நித்யானந்தாவுக்கு பிடிவாரன்ட், ரஞ்சிதா எங்கே?

 படுக்கை அறை புகழ் சாமியார் நித்யானந்தாவுக்கு ஸ்ரீபெரும்புதூர் கோர்ட் பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளது.

நடிகை ரஞ்சிதாவுடன் சாமியார் நித்யானந்தா படுக்கை அறையில் இருக்கும் காட்சிகள் வெளியானது, அவரது பக்தர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நித்யானந்தா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, போலீசில் பலர் புகார் செய்துள்ளனர். இது குறித்து கர்நாடக மாநில சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூர் வீராசாமிபிள்ளை தெருவைச் சேர்ந்த வக்கீல் செல்வமணி கடந்த மாதம் 11ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் காவி உடை அணிந்து தவறுகள் செய்த நித்யானந்தா மீது 295ஏ சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வழக்கு தொடர்ந்தார். வழக்கு மறுநாள் விசாரணைக்கு வந்தது. நீதிபதி குணசேகர் விசாரித்தார். மனுவில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டிற்கு ஆரம்பகட்ட முகாந்திரம் இருப்பதாக ஏற்றுக் கொண்டு, சாமியார் நித்யானந்தா கடந்த 2ம் தேதி கோர்ட்டில் ஆஜராக சம்மன் அனுப்பும்படி உத்தரவிட்டார்.

அன்று புனித வெள்ளியையொட்டி கோர்ட் விடுமுறை. எனவே, 19ம் தேதி, நித்யானந்தா, கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் நேற்று நித்யானந்தா ஆஜராகவில்லை. இதைத் தொடர்ந்து நித்யானந்தாவுக்கு நீதிபதி பிடிவாரன்ட் பிறப்பித்தார். அவரை கண்டுபிடித்து மே மாதம் 20ம் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்தும்படி கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்ட போலீஸ் எஸ்.பி.,க்கு நீதிபதி குணசேகரன் உத்தரவு பிறப்பித்துள்ளார். நித்யானந்தாவுக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Posted in Labels: |

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...