நிலநடுக்கம் - பீஜிங் 300 பேர் பலி.
Posted On Wednesday, April 14, 2010 at at 4:54 PM by Twilight Senseபீஜிங் : சீனாவில் வடமேற்கு பகுதியில் இருக்கும் கிங்காய் மாகாணத்தில் இன்று காலையில் ( உள்ளூர் நேரப்படி 7.30 மணிக்கு) பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 7.1 ஆக பதிவாகியது. நிலநடுக்கத்தால் கட்டடங்கள் பயங்கரமாக குலுங்கின. மக்கள் வீடுகளில் இருந்து அலறி அடித்துக் கொண்டு வெளியேறினர். கட்டட இடிபாடுகளில் சிக்கி இதுவரை 300 பேர் பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளது. பலர் இடிபாடுகளுக்குள் புதைந்திருக்கலாம் என்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. 8000 பேர் படுகாயமடைந்துள்ளனர்.திபெத்தில் உள்ள குவாம் டோவை மையமாக வைத்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதே பகுதியில் நேற்று 5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அந்தபகுதி மக்கள் பீதிக்குள்ளாகி இருந்தார்கள். அந்த பீதி மறைவதற்குள் பெரிய நிலநடுக்கம் தாக்கி விட்டது.
மீட்பு பணியில் சுணக்கம் : நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் மீட்பு பணிகள் சற்று மந்தமடைந்துள்ளன. தொலை தொடர்பு துண்டிக்கப்பட்டதால் மீட்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. நிலநடுக்கம் தாக்கிய பகுதியில் 89, 300 பேர் வசித்து வந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் விவசாயிகள்.
கடந்த 2008-ம் ஆண்டு சீனாவின் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 90 ஆயிரம் பேர் பலியானார்கள்.