந்தா பில்லா படத்துல இன்னும் கொஞ்சம் நல்லா பண்ணிருப்பாரு..


பார்ப்பதற்கு குத்து விளக்கு மாதிரி இருக்குது..!

ஹாலிவுட் நடிகை மாதிரி ...........


இது எல்லாத்தையும் மிஞ்சிருச்சு...






Posted in Labels: | 7 comments

தியான பீட விளையாட்டு பிள்ளை

சன் பிக்சர்சின் தீராத விளையாட்டு பிள்ளை எதிர்பார்த்த அளவு வெற்றி நடை போடாத நிலையில் செவ்வாய் மாலை சன் நியூஸ் ரிலீஸ் செய்திருக்கும் "தியான பீட விளையாட்டு பிள்ளை" வெளியிட்ட சில மணித்துளிகளிலேயே உலகெங்கும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகி இருக்கிறது.புன்னகை தளபதி 'நித்தி' இதுவரை பார்த்திராத புதிய கோலத்தில் நடித்திருப்பதே இந்த படத்தின் வெற்றிக்கு காரணம் என கூறப்படுகிறது. மேலும் படத்தில் நடித்திருக்கும் கதாநாயகி யார் என சஸ்பென்சாக வைத்திருந்ததும் தமிழ் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வழக்கமாக ஒரு நாளுக்கு நான்கு ஷோ மட்டுமே படங்கள் திரையிடப்படும் நிலையில் இந்த திரைக்காவியம் அரை மணிக்கொரு முறை சன் நியூஸ் சேனலில் ஒளிபரப்பட்டது அனைத்து ரசிகர்களிடேயும் வரவேற்பு பெற்றது.குப்பென்று பத்திகொள்ளும் என எதிர்பார்க்கப்பட்ட அஜித் ரஜினி பிரச்சனை பொசுக்கென்று முடிந்து விட்டது. அடுத்த படம் வேறு வெள்ளி கிழமைதான் வரும். அதுவரை பதிவு போட என்ன செய்வது என பதறி கொண்டிருந்த பதிவுலகிற்கு " நித்தியின் சித்து விளையாட்டு " ஸ்டன்ட் காட்சிகள் பெரும் டாபிக் ஆக அமைந்ததால் எல்லோரும் சேனலுக்கு நன்றி தெரிவித்து யூடூப் லிங்க் கொடுத்த வண்ணம் உள்ளனர்.தங்களது ஆன்மீக குரு இதுவரை எவ்வளவோ தியான முறைகளை சொல்லி தந்துள்ளார். ஆனால் இத்தைகைய புதிய தியான ஆசனங்களை எங்களுக்கு இவ்வளவு நாட்களாய் சொல்லி தராமல் ஏமாற்றி வந்தது ஏன் என படத்தை பார்த்த சீடர்கள் அதிர்ச்சி அடைந்து வருத்தம் தெரிவித்தனர்.

தங்களது எல்லா படங்களுக்கும் இடைவிடாத விளம்பரம் போடுவது போல இந்த படத்திற்கும் சன் டி.வி.யில் "அடுத்த காட்சி 9 மணிக்கு... 9.30 மணிக்கு... 10 மணிக்கு " என இடைவிடாத ப்ளாஷ் நியூஸ் ஓடிய வண்ணம் இருந்தது குறிப்பிடதக்கது.அதே போல் ஊர் ஊராய் சென்று படத்தின் ரிசல்ட்டை பாலோ அப் செய்யும் தங்களது பாரம்பரிய முறைப்படி, இந்த படத்திற்கும், திருவண்ணமலையில் ஆசிரமம் முற்றுகை, புதுவையில் படம் எரிப்பு, கடலூரில் பறந்தது செருப்பு என விடாது பாலோ செய்து சூடாக ரிசல்ட் சொன்ன சன் நியூஸ் சேனலின் கடமை உணர்வை தமிழ் குடிமகன்கள் மெய் சிலிர்த்து பாராட்டி புளகாங்கிதம் அடைந்தனர்.படத்தின் பின்னணி இசை நன்றாக வந்திருக்கிறது. குறைவான நேரமே கொடுக்கப்பட்டாலும் டெர்ரராக இசை அமைத்த இசை அமைப்பாளருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது.எங்கே படத்தின் காட்சிகள் மக்களுக்கு புரியாமல் போய் விடுமோ என அஞ்சி க்ரியேடிவ் டீம் அமைத்துள்ள வர்ணனை வசனங்கள் அடுத்த வருடத்திற்கான விருது பெரும் சாத்திய கூறுகள் உள்ளது.படத்தில் ஏகப்பட்ட கவர்ச்சி காட்சிகள் இருந்ததால் அதை தாங்களே சென்சார் போர்டாக செயல்பட்டு அனைவரும் பார்க்கும் விதத்தில் U செர்டிபிகேட்டுடன் வெளியிட உதவிய எடிட்டரின் பணி பாராட்டுக்குரியது"தியான பீட விளையாட்டு பிள்ளை" - சன் பிக்சர்சின் முதல் சூப்பர் டூப்பர் ஹிட்......

Posted in Labels: | 0 comments

நீங்கள் எதை வெற்றியாக கொண்டாடுவீர்கள்

விளையாட்டு வீரர்களின் வெற்றி !!!!!!!!!!!!!!

விளையாட்டுக்கு வரவேற்ப்பு .......


























வெற்றி
வீரர்களின் விளையாட்டு ????????? மும்பையில்
நடந்த தீவிரவாதிகளிடம் விளையாடி
வெற்றி பெற்ற வீரர்கள் வந்த
பேருந்து !!
வெற்றிக்கு வரவேற்ப்பு.......












Posted in Labels: | 1 comments

ஒரே நாளில் 2.5. கோடி !

கடந்த ஹோலி பண்டிகை அன்று திருப்பத்தில் கூட்டம் அலை மோதியது. அன்று ஒரு நாள் வருமானம் 2.5 கோடி ரூபாயை எட்டியது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஹோலி பண்டிகை அன்று திருப்பத்தில் கூட்டம் அலை மோதியது. பக்தர்கள் தரிசனத்திற்காக 4 கி.மீ தூரம் வரிசையில் காத்திருந்தனர். போலீசார் கூட்டத்தை கட்டு படுத்த முடியாமல் திணறினார்கள். சன்னதிக்கு செல்லும் ஆர்வத்தை விட மக்கள் லட்டு கவுண்டருக்குத் தான் அதிக ஆர்வம் கட்டினார்கள். இதனால் லட்டு விநியோகம் தாமதம் ஆனதால் 100 மேற்பட்ட மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

தகவல் அறிந்து போலீசார் விரைந்து
பக்தர்களை சமாதானம் செய்து வைத்தனர்.

து என்ன கோவிலா இல்லை அரசியல்
கட்சி கூட்டமா?.....

அந்த பெருமாளு மலை மேல உட்காந்தாலும் விட மாட்டங்க போல......

Posted in Labels: | 0 comments

ஹைக்கூ

மொட்டை அடித்து
சவரம் செய்த மரங்கள்,

"இலை உதிர் காலம்......."

Posted in Labels: | 0 comments

ஹைக்கூ

எங்கோ செல்லும் நதியில்
விழுந்த நிலா...!

"எங்கும் செல்லாமல்...!"

Posted in Labels: | 4 comments

தமிழகத்தில் ஜனநாயகம் செத்துப் போய் விட்டது-வைகோ

செங்கோட்டை: தமிழகத்தில் ஜனநாயகம் செத்துப் போய் விட்டது என்று கூறியுள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.
கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி செங்கோட்டையில் கட்சிக் கொடியேற்றி வைத்து அவர் பேசுகையில்,
தமிழகத்தில் தற்போதைய ஆட்சியில் ஜனாநாயகம் செத்து போய்விட்டது. பண நாயகம் செழித்தோங்கி உள்ளது. ஓட்டுக்கு ஆயிரம் முதல் ஐயாயிரம் கொடுக்கிறார்கள். 50 கோடி கொடுத்து பதவிக்கு வந்தவர்கள் மக்களுக்கு என்ன செய்வார்கள், கொள்கைக்காக போட்டியிடுவதில் வெற்றி, தோல்வி சகஜம்.

தமிழகத்தில் வன்முறை வந்து விடக்கூடாது. கேரளா, ஆந்திரா, சட்டீஸ்கரில் பேராபத்து வந்து விட்டது. அரசு மீது இளைஞர்கள் நம்பிக்கை இழந்து விட்டால் பேராபத்து வந்து விடும்.

வடக்கே இருக்கும் விபரீதம் இங்கு வந்து விடக்கூடாது. லட்சம் பேர் தேவையில்லை. ஆயிரம் பேர் போதும். வன்முறைக்கு மதிமுக ஒரு போதும் துணை போகாது. 16 ஆண்டுகால வரலாற்றில் மதிமுக ஒரு வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டது கிடையாது.

கேரள அரசை கண்டித்து மே 28ம் தேதி 13 இடங்களில் சாலைகளில், கேராளவிற்கு கொண்டு செல்லும் பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களை மதிமுக மறிக்கும்.

குமரி மாவட்டம் நெய்யாற்றிலும் தண்ணீர் தர மறுப்பதால் அங்கு 28 ஆயிரம் ஏக்கர் நிலம் தரிசாக கிடக்கிறது. கரூர் மாவட்டத்தில் பாம்பாறு தண்ணீர் வராததால் 80 ஆயிரம் ஏக்கர் விலைநிலங்கள் தரிசாக உள்ளன.

கேரளா உதவியின்றி தமிழகம் வாழ முடியும். ஆனால் கேரள மக்கள் தமிழகத்தை நம்பிதான் வாழ வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆகவே தண்ணீர் தர மறுப்பது நியாயமற்ற செயல்.

தமிழக மக்கள் நலனுக்காக எதையும் சந்திக்க தயாராக இருக்கிறேன் என்றார்.

பொன்னாடை போர்த்திய காங். தலைவர்

இந்தக் கூட்டத்தின்போது செங்கோட்டை நகர காங்கிரஸ் கட்சி தலைவர் ஜோதிலிங்கம் வைகோவுக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.

Posted in Labels: | 0 comments

குக்கே சுப்பிரமணியர் கோவில் அருகே ஐந்து தலை நாகம்

கர்நாடகாவில் உள்ள குக்கே ஸ்ரீ சுப்பிரமணியர் கோவிலில் வழி படும் கற்பகிரகத்தில் ஐந்து தலையுயடைய நாகத்தின் சிலையை வைத்து வழிபடுகிறார்கள். நிஜத்திலும் அந்த ஆலயத்தின் அருகே உள்ள நீரோடையில் ஐந்து தலையுடைய நாகம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதோ அந்த ஐந்து தலை நாகத்தின் புகைப்படம் .....







Posted in Labels: | 1 comments

காதல்

எதற்கு

தேவையில்லாமல் நீயும்

சுவாசிக்கிறாய் ...!

என்னுள்ளே உள்ளபோது..!

Posted in Labels: | 1 comments

உலக கோப்பை ஹாக்கி, பாகிஸ்தானை விழ்திய இந்தியா



புதுடில்லி : உலக கோப்பை ஹாக்கி தொடரை இந்திய அணி அமர்க்களமாக துவக்கியது. நேற்று நடந்த பரபரப்பான லீக் போட்டியில் பாகிஸ்தானை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. உள்ளூர் சர்ச்சைகளை கடந்து சாதித்த இந்திய அணிக்கு சந்தீப் சிங் கைகொடுத்தார். இவர் இரண்டு கோல் அடித்து, ஆட்ட நாயகனாக ஜொலித்தார்.



டில்லியில் 12வது உலக கோப்பை ஹாக்கி தொடர் நேற்று துவங்கியது. இதில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஜெர்மனி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 12 அணிகள் பங்கேற்கின்றன.



பலத்த பாதுகாப்பு:பயங்கரவாதிகளின் மிரட்டலை தொடர்ந்து, போட்டி நடக்கும் தயான்சந்த் தேசிய மைதானம் உள்ளிட்ட பகுதிகளுக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.



அதிரடி துவக்கம்: "பி' பிரிவில் நடந்த லீக் போட்டியில் பரம எதிரிகளான இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்திய வீரர்களின் அதிரடி தாக்குதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி துவக்கத்திலேயே நிலைகுலைந்து போனது. ஆட்டத்தின் 27வது நிமிடத்தில் இந்தியாவுக்கு "பெனால்டி கார்னர்' வாய்ப்பு கிடைத்தது. இதனை சிவேந்திர சிங் கோலாக மாற்ற, அரங்கில் குவிந்திருந்த இந்திய ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். பின் 35வது நிமிடத்தில் அம்பயர் மறுபரிசீலனை முறையில் "பெனால்டி கார்னர்' வாய்ப்பை இந்தியா பெற்றது. இதில் சந்தீப் சிங் ஒரு சூப்பர் கோல் அடிக்க, இந்திய அணி முதல் பாதி முடிவில் 2-0 என்ற முன்னிலை பெற்றது.



கோல் மழை:இரண்டாவது பாதி துவங்கியதும் பிரப்ஜோத் சிங்(37வது நிமிடம்) அசத்தல் கோல் அடித்தார். இதற்கு பின் போராடிய பாகிஸ்தான் மூன்று "பெனால்டி கார்னர்' வாய்ப்புகளை வீணடித்தது. ஆட்டத்தின் 57வது நிமிடத்தில் "பெனால்டி கார்னர்' மூலம் சந்தீப் சிங் இரண்டாவது கோல் அடிக்க, இந்தியா 4-0 என்ற அசைக்க முடியாத முன்னிலை பெற்றது. பின் 60வது நிமிடத்தில் "பெனால்டி கார்னர்' மூலம் பாகிஸ்தானின் சோகைல் ஆறுதல் கோல் அடித்தார். இறுதியில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் அசத்தல் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 புள்ளிகளை பெற்றது.



பழி தீர்த்தது இந்திய அணி : கடந்த டிசம்பரில் அர்ஜென்டினாவில் நடந்த சாம்பியன்ஸ் சாலன்ஞ் தொடரில் இந்திய அணி, பாகிஸ்தானிடம் 3-6 என்ற கோல் கணக்கில் வீழ்ந்தது. இதற்கு இம்முறை நேற்று நடந்த உலக கோப்பை தொடரில் இந்திய அணி, பாகிஸ்தானை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, பழி தீர்த்துக்கொண்டது. தவிர, கடைசியாக நடந்த மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்து இருந்த இந்திய அணி, நான்காவது மோதலில் பாகிஸ்தானை வெற்றி கண்டது.



ரூ. 1 லட்சம் பரிசு : உலக கோப்பை ஹாக்கி தொடர் லீக் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணிக்கு பரிசு மழை குவிகிறது. பயிற்சியாளர் உள்ளிட்ட அணி வீரர்கள் ஒவ்வொருவருக்கும், தலா ஒரு லட்ச ரூபாய் பரிசு வழங்குவதாக, ஹாக்கி இந்தியா அமைப்பு அறிவித்துள்ளது.



நாணயத்துக்கு மறுப்பு : பாதுகாப்பு கெடுபிடிகள் "ஓவராக' இருக்க, பத்திரிகையாளர்கள் பரிதவித்து போயினர். இவர்கள், மைதானத்துக்குள் நாணயங்களை கூட எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. சிகரெட், தீப்பெட்டி போன்ற பெருட்களுடன் நாணயங்களையும் நுழைவாயிலில் விட்டுச் சென்றனர். பின் "போட்டோகிராபர்கள்' அமர்வதற்கு சேர் மற்றும் மின் வசதி செய்து தரப்படவில்லை. மைதானத்தை சுற்றி வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகைகளை கடந்து நிற்கும்படி அறிவுறுத்தப்பட்டனர். இதனால் "போட்டோ' எடுக்க முடியாமல் சிரமப்பட்டனர்.



இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,""நாணயங்களை எடுத்துச் செல்ல அனுமதிக்க கூடாது என எங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் நாணயங்களை, யார் வேண்டுமானாலும் மைதானத்தில் தூக்கி எறியலாம். இதனால் வீரர்களுக்கு காயம் அடையலாம். பாதுகாப்பு விஷயத்தில் அலட்சியமாக இருக்க முடியாது,''என்றார்.



"வீடியோ அம்பயர்' அறிமுகம் : உலக கோப்பை ஹாக்கி வரலாற்றில் முதல் முறையாக அம்பயர் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும் முறை(வீடியோ அம்பயர்) நேற்று அறிமுகமானது. இதன்படி அம்பயர் தீர்ப்பை எதிர்த்து இரு அணிகளும் தலா ஒருமுறை அப்பீல் செய்யலாம். இது வீரர்களுக்கு சாதகமாக அமைந்தால், மீண்டும் அப்பீல் செய்யலாம்.நேற்றைய தென் ஆப்ரிக்க, ஸ்பெயின் மோதிய போட்டியின் 44வது நிமிடத்தில், தென் ஆப்ரிக்க வீரர்கள் "பெனால்டி கார்னர்' வாய்ப்பு கோரினர். இதனை மலேசிய அம்பயர் அமர்ஜித் சிங் நிராகரித்தார். உடனே தென் ஆப்ரிக்கா சார்பில் "அப்பீல்' செய்யப்பட்டது. "ரீப்ளே' பார்த்த "வீடியோ அம்பயர்' ஜாம்சன் ஹமிஷ், "அப்பீலை' ஏற்றுக் கொண்டார். முதல் அப்பீல் சாதகமாக அமைந்ததால், தென் ஆப்ரிக்காவுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்தது. ஆட்டத்தின் 45வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் ரோட்ரிகோ கார்சா அடித்த கோல் தவறானது என அப்பீல் செய்தது. பந்து உயரமாக சென்றதாக புகார் கூறியது. இதனை வீடியோ அம்பயர் நிராகரித்தார்.

Posted in Labels: | 0 comments
Related Posts Plugin for WordPress, Blogger...