நித்யானந்தாவும் ரஞ்சிதாவும் திருமணம் செய்ய திட்டம்

"நித்யானந்தா தனது பிரம்மச்சரியத்தைத் துறந்து, ரஞ்சிதாவைத் திருமணம் செய்து கொள்ளச் சம்மதித்து விட்டார். ஆனால் அப்படி திருமணம் செய்தால் பல ஆயிரம் கோடி சொத்துக்களைக் காப்பாற்ற முடியாது என்பதால் கடைசி நேரத்தில் மறுத்தார். அதன் விளைவுதான் ரஞ்சிதாவும் லெனின் கருப்பனும் திட்டமிட்டு சாமியாரைக் கவிழ்த்தனர்", என்று புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஞ்சிதா ஆரம்பத்தில் நடிகை ராகசுதா மற்றும் ஒரு சினிமா தயாரிப்பாளர் மூலம்தான் சாமியாருக்கு அறிமுகமானாராம். அந்த சமயங்களில் எப்போதாவது ஒருமுறை பெங்களூர் போய் வருவாராம்.

ஆனால் நித்யானந்தாவுக்கு தன்மேல் ஒரு ஈர்ப்பு இருப்பது புரிந்ததும் அங்கே தங்க ஆரம்பித்தாராம். அவரது அந்தரங்க அறைக்குச் சென்று பணிவிடை செய்யும் அளவுக்கு இது வளர்ந்தது. பின்னர் சாமியாரின் பிரம்மச்சரியத்தை பனிக்கட்டியாய் உருக வைத்துவிட்டதாம் ரஞ்சிதாவின் வனப்பு.

சாமியாரை விட ரஞ்சிதா மூன்று வயது மூத்தவராம். ரஞ்சிதாவின் கட்டழகில் கட்டுண்ட சாமியார், அவர் சொன்னதையெல்லாம் கேட்க ஆரம்பித்தாராம். லெனின் கருப்பனுக்கு இந்த விவகாரம் முழுமையாகத் தெரியும் என்கிறார்கள் பெங்களூர் ஆசிரமத்தைச் சேர்ந்தவர்கள்.

இதனால் ஆரம்பத்திலிருந்தே ரஞ்சிதாவை 'அண்ணி' என்றே அழைக்க ஆரம்பித்தாராம் லெனின். இதனை நித்யானந்தரின் செய்லாளர் உள்ளிட்ட ஆசிரம நிர்வாகிகள் வெளிப்படையாகவே இப்போது சொல்கின்றனர்.

ஒரு கட்டத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தபோது, தனது சீடர்கள் மற்றும் மத அமைப்புகளை நினைத்து பயந்தாராம் நித்யானந்தம். அப்போதுதான், பிரம்மச்சர்யத்தைத் துறந்து இல்லற வாழ்க்கையை அனுபவிப்பதாக வெளிப்படையாக அறிவித்த குக்கே சுப்பிரமணிய மடத்தின் சாமியாரை உதாரணமாகச் சொல்லி நித்யானந்தா மனதை மாற்றியுள்ளார் ரஞ்சிதா.

இருவரும் திருமணத்துக்கு தயாரான போது, அதற்கு மடத்தின் முக்கிய நிர்வாகிகள் எதிர்ப்பு தெர்வித்ததோடு, ஆசிரம சொத்துக்களை முடக்கிவிடுவோம் என்றும் எச்சரிக்க, மிரண்டு போன நித்யானந்தா, திருமணத்துக்கு முரண்டு பிடித்துள்ளார்.

அதே நேரம் வேறு சில பெண்களையும் ஆசிரமத்துக்கு வரவழைத்து உல்லாசம் அனுபிவித்துள்ளார். இதை ரஞ்சிதா பார்த்து அதிர்ச்சியடைந்து லெனின் கருப்பனிடம் கூறினாராம். அப்போது உருவானதுதான் இந்த வீடியோ திட்டம் என்கிறார்கள் ஆசிரமத்தைச் சேர்ந்த சிலர். இந்த செக்ஸ் வீடியோ எடுக்கப்பட்டதில் ரஞ்சிதாவின் பங்கை லெனினும் மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து பெங்களூர் நித்யானந்தா மடத்தில் உள்ள நித்யானந்தாவின் அந்தரங்க செயலாளர் சேவானந்தா இப்படிக் கூறியுள்ளார்:
நாங்கள் ஆரம்பத்திலேயே ரஞ்சிதாவையும் லெனினையும் சந்தேகப்பட்டோம். இருவரும்தான் மிக நெருக்கமாக இருப்பார்கள். இருவரும் சேர்ந்து போட்ட சதித்திட்டம்தான் இது என்பது இப்போது தெரிகிறது. இதற்கு மேல் எதுவும் கேட்காதீர்கள்!" என்றார்.

Posted in Labels: |

1 comments:

  1. Anonymous Says:

    CLICK AND READ

    சுவாமிகளும் தேவடியாள்களும்

Related Posts Plugin for WordPress, Blogger...