இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனி ஆரம்பித்து வைக்கும் நடிகர் விஜயகாந்த்தின் கேப்டன் டிவி 14th April 2010
Posted On Monday, March 22, 2010 at at 9:40 PM by Twilight Senseநடிகர் விஜயகாந்த் அவர்கள் ஒரு தொலைகாட்சி சேனலை ஆரம்பிக்கப்போகிறார் என்பது ஊரறிந்த விஷயம்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு கேப்டன் விஜயகாந்த் அவர்கள் தங்களுடைய கட்சி தொண்டர்களுக்காக ஒரு தொலைக்காட்சி சேனலை ஆரம்பிக்க முடிவெடுத்து அதன் சின்னத்தையும் வெளியிட்டார். பின்னர் அந்த தொலைக்காட்சி தன்னுடைய நிகழ்சிகளை ஏப்ரல் மாதம் பதினான்காம் நாள் முதல் ஆரம்பிக்கும் என்று கூறப்பட்டது.
கேப்டன் அவர்கள் தன்னுடைய சேனலை துவக்கி வைக்க தன்னுடைய அருமை நண்பர்களாகிய திரைத்துறையினரை கேட்டதாகவும், அதற்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும், சூப்பர் நடிகர் கமல்ஹாசன் அவர்களும் ஒப்புக்கொண்டு தலைமையேற்க சம்மதித்தது இருப்பதும் உபரித்தகவல். வழக்கம் போல ஒரு தொலைக்காட்சி சேனலின் ஆரம்ப நிகழ்ச்சிக்கு இரண்டு முன்னணி நடிகர்கள் போகிறார்கள். இதில் என்னடா ஸ்கூப் நியூஸ் என்றா கேட்கிறீர்கள்? இந்த இரண்டு நடிகர்கள் சென்றாலும்கூட அந்த சேனலை துவக்கி வைக்கப்போவது என்னவோ இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனிதான். ஆம், (Acting) கேப்டன் சேனலை (Cricket) கேப்டன் துவக்கி வைக்கிறார். என்ன ஒரு பொருத்தம் பாருங்கள்.
font problem...give the download link for ur font