ஸ்ரீபெரும்புதூரில் மணை விலை குறையுமா?
Posted On Sunday, March 7, 2010 at at 10:10 AM by Twilight Senseசென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் அமைக்க இருந்த கிரீன்பீல்டு ஏர்போர்ட் திட்டம் முற்றிலுமாக கைவிடப்பட்டுவிட்டது.
இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூரில் மணை விலை குறையுமா?
நிலம் விலையை ஏற்ற நடந்த நாடகமாக இருக்குமோ?
இது குறித்து, சென்னை விமான நிலைய ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது: தற்போதுள்ள திரிசூலம் விமான நிலையத்தில் 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான விரிவாக்கப்பணிகள் நடந்து வருகின்றன. தற்போதுள்ள செகண்டரி ரன்வே, 1,400 மீட்டர் நீளம் கொண்டதாக மாற்றப்படுகிறது. தற்போதுள்ள மெயின் ரன்வே போல, புதிதாக ஒரு ரன் வேயும் இங்கு அமைக்கப் பட்டு வருகிறது. இதன் மூலம், ஒரே நேரத்தில் பல விமானங்கள் வந்து செல்ல முடியும். விரிவாக்கம் செய்யப் பட்ட பின், திரிசூலம் விமான நிலையத்தை ஆண்டுக்கு இரண்டு கோடியே 30 லட்சம் பயணிகள் பயன் படுத்தலாம். 140 கவுன்ட்டர்கள், 60 குடியுரிமை கவுன்ட்டர்கள் அங்கு செயல் படும். இதன் மூலம் அடுத்த 25 ஆண்டுகளுக்கு தேவையான விமான போக்குவரத்து வசதி கிடைக்கும். எனவே, புதிய கிரீன் பீல்டு ஏர்போர்ட் தற்போதைக்கு அவசியமில்லை என்று கருதப்படுகிறது. மேலும், திரிசூலம் விமான நிலைய விரிவாக்கத்திற்கு 2,000 கோடி செலவிடப்படுகிறது. மேற் கொண்டு, 2,000 கோடி செலவில் கிரீன்பீல்டு ஏர்போர்ட் இன்றைய நிலையில் அவசியம் இல்லை என்று மத்திய அரசு கருதுகிறது. இவ்வாறு ஆணைய அதிகாரி கூறினார்.
இந்த விரிவாக்க விவகாரம் தமிழக அரசுக்கோ அல்லது நடுவன் அரசுக்கோ முன்கூட்டியே தெரியாதா?
must be a shock to many ppls who bought land, believing that the airport will move there..