திருமலையில் ரம்பா திருமணம்

பிரபல தமிழ் - தெலுங்கு நடிகை ரம்பாவுக்கும் கனடா நாட்டை சேர்ந்த இந்திரகுமார் (எ) பத்மநாபனுக்கும் நாளை (வியாழக்கிழமை) திருமலையில் உள்ள கர்நாடக கல்யாண மண்டபத்தில் காலை 11.45 மணிக்கு திருமணம் நடக்கிறது.

இந்த திருமணத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி, பெங்காலி மற்றும் போஜ்புரி திரைப்படத்துறையினர் மற்றும் சின்னத்திரை நடிகர்- நடிகைகள் ஏராளமானோர் பங்கேற்கின்றனர்.

நடிகை ரம்பா மற்றும் மணமகன் குடும்பத்தினர் ஏற்கெனவே திருமலையில் தங்கியுள்ளனர்.

இன்று காலை நடிகை ரம்பா தனது குடும்பத்தினருடன் ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். மாலை அவருக்கு பெண்ணழைப்பு சடங்குகள் நடக்கின்றன.

நாளை திருமணத்துக்கு வருபவர்களுக்கு காலையில் 15 வகை சிற்றுண்டிகளும், பிற்பகல் 35 வகையான அறுசுவை விருந்தும் வழங்கப்படுகிறது.

திருமணத்திற்கு அதிகமாக நடிகர் நடிகைகள் வருவார்கள் என்பதால் முன் எச்சரிக்கையாக திருமலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தனக்கு திருமணம் கூடி வந்தால், திருமலையில் செய்து கொள்வதாக ரம்பா வேண்டிக் கொண்டிருந்தாராம். அதனால்தான் இங்கு திருமண ஏற்பாடுகள் செய்துள்ளார்களாம்.

Posted in Labels: | 1 comments

இந்தியாவில் 5.2. கோடி

டெல்லி: இந்தியாவில் இன்டர்நெட் பயன்படுத்துவோர் (ஆக்டிவ் யூசர்ஸ்) எண்ணிக்கை 5.2 கோடியை (52 மில்லியன்) தாண்டியிருப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

'இன்டர்நெட் இன் இந்தியா' என்ற தலைப்பில் இந்திய இணையதளங்கள் மற்றும் மொபைல் அசோசியேஷன் மற்றும் ஐஎம்ஆர்பி நிறுவனம் இணைந்து இந்த ஆய்வை நடத்தியுள்ளன.

கடந்த 2008ம் ஆண்டில் இதுபோன்ற ஆய்வில் இணையதளம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 4.2 கோடியாக இருந்தது.

கடந்த 2009ம் ஆண்டில் செப்டம்பர் மாதம் வரையிலான நிலவரப்படி பயனாளர்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட 19 விழுக்காடு உயர்ந்துள்ளது.

ஆக்டிவ் யூசர் என இந்த ஆய்வில் குறிப்பிடப்படுவது, குறைந்தபட்சம் மாதத்தில் ஒரு நாளாவது இணையத்தை பயன்படுத்தும் வழக்கம் உள்ளவர்கள்.

சிறிய நகரங்கள் மற்றும் பின் தங்கிய பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவில் இணைய பயன்பாடு அதிகரித்திருப்பதாகவும் இந்த ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Posted in Labels: | 0 comments

87 வயதிலும் சச்சினுக்கு ரசிகை

சென்னை: சென்னை வந்த சச்சின் டெண்டுல்கர், தனது 87 வயது ரசிக பாட்டியை நேரில் சந்தித்து ஆசிர்வாதம் பெற்றார்.

சென்னையைச் சேர்ந்தவர் சரஸ்வதி வைத்தியநாதன். 87 வயதிலும் இந்த பாட்டிக்கு கிரிக்கெட் என்றால் கொள்ளை ஆசை.

அதிலும் சச்சின் பேட்டிங் என்றால், சோர்ந்து படுத்திருந்தாலும் துள்ளி எழுந்து வந்து டிவி முன்பு அமர்ந்துகொள்வார்.

பார்த்து ரசித்து பொழுது போக்குவது மட்டுமல்லாமல், சச்சினுடைய கிரிக்கெட் சமாச்சாரங்கள் அத்தனையும் இந்த 'ரசிக பாட்டி'க்கு அத்துபடி.

சச்சினின் ஆரம்பம் முதல் இன்று வரை எல்லா புள்ளி விவரங்களையும் மனப்பாடமாக பதிந்து வைத்துள்ளார்.

இந்நிலையில், ஐபிஎல் போட்டிக்காக சென்னை பார்க் ஷெரட்டன் ஹோட்டலில் தங்கியிருந்த சச்சின், இவரைப் பற்றி பத்திரிகையில் வெளியான செய்தி மூலம் அறிந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து பார்க் ஷெரட்டன் ஹோட்டலுக்கு வரவழைக்கப்பட்டார் 'சரஸ்வதி பாட்டி'. சச்சினை டிவியில் பார்த்து பரவசமடைந்து வந்த பாட்டிக்கு, ரத்தமும், சதையுமாக நேரில் சச்சினை பார்த்ததும் முகமெல்லாம் மலர்ந்து போய்விட்டதாம்.

'உங்களை நேரில் பார்க்க நான் கொடுத்து வச்சிருக்கணும்' என சச்சினிடம் பாட்டி சொல்ல, 'அய்யயோ நான் தான் இப்படி ஒரு ரசிகரை பெற்றதுக்கு கொடுத்து வைச்சிருக்கணும்' என புளகாங்கிதமடைந்தாராம் சச்சின்.

ரசிக பாட்டியை பார்த்த உடனடியாக முதலில் மிக பணிவுடன் காலைத் தொட்டுக் கும்பிட்டு ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டார் சச்சின்.

பின்னர் சரஸ்வதி பாட்டியின் பிரத்தியேக ஆட்டோகிராஃப் மட்டையில் தனது கையெழுத்தை போட்டுக்கொடுத்தார்.

கண்டிப்பாக 100 சர்வதேச சதங்களை சச்சின் அடிக்க வேண்டும் எனக் கூறிய சரஸ்வதி பாட்டி, சச்சினுக்கு சின்னதாக ஒரு ஒரு பிள்ளையார் சிலையை அன்பளிப்பாக வழங்கினார்.

சச்சினை தனது 4ம் தலைமுறை பேரனாக வாஞ்சையோடு பார்த்துக்கொண்டிருந்த சரஸ்வதி பாட்டி, மிகவும் இயல்பாக, 'அஞ்சலி எப்படியிருக்கா...? அர்ஜூன்... சாரா நல்லாருக்காங்களா..' என சச்சினிடம் விசாரித்தார்.

Posted in Labels: | 1 comments

இந்தியாவின் ரகசியங்களை திருடிய சீனா

இந்திய ராணுவம் மற்றும் பல்வேறு நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில் இருந்து ரகசிய ஆவணங்களை கம்ப்யுட்டர் மூலமாக சீன உளவாளிகள் திருடியுள்ளனர்.

`நிழல் மேகங்கள்' என்ற பெயரில் டொராண்டோவை மையமாக கொண்ட கனடா மற்றும் அமெரிக்க ஆராய்ச்சியாளர்களால் உளவு விசாரணை மேற்கொள்ளப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், இந்தியாவில் உள்ள வர்த்தகம், கல்வி மற்றும் பிற கம்ப்யுட்டர் நெட்வொர்க் முறையை திருடுவதற்காகவே சீனாவில் ஏராளமான சர்வர்கள் நிறுவப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இந்திய தூதரகங்கள்

இந்தியாவில் உள்ள தனியார் தகவல்கள் மட்டுமின்றி, இந்திய அரசு தொடர்புடைய தகவல்களையும் சீன உளவாளிகள் திருடி வருவது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. பெல்ஜியம், செர்பியா, ஜெர்மனி, இத்தாலி, குவைத், அமெரிக்கா, ஜிம்பாப்வே, இங்கிலாந்து, சைப்ரஸ் போன்ற நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களின் ரகசிய கம்ப்யுட்டர் ஆவணங்கள் திருடப்பட்டுள்ளன.

மேலும், சீனாவுக்கு வெளியே இருந்தபடியும் இத்தகைய காரியங்களில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். குடிமக்களின் தனிப்பட்ட, வர்த்தக, நிதி மற்றும் பல்வேறு தகவல்களும் திருடப்பட்டுள்ளன. இவ்வாறு திருடப்படும் ஆவணங்களை `ரகசியமானது', `தடை செய்யப்பட்டது', `நம்பிக்கைக்குரியது' என தரம் பிரித்து வைத்துள்ளனர்.

தரையில் இருந்து விமானத்தை தகர்க்கும் ஏவுகணையான `பெச்சோரா ஏவுகணை திட்டம்', அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு செல்லும் வகையில் ராணுவத்தில் பயன்படுத்தப்படும் மொபைல் ஏவுகணை பற்றிய தகவல்கள், பீரங்கி தொடர்பான `சக்தி திட்டம்' போன்ற இந்திய ராணுவத்தின் அதி முக்கிய ரகசிய தகவல்களும் சீன உளவாளிகளின் கம்ப்யுட்டரில் பதிவாகி இருக்கிறது.

திபெத் மத தலைவர் தலாய்லாமா அலுவலகத்தில் இருந்தும் ஏராளமான ரகசிய ஆவணங்களை அந்த உளவாளிகள் திருடி இருக்கின்றனர். தலாய்லாமா அலுவலகத்தில் இருந்து கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் வரையிலும் ஆயிரத்து ஐநூறு கடிதங்கள் அனுப்பப்பட்டு இருப்பதையும் அதன் விவரங்களையும் சீன உளவாளிகளின் கம்ப்யுட்டர் தெரிவிக்கிறது.

Posted in Labels: , | 0 comments

மீண்டும் ஒரு (சிங்க)வேட்டை

24 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை மும்பையை வீழ்த்தியது.

M Vijay catches Kieron Pollard




என்ன தலைவா அசந்து உக்காந்துட்டிங்க.




Posted in Labels: | 0 comments

கேரளாவில் தமிழுக்கு கட்டுப்பாடு

தமிழ்ப் படங்கள் கேரளாவில் மே 1-ம் தேதி முதல் இரண்டு வாரங்கள் கழித்தே ரிலீஸ் செய்யப்பட வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம் மற்றும் இந்திப் படங்களையும் இதே போலத்தான் வெளியிட வேண்டும் என முடிவு செய்துள்ளனர்.

கேரள திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் இந்த முடிவை அறிவித்துள்ளது.

கடந்த சில மாதங்களாக விண்ணைத் தாண்டி வருவாயா, வேட்டைக்காரன், 3 இடியட்ஸ், அவதார், 2012 போன்ற படங்கள் அதிக வசூலுடன் ஓடிக் கொண்டுள்ளன கேரளாவில். குறிப்பாக ஷாரூக்கானின் மை நேம் ஈஸ் கான் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது கேரளாவில்.

விஜய்யின் சுறா பட கேரள விநியோகத்துக்கு பெரும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதனால் மலையாளப் படங்கள் அடியோடு புறக்கணிக்கப்படுவதாக கேரள சினிமாக்காரர்கள் மத்தியில் புலம்பல் ஆரம்பித்தது. பெரிய நடிகர்கள் மோகன்லால், மம்முட்டி போன்றவர்கள் கேரளாவில் பிற மொழிப் படங்கள் வெளியாவதைத் தடுத்தால் இந்த நிலை மாறும் என பேசி வந்தனர்.

இதைத் தொடர்ந்து, இனி தமிழ், இந்தி மற்றும் ஆங்கிலப் படங்கள் நாட்டின் பிற பகுதிகளில் வெளியாகும் நேரத்தில் கேரளாவில் வெளியாகக் கூடாது என்றும், இரு வாரங்கள் கழித்தே வெளியிட வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல, தமிழ் உள்ளிட்ட பிற மொழிப் படங்களை மட்டும் வெளியிடும் திரையரங்குகள் இனி கட்டாயம் மலையாளப்படங்களையும் வெளியிட்டாக வேண்டும் என்றும், இந்த முடிவுகள் வரும் மே 1-ம் தேதி முதல் கட்டாயமாக அமல்படுத்தப்படும் என்றும் கேரள திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

Posted in Labels: | 1 comments

sania இனி சானி யா ?



ஹைதராபாத்: ஆயிஷாவுடனான திருமணப் பத்திரத்தில் (நிக்கநாமா) சோயப் மாலிக் கையெழுத்திட்டது உண்மைதான். ஆனால் சோயப் மாலிக் நினைத்திருந்த பெண் வேறு, ஆயிஷா வேறு என்பது அப்போது அவருக்குத் தெரியாது. வேறு ஒரு பெண்ணின் புகைப்படத்தைக் காட்டி மோசடி நடத்தப்பட்டது என்று கூறியுள்ளார் சோயப் மாலிக்கின் வக்கீல் ரமேஷ் குப்தா.

சோயப் மாலிக் – ஆயிஷா சித்திக்கி விவகாரம் தொடர்பாக ரமேஷ் குப்தா கூறுகையில், 2002ம் ஆண்டு திருமணப் பத்திரத்தில் சோயப் மாலிக் கையெழுத்திட்டது உண்மைதான். ஆனால் சோயப்பிடம் காட்டப்பட்ட புகைப்படத்தில் இருந்த பெண் வேறு, ஆயிஷா வேறு என்பது அப்போது அவருக்குத் தெரியாது.

தனக்கு அனுப்பப்பட்ட புகைப்படத்தில் இருக்கும் பெண்ணைத்தான் மணக்கிறோம் என்று நினைத்துதான் நிக்கநாமாவில் கையெழுத்திட்டார் சோயப் மாலிக். ஆனால் அவர் வேறு,ஆயிஷா வேறு என்பது பின்னர்தான் தெரிய வந்தது.

இது சட்டப்பூர்வமான திருமணமாக கருதப்பட்டாலும் கூட இதனால் சானியாவுடனான திருமணத்திற்கு சட்டரீதியாக சிக்கல் ஏதும் வராது. காரணம், சோயப் மாலிக் சார்ந்த மதத்தில், முதல் மனைவியின் சம்மதம் பெறாமலேயே ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணங்களை செய்ய முடியும் என்றார் குப்தா.

திட்டமிட்டபடி கல்யாணம் – சோயப் மாலிக்

இதற்கிடையே, திட்டமிட்டபடி ஏப்ரல் 15ம் தேதி சானியாவுடன் திருமணம் நடைபெறும் என சோயப் மாலிக் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் ஹைதராபாத்தில் தெரிவிக்கையில்,

கடந்த 2001ம் ஆண்டுதான் ஆயிஷாவுடன் தொலைபேசி மூலம் தொடர்பு ஏற்பட்டது. அவரை நான் நேரில் சந்தித்ததே இல்லை.

ஆயிஷா என்று கூறி அழகான பெண் ஒருவரின் புகைப்படத்தைக் காட்டி அவரது குடும்பத்தினர் ஏமாற்றியதே உண்மை. 2 ஆண்டுகளுக்கு முன்பே இதுதொடர்பாக அவர்களுக்கு நோட்டீஸ் அளித்து அந்தப் பிரச்சினை சரி செய்யப்பட்டு விட்டது.

சானியா மிர்ஸாவைத்தான் நான் முதல் முறையாக மணக்கப் போகிறேன். அவர் தான் எனது முதல் மனைவி. திட்டமிட்டபடி ஏப்ரல் 15ம் தேதிதான் கல்யாணம் நடைபெறும். அதற்கு முன்பாக நடைபெறும் என்று கூறுவது தவறானது. நான் ஏப்ரல் 15ம் தேதி வரை ஹைதராபாத்தில்தான் தங்கியிருப்பேன். திருமண ஏற்பாடுகளை பார்த்துக் கொள்வேன்.

ஆயிஷா சித்திக்கி விவகாரத்தை எனது வக்கீல் பார்த்துக் கொள்வார். சட்ட ரீதியாக அதை சந்திப்பேன்.

திருமணத்திற்குப் பின்னரும் சானியா மிர்ஸா, இந்தியாவுக்காக தொடர்ந்து டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்பார். நானும், எனது குடும்பத்தனரும் சானியாவுக்கு ஆதரவாக இருப்போம்.

ரகசியத் திருமணம்...?

இதற்கிடையே, சானியா மிர்ஸாவின் வீட்டில் கொண்டாட்டங்கள் களை கட்டியிருப்பதால், அவருக்கும் சோயப் மாலிக்குக்கும் ரகசியக் கல்யாணம் நடந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்குக்கும், சானியா மிர்ஸாவுக்கும் திருமணம் என சமீபத்தில் செய்திகள் வெளியாகின. இதையடுத்து ஹைதராபாத்தைச் சேர்ந்த ஆயிஷா சித்திக்கி என்பவரின் குடும்பத்தினர் புதிய சர்ச்சையை எழுப்பினர்.

ஆயிஷாவுடன் சோயப்புக்கு கல்யாணமாகி விட்டது. அவர் விவாகரத்து கொடுத்து விட்டுத்தான் சானியாவை மணக்க வேண்டும் என்று கூறிய ஆயிஷாவின் குடும்பத்தினர் இதுதொடர்பாக திருமணச் சான்றிதழையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். விவாகரத்து செய்யாமல் சானியாவை மணக்க சோயப் முயன்றால் போலீஸில் புகார் கொடுப்போம் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

சோயப், சானியா திருமணம் ஏப்ரல் 15ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திடீரென சோயப் மாலிக் நேற்று முன்தினம் ஹைதராபாத் வந்தார். நேராக சானியாவின் வீட்டுக்குச் சென்றார்.

மொட்டை மாடியில் நின்றபடி செல்போனில் தீவிரமாக பேசியபடி அவர் கணப்பட்டார். அதேசமயம், சானியாவும், அவரது தாயாரும் தீவிரமாக வாதம் செய்தபடி நின்றதை ஜன்னல் வழியாக காண முடிந்தது.

இவற்றையெல்லாம் சானியா வீட்டுக்கு வெளியே குவிந்துள்ள மீடியாக்காரர்கள் பார்த்தபடி இருந்தனர். பாதுகாப்புக்காக போலீஸாரும் சானியா வீட்டின் முன்பு குவிக்கப்பட்டுள்ளனர். சானியா குடும்பத்தினர் கோரியபடி பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று இரவு சானியா விட்டுக்கு அவரது உறவினர்கள், நண்பர்கள் என பலரும் வந்தனர். வீட்டினுள் கொண்டாட்டம் களை கட்டியிருந்தது. மகிழ்ச்சி தாண்டவமாடியது. இதனால் சானியா சோயப் இடையே ரகசியமாக முன்கூட்டயே கல்யாணம் நடந்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும் ஏப்ரல் 15ம் தேதியன்று கல்யாணத்திற்குப் பதில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறலாம் என்றும் கூறப்படுகிறது.

நேற்று இரவு சானியாவும், சோயப்பும் நடனமாடியதாகவும், அவரது உறவினர்கள், நண்பர்கள் அதைக் கண்டு களித்த்தாகவும் தகவல்கள் கூறுகின்றன. இதை சானியா தரப்பு நட்பு வட்டாரமும் உறுதி செய்துள்ளது.

இதற்கிடையே, ஆயிஷா தரப்பில், சோயப் மாலிக் மீது சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்க தீவிரமாக இறங்கியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

Posted in Labels: | 0 comments

சென்னை வெற்றி ! விஜய்,போலிஞ்சர் மிரட்டல் !

விஜயின் அதிரடி சதம் (8 பவுண்டரி, 11 சிக்சர்)

போலிஞ்சரின் அசத்தலான கேட்ச்

Posted in Labels: , | 0 comments
Related Posts Plugin for WordPress, Blogger...