ரஜினி, கமல் விருந்தினர்கள் ? ராஜபக்சே அழைப்பு ...
Posted On Thursday, April 22, 2010 at at 10:22 AM by Twilight Senseஒரு அழைப்பிதழைப் பார்த்து மிரண்டு போயிருக்கிறார்கள் சூப்பர் ஸ்டாரும் உலகநாயகனும்.
இந்த அழைப்பை அனுப்பியிருப்பவர் இருவருக்கும் மிக மிக நெருக்கமான அமிதாப் பச்சன். அப்படியென்ன அழைப்பு அது?
இலங்கையில் நடக்கும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவுக்கு சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொள்ளுமாறு விடுக்கப்பட்டதுதான்.
கொழும்பில் அடுத்த சில தினங்களில் தொடங்கும் இந்த விருது விழாவில் ரஜினி, கமல், விஜய், அஜீத், சூர்யா என முன்னணியில் உள்ள நடிகர்கள் சிறப்புவிருந்தினர்களாகப் பங்கேற்க வேண்டும் என்றும் அவர்களை ராஜபக்சே மற்றும் திரைப்பட விழா குழுவினர் கவுரவிப்பார்கள் என்றும் கூறப்பட்டதாம்.
விஷயம் ரஜினியின் காதுக்குப் போனதும் கடுப்பாகிவிட்ட அவர், இதுகுறித்து பதில் சொல்லக்கூட விரும்பவில்லை என்று கூறி, அழைப்பிதழைத் தூக்கித் தூரப் போட்டுவிட்டாராம்.
கமல்ஹாஸனோ அழைப்பிதழைக் கண்டு கொள்ளவே இல்லையாம். இதையெல்லாம் ஏன் வாங்குகிறீர்கள் என்றும் கோபத்தைக் கொட்டினாராம்.
விஜய் உள்ளிட்ட சில நடிகர்களும் அழைப்பிதழை வாங்கவே மறுப்புத் தெரிவித்துள்ளனர். அதாவது மொத்த முன்னணித் தமிழ்த் திரையுலக நடிகர்களும் இந்த அழைப்பை புறக்கணித்து விட்டனர்.
ஆனால் இலங்கையும் தமிழ் சினிமாவும் எந்த அளவு பிரிக்க முடியாதது என்பதை உணர்ந்த விழாக்குழுவினர், இரண்டாம் கட்ட நடிகர்களுக்கு வலை வீசி வருகிறதாம்.
இன்னொரு முக்கியமான விஷயம் -
இந்த விழாவின் தலைவரான அமிதாப் பச்சனின் மகனும் மருமகளும் ஜோடியாக இந்த விழாவில் பங்கேற்கிறார்கள். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த ராவணன் படத்தின் சிறப்புக் காட்சியை இந்த விழாவில் திரையிடப் போகிறார்க்களாம்.
இதற்காக மணிரத்னத்தை சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள அழைத்துள்ளனர். ஆனால் இலங்கைக்குப் போனால், இங்கு தன் மீது பெரும் மதிப்பு கொண்டுள்ள தமிழ் ரசிகர்களின் கோபத்தைச் சம்பாதிக்க வேண்டி வருமே என்ன செய்வது என இரண்டும்கெட்டான் மனதுடன் தவிக்கிறாராம் மணி ரத்னம்.
ராவணன் பிரச்சினை பெரும் பிரச்சினையாக உள்ளதே என்று தனக்கு நெருங்கியவர்களிடம் கமெண்ட் அடித்துள்ளார் மணி.
சரி... இலங்கை போவீங்களா மாட்டீங்களா..? உங்க ஸ்டைல்ல, ஒரே வார்த்தைல பதில் சொல்லுங்க மணி சார்...!