இந்தியா மீண்டும் சாம்பியன்
Posted On Thursday, February 18, 2010 at at 9:25 PM by Twilight Senseஇன்றைய ஆன்மிகம்
Posted On at at 10:58 AM by Muthuதினமும் ஒரு பீர்
Posted On Wednesday, February 17, 2010 at at 10:00 PM by Twilight Senseபுதுடில்லி:தினமும் ஒன்று அல்லது இரண்டு கோப்பை பீர் குடித்தால் எலும்புகள் பலமடையும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.ஐம்பது வயதுக்கு மேற்பட்ட பெண்களில் இருவரில் ஒருவர், ஆண்களில் மூன்றில் ஒருவருக்கு எலும்புகள் பலமிழக்கின்றன. இதனால், ஒரு கட்டத்தில் எலும்பு முறிவு ஏற்படுகிறது. சுண்ணாம்பு சத்து அதிகம் உள்ள பால், முட்டைகோஸ், சோயா, மற்றும் மீன்கள், பாதாம் பருப்பு, பீன்ஸ் ஆகியவற்றை சாப்பிடுவதால் எலும்புகளின் பலம் கூடுகிறது என, மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
டில்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனை டாக்டர் அம்ரீஷ் மித்தல் கூறியதாவது:தினமும் ஒன்று அல்லது இரண்டு கோப்பை பீர் அருந்தினால் எலும்புகள் வலுப்பெறுவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பீரில் உள்ள சிலிகான், திரவ வடிவத்தில் உள்ளதால் உடலில் எளிதில் உறிஞ்சப்பட்டு எலும்புகள் பலமடைய உதவுகின்றன. அரை லிட்டருக்கும் குறைவாக உட்கொண்டால் தான் இந்த பலன் கிடைக்கும். 500 மில்லி லிட்டருக்கு அதிகமானால், எதிர்விளைவுகளை ஏற்படுத்தி விடும், என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர். அதிகப்படியான பீர் உடலில் உள்ள நோயின் தன்மையை அதிகரித்து விடும். அதாவது,நீரிழிவு, மாரடைப்பு ஆகியவையெல்லாம் அதிகரிப்பதற்கு கூடுதலான பீர் வழிவகுத்துவிடும்.இவ்வாறு அம்ரீஷ் கூறினார்.
கேரள போக்கு - தமிழக அரசின் மெத்தனம்: வைகோ பாய்ச்சல்!
Posted On Tuesday, February 16, 2010 at at 10:04 AM by Muthuகோவை: தமிழகத்தின் உரிமையைக் காக்கும் முயற்சியில் ஈடுபடாமல், ஆடம்பர விழாக்கள், வீண் விளம்பரங்களில் அரசு கவனம் செலுத்துகிறது. வரும் முன் காக்காவிட்டால், வந்த பின்னர் கதறிப் பயனில்லை என்று தமிழக அரசை எச்சரித்துள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.
பாம்பாற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்ட முயற்சிப்பதைக் கண்டித்து இன்று திருப்பூர் மாவட்டம் உடுமலையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உண்ணாவிரதம் இருந்தார்.
பெரும் திரளானோர் கலந்து கொண்ட இந்தப் போராட்டத்தின்போது வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில், அமராவதி அணைக்கு நீர் தரும், பாம்பாற்றின் குறுக்கே புதிய அணை கட்ட கேரளா முயலுகிறது. இந்த அணை கட்டப்பட்டால், தமிழகத்தில் உள்ள 70 ஆயிரம் பாசன நிலங்கள் பாதிக்கப்படும். குடிநீர் தடைப்படும். தொழிற்சாலைகளும் பெரும் பாதிப்பை சந்திக்கும்.
கேரள அரசு முரண்பாடாகவே செயல்பட்டு வருகிறது. முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் ஒரு உத்தரவைப் பிறப்பித்தால் அதை மீறி செயல்படுகிறது. இது இந்திய ஒருமைப்பாட்டுக்கு பெரும் கேடாக அமையும்.
தமிழக அரசு தமிழகத்தின் உரிமையைக் காக்கும் கடமையைச் செய்யாமல் வீண் விளம்பரங்கள், ஆடம்பர விழாக்கள் என கவனம் செலுத்தி வருகிறது. வரும் முன் காக்காவிட்டால், வந்த பின்னர் கதறிப் பயன் இல்லை.
தமிழகத்தின் எதிர்காலத்தை அடியோடு நாசம் செய்ய நினைக்கிறது கேரளா. இதைத் தடுக்க வேண்டியது தமிழகத்தின் கடமை. அதை மதிமுக செய்யும் என்றார்.
முன்னதாக கோவை வந்த வைகோ அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில்,
கேரள மக்கள் நமக்கு எதிரிகள் அல்ல. கேரள அரசு தான் தமிழக மக்களை விரோதியாகப் பார்க்கிறது. வஞ்சித்து வருகிறது.
முல்லைப் பெரியாறு, அமராவதி அணை பாசன பகுதி மக்களை பாதிக்கும் வகையில் புதிய அணை கட்ட முயற்சி செய்து வருகின்றது .
கேரள அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் இன்று உடுமலையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகின்றது.
இதையும் மீறி, கேரள அரசு தனது நிலையை தொடர்ந்தால், தமிழகத்தில் இருந்து அந்த மாநிலத்துக்கு செல்லும் அனைத்து ரோடுகளை மறிக்கும் சூழ்நிலை ஏற்படும் என்றார்.
இன்றைய ஆன்மிகம்
Posted On at at 9:41 AM by MuthuIndia v South Africa, 2nd Test, Kolkata, Day 2 Photo Gallery
Posted On Monday, February 15, 2010 at at 4:48 PM by MuthuLittle Master Once again gets 100+(46)...
Sewag was in raring mood and stuck it to South Africa ....
Sewag Racing to his half-century...
இன்றைய ஆன்மிகம்
Posted On at at 12:19 PM by Muthuதமிழர்களுக்கு ராஜபக்சே அதிகாரப் பகிர்வை வழங்க வேண்டும்- எஸ்.எம்.கிருஷ்ணா
Posted On at at 11:50 AM by Muthu
சென்னை: தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வை ராஜபக்சே வழங்க வேண்டும் என்று மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா வலியுறுத்தியுள்ளார்.
சென்னை வந்திருந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழர்களுக்கு அரசியல் தீர்வு மூலம் அதிகாரப் பகிர்வை இலங்கை [^] அரசு வழங்க வேண்டும் என இந்தியா விரும்புகிறது.
மேலும், சிறுபான்மை தமிழ் பேசும் மக்கள் அரசியல் நடைமுறைகளில் சமத்துவம் பெற வேண்டும். இலங்கை வரலாற்றில் புதிய அத்தியாயம் தொடங்க அதிபர் ராஜபக்சே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்தியா விரும்புகிறது.
இலங்கை அரசியல் சட்டத்தின் 13வது சட்டத் திருத்தத்தை அதிபர் ராஜபக்சே முழுமையாக அமல்படுத்த வேண்டும். இதன் மூலம் இலங்கையில் வாழும் அனைத்து மக்களும் சமத்துவம் பெற வழி பிறக்கும்.
இலங்கைக்கு தோழமையுடன் கூடிய உதவிகளை எப்போதும் இந்தியா செய்யும் என்றார் கிருஷ்ணா.
ஷாருக் படத்தைப் பாதுகாத்து புனேவை கோட்டை விட்ட மகாராஷ்டிர அரசு - பாஜக கண்டனம்
Posted On at at 8:44 AM by Twilight Senseடெல்லி: ஷாருக் கானின் படத்துக்கு பாதுகாப்பு கொடுக்கவே மகாராஷ்டிர அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்தது. அதைப் பயன்படுத்திக் கொண்ட தீவிரவாதிகள், புனேவில் தங்களது நாச வேலையை நிகழ்த்திக் கொண்டு விட்டனர் என்று பாஜக கூறியுள்ளது.
புனே சம்பவம் மகாராஷ்டிர அரசின் அலட்சியப் போக்கால்தான் நிகழ்ந்துள்ளது என்றும் பாஜக கூறியுள்ளது.
இதுகுறித்து பாஜக துணைத் தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறுகையில், மகாராஷ்டிர காங்கிரஸ் கூட்டணி அரசும், காவல்துறையும் மை நேம் இஸ் கான் படத்தின் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் ஆகியோர் பாதிக்கப்படக் கூடாது என்ற ஒரே கவலையுடன் மட்டுமே கடந்த சில நாட்களாக இருந்து வந்தனர்.
இந்தப் படத்துக்கு எந்தப் பிரச்சினையும் வரக் கூடாது என்று ராகுல் காந்தியிடமிருந்து வந்த உத்தரவை அமல்படுத்துவதில்தான் அவர்கள் ஆர்வமாக இருந்தனர்.
இது தீவரவாதிகளுக்கு மிகவும் வசதியாகி விட்டது. இந்த இடைவெளியைப் பயன்படுத்திக் கொண்டு அப்பாவி மக்களின் உயிர்களை அவர்கள் பறித்துக் கொண்டு விட்டனர் என்றார்.
குண்டுவெடிப்பு நடந்த இடத்தை பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர் நேரில் சென்று பார்வையிட்டார்.
பின்னர் அவர் கூறுகையில், மீண்டும் ஒரு தீவிரவாதத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்த நிலையில் பாகிஸ்தான் அரசுடன் மத்திய அரசு மீண்டும் பேசக் கூடாது. பேச்சுவார்த்தையும், தீவிரவாதமும் இணைந்து செல்ல முடியாது.
இது ஒரு திட்டமிட்ட தீவிரவாதத் தாக்குதல். இப்படிப்பட்ட நிலையில் பேசிக் கொண்டிருப்பதால் என்ன பயன் கிடைத்து விடும் என்றார்.
காங்கிரஸ் கண்டனம்
இந்த நிலையில் பாஜகவின் குற்றச்சாட்டு குறித்து காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஷகீல் அகமது கூறுகையில், அரசியல் கட்சிகள் இதை அரசியலாக்க முனைவது வருத்தத்திற்குரியது.
மிகவும் துயரமான சம்பவம் நடந்துள்ளது. இதை வைத்து யாரும் அரசியல் செய்ய முயலக் கூடாது. தீவிரவாதத்திற்கு எதிரான நாட்டின் போருக்கு இடையூறு ஏற்படும் வகையில் யாரும் செயல்படக் கூடாது.
அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டிய நேரம் இது. ஆனால் சில கட்சிகள் இதில்
அரசியல் லாபம் தேட முனைகின்றன, இது வருத்தத்திற்குரியது என்றார் அவர்.