இந்தியா ஏழை நாடு இல்லை
Posted On Monday, March 22, 2010 at at 12:51 AM by Muthuடெல்லி: ஐபிஎல் சீஸன் -4-ல் மேலும் இரு புதிய அணிகள் இன்று பட்டுள்ளன. கொச்சி மற்றும் புனே நகரங்களை மையப்படுத்தி இந்த அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
புனே அணியை சஹாரா அட்வென்ச்சர் ஸ்போர்ட்ஸ் நிறுவனமும், கொச்சி அணியை ரெண்டவஸ் ஸ்போர்ட்ஸ் லிட் நிறுவனமும் பெரும் பணம் கொடுத்து வாங்கியுள்ளன.
புனே அணிக்கு சஹாரா கொடுத்துள்ள விலை 370 மில்லியன் டாலர்கள்(1700 கோடி). அகமதாபாத், நாக்பூர் மற்றும் புனே ஆகிய மூன்று நகரங்களில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளுமாறு அந்த நிறுவனத்துக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. அவர்கள் புனே நகரை தலைமையிடமாக அறிவித்தததால், அதன் பெயரில் இந்த அணி அமைக்கப்படுகிறது.
கொச்சிக்கு ரெண்டவஸ் நிறுவனம் 333.33 மில்லியன் டாலர்(1533 கோடி) கொடுத்தது.
இந்த இரு அணிகளும் அடுத்த ஆண்டு நடக்கும் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கின்றன. இதன் மூலம் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது
இதன் மூலம் IPLக்கு வருமானம் பல மடங்கு பெருகியுள்ளது. தற்போதுள்ள எட்டு அணிகளை அறிவித்தபோது கிடைத்ததை விட 200 மடங்கு அதிக விலை புதிய அணிகளை ஏலம் விட்டதில் மட்டுமே கிடைத்துள்ளது.
யாரவது அப்துல் காலமா பார்த்தா சொல்லுங்க இந்தியா இப்பவே வல்லரசுதான்னு, 2020 - ல வல்லரசுக்கெல்லாம் வல்லரசு ஆகிடும். எவ்வளவோ துறை இருக்கிற இந்த நாட்டுல ஒரு விளையாடுலேயே இவ்வளவு பணம் புழங்குதுனா பாருங்க.....
இதுல சந்தேகம் வேறாயா?
பொருளாதாரம் பரவலாக்கபடவில்லை... அதுதான் இந்தியா ஒரு ஏழை நாடு என காண்பித்துக் கொண்டு இருக்கின்றது..