லூதியானா கவர்ச்சி புயல்

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோயின்களுக்கு ஒரு எச்சரிக்கை. லூதியானாவிலிருந்து கிளம்பியுள்ள ஒரு கவர்ச்சிப் புயல், அவர்களது அடிமட்டத்தை தகர்த்து அவர்களது இடத்தை ஆக்கிரமிக்க வந்து இறங்கியுள்ளது.


பெயரைக் கேட்டால் ஏதோ தவசி என்று பழைய காலத்துப் பெயர் போல தோன்றும். ஆனால் தப்சி பன்னு, படா அழகாக இருக்கிறார். இவ்ளோ அழகாக இருக்கும் இவர் மாடல் அழகியாக இருக்காமல் போய் விடுவாரா?, தப்சியும் ஒரு மாடல் அழகிதான்.

மாடல் அழகியாக இருந்தால் ஏதாவது அழகிப் போட்டியில் கலந்து கொள்ளாமல் இருப்பார்களா?, தப்சியும் அழகிப் போட்டியில் கலந்து கொண்டவர்தான். பேன்டலூன் பெமினா மிஸ் பளிச் முகம், சபி பெமினா மிஸ் அழகிய தோல் என இரு பட்டங்களைப் பெற்றவர் இந்த அழகு தப்சி.

அழகான பொண்ணாக மட்டும் இருக்காமல், அருமையாக படிக்கவு்ம் கூடியவராம் தப்சி. சாப்ட்வேர் என்ஜீனியரிங் படிப்பை முடித்துள்ள தப்சி, அப்படியே மாடலிங் மூலமாக இப்போது சினிமாவுக்கு வந்தே விட்டார்.

தெலுங்குதான் இவர் முதலில் நுழைந்த திரையுலகம். அங்கு இவர் நடித்த ஜும்மன்டி நாதம் ஹிட் ஆகியுள்ளதால் தப்சியும் ரசிகர்களிடையே ஹீட்டைக் கிளப்பி விட்டு விட்டார்.

தெலுங்கில் தேறியவர் தமிழுக்கும் சேவை செய்ய வேண்டுமல்லவா. அந்த இலக்கணப்படி தமிழுக்கும் வந்துள்ளார். ஒன்றுக்கு இரண்டு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் தப்சி. ஆடுகளம் படத்தில் தனுஷுக்கு ஜோடியாகவும், வந்தேன் வென்றேன் படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாகவும் பட்டையைக் கிளப்பவுள்ளார்.

இதுதவிர தெலுங்கிலும் பல படங்கள் ஓடி வர ஆரம்பித்துள்ளதாம். அங்குள்ள முன்னணி ஹீரோக்களுடன் தப்சியை புக் செய்ய ஆரம்பித்திருப்பதால் இலியானா அன் கோவினர் சற்று கிலியான முகங்களுடன் வலம் வருகின்றனராம்.

அப்ப தப்சியால் தமிழில் யாருக்கு ஆபத்து வரும்?. இப்போதைக்கு தமன்னாவுக்குத்தான் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்...!

ஒபாமாவை முந்திய காகா

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை ஓவர்டேக் செய்து முந்தியுள்ளார் லேடி காகா.
பேஸ்புக் பின்பற்றுவோர் எண்ணிக்கையில்தான் ஒபாமாவை முந்தியுள்ளார் லேடி காகா.

லேடி காகாவின் குரல் வளத்துக்கு மட்டுமல்லாமல் அவரது கவர்ச்சி கட்டுக்கும் நிறைய ரசிகர்கள் உண்டு. இந்த நிலையில், பேஸ்புக் பின்பற்றுவோர் எண்ணிக்கையில், ஒபாமாவை விட கூடுதலான ரசிகர்களைப் பெற்றுள்ளார் காகா.

காகாவின் ரசிகர் எண்ணிக்கை 99,40,462 ஆகும். ஒபாமாவுக்கு உள்ள ரசிகர்கள் 94,44,942. ட்விட்டரைப் பொறுத்தவரை, காகாவுக்கு 47,62,938 பின்பற்றுவோர் உள்ளனர். ஒபாமாவைப் பின்பற்றுவோர் 44,22,923 பேராகும்.

பேஸ்புக்கில் ஒரு கோடி ரசிகர்களைப் பெற்ற முதல் நபர் என்ற பெருமையை விரைவில் காகா பெறவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனக்கு பேராதரவு தந்து கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பேஸ்புக்கில் ஒரு வீடியோவை இணைத்துள்ளார் காகா. எனது பேஸ்புக்கில் இணையுங்கள், உங்களை ஒருபோதும் மறக்க மாட்டேன் என்றும் டச்சிங்காக கூறியுள்ளார்.

Posted in Labels: | 0 comments
Related Posts Plugin for WordPress, Blogger...