ராணுவ அதிகாரி மனைவிக்கு செக்ஸ் டார்ச்சர்

டெல்லி: இந்திய ராணுவக் குழுவினருடன் இஸ்ரேல் சென்றபோது ராணுவ ஊழியர் ஒருவரின் மனைவிக்கு செக்ஸ் டார்ச்சர் தந்தார் லெப்டினன்ட் ஜெனரல் பதவியில் உள்ள மூத்த அதிகாரி. இதையடுத்து அவரை இன்று ராஜினாமா செய்ய வைத்தார் ராணுவத் தளபதி.

இந்திய ராணுவத்தின் என்ஜினியரிங் பிரிவுக்குத் தலைமை தாங்கும் அதிகாரியான லெப்டினன்ட் ஜெனரல் ஏ.கே.நந்தா தலைமையில் ஒரு குழு தங்கள் குடும்பத்தினருடன் கடந்த மாதம் இஸ்ரேல் சென்றது.

அப்போது தனது தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளரின் மனைவியிடம் செக்ஸ் டார்ச்சரில் ஈடுபட்டுள்ளார் நந்தா.

இது குறித்து அந்தப் பெண் ராணுவத் தளபதி வி.கே.சிங்கின் மனைவியும், ராணுவ வீரர்கள் மனைவியர் நல சங்கத்தின் தலைவியுமான பாரதி சிங்கிடம் புகார் தந்தார்.

இதையடுத்து விசாரணை நடத்திய ராணுவத் தளபதி வி.கே. சிங் , புகாரில் உண்மையிருப்பது உறுதியானதால் நந்தாவை உடனடியாக பதவி விலகுமாறு உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

செக்ஸ் தொல்லை தொடர்பான பிரச்சனைக்காக பதவியைவிட்டு தூக்கப்பட்டுள்ள இந்திய ராணுவத்தின் மிக மூத்த முதல் அதிகாரி இவர் தான்.

Posted in Labels: | 0 comments

ஒரே நாளில் ஒரு லட்சம்

டெல்லி: வங்கியின் ஏடிஎம் (டெபிட் கார்டுகள்) மூலம் இனி ஏடிஎம்களில் நாளொன்றுக்கு ரூ.1 லட்சம் வரை பணம் எடுக்க முடியும்.

அதேபோல டெபிட் கார்ட் மூலம் ரூ.1.25 லட்சம் வரை பொருட்களையும் வாங்கிக் கொள்ளலாம்.

மேலும் ரூ.3 லட்சம் வரை பணத்தை ஒரு கணக்கிலிருந்து மற்றொரு கணக்குக்கு ஒரே நாளில் மாற்றும் வசதியும் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இந்த அளவு தொகையை எடுக்கவோ மாற்றவோ வாடிக்கையாளர்கள் வங்கிகள் பணி நேரத்திலேயே ஒரு வங்கிக் கிளையிலிருந்து மற்றொரு வங்கிக் கிளைக்குச் செல்ல வேண்டியுள்ளது. இதைத் தவிர்க்க நாளை முதல் (ஜூன் 1) நாளொன்றுக்கு டெபிட் அட்டைகள் மூலம் ஏடிஎம்களில் வாடிக்கையாளர்கள் ரூ.1 லட்சம் எடுக்கும் வசதியை எச்டிஎப்சி வங்கி அறிமுகம் செய்யவுள்ளது.

பிற வங்கிகளும் ஜூன் 1ம் தேதிக்குப் பிறகு அறிமுகப்படுத்த உள்ளன.

இப்போது ரூ.25 ஆயிரம் மட்டுமே டெபிட் கார்ட் மூலம் ஒரு நாளைக்கு எடுக்க முடியும். அதுவும் சில வங்கிகளில் இரு தவணைகளாக எடுக்க வேண்டும். இனி இந்த சிக்கல் வாடிக்கையாளர்களுக்கு இருக்காது.

அதே நேரம் வங்கிகளிலும் கூட்டம் அலைமோதுவது தவிர்க்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Posted in Labels: | 0 comments

QUIT SMOKING !!! (புகைப்பதை நிறுத்துவீர். )



Smoking is injurious for health



புகைப்பதை நிறுத்துவீர்.

Posted in Labels: | 0 comments
Related Posts Plugin for WordPress, Blogger...