காச நோயின் ஜீன் - இந்திய விஞ்ஞாணிகள் கண்டுபிடிப்பு ..
Posted On Monday, April 12, 2010 at at 2:49 PM by Twilight Sense
டெல்லி: காசநோயை ஏற்படுத்தும் மைக்கோபாக்டீரியம் டியூபர்குலோஸிஸ் பாக்டீரியின் ஜீனை இந்திய விஞ்ஞானிகள் குழு மேப்பிங் செய்து சாதனை படைத்துள்ளது. சில மாதங்களிலேயே இந்த சாதனையை அது எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய விஞ்ஞானிகள் காசநோயை ஏற்படுத்தும் ஜீனை மேப்பிங் செய்திருப்புத இதுவே முதல் முறையாகும். இதன் மூலம் ஆண்டு தோறும் இந்தியாவில் 3 லட்சத்து 30 ஆயிரம் இநதியர்களின் உயிரைப் பறித்து வரும் காச நோய்க்கு விலை மலிவான, தரமான, சக்தி வாய்ந்த மருந்தைக் கண்டுபிடிக்கும் பணிகள் எளிதாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதகுறித்து அறிவியல் தொழிலக ஆய்வு கவுன்சில் (CSIR)தலைவர் சமீர் பிரம்மச்சாரி கூறுகையில், 100 அறிவியல் மாணவர்களுடன் இணைந்து இந்த ஆய்வில் இந்திய விஞ்ஞானிகள் குழு ஈடுபட்டிருந்தது. ஆய்வு தொடங்கிய சில மாதங்களிலேயே இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
அடுத்த 18 முதல் 24 மாதங்களுக்குள், மருத்துப் பரிசோதனைக் கட்டத்தை நாம் எட்ட முடியும் எதிர்பார்க்கிறோம்.
இந்திய விஞ்ஞானிகளின் இந்த சாதனை மெய் சிலிர்க்க வைக்கிறது. இதுவரை இப்படி ஒன்றை நாம் செய்ததில்லை. இதில் ஈடுபட்ட அனைவரும் பிரமப்பூட்டும் வகையில் செயல்பட்டுள்ளனர். இந்த முயற்சியில் உலகில் உள்ள யாரும் நம்முடன் இணைந்து செயல்படலாம் என வரவேற்கிறோம் என்றார்.
காசநோய்க்கு உலகம் முழுவதும் ஆண்டு தோறும் பத்தரை லட்சம் பேர் வரை உயிரிழந்து வருகின்றனர். ஆனால் காசநோய்க்கு கடந்த ஐம்பது ஆண்டுகளாக புதிய மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படாமலேயே உள்ளது குறிப்பிடத்தக்கது.
காசநோய்க்கு புதிய வகை மருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில்தான் இந்திய விஞ்ஞானிகள் குழு ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.