ஜீவன் முக்தி
Posted On Wednesday, March 10, 2010 at at 9:46 AM by Muthuநம்ம குருஜி எழுதிய புத்தகத்தோட தலைப்புதாங்க இது.
சில ஆண்டுகளுக்கு முன் நித்யானந்தர் எழுதிய 'ஜீவன் முக்தி' என்ற புத்தக வெளியீடு நடந்தது. ஏதோ எல்ஐசி பாலிசி மாதிரி இருக்கே என்று சுலபமாக நினைத்துவிட வேண்டாம். இந்தப் புத்தகத்தின் விலை ரூ 500க்கும் மேல்!
ரொம்ப கிராண்டாக இந்த விழாவை ஏற்பாடு செய்திருந்தனர் நித்யானந்தாவின் தியான பீடத்தினர். இந்த விழாவில் ஆன்மீக உலகைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கவில்லை. ஆனால் சினிமாக்காரர்கள்தான் திரளாகக் கலந்து கொண்டனர்.
புத்தகத்தை வெளியிட்டதே நடிகர் சங்கத் தலைவர் சரத் குமார்தான்.
இவரைத் தவிர எஸ்ஏ சந்திரசேகரன், நடிகர்கள் விவேக், பார்த்திபன், இயக்குநர் பாலுமகேந்திரா, நடிகை மனோரமா என பெரும் திரளானோர் கலந்து கொண்டனர்.
சாம்பிளுக்கு சிலரது பேச்சுகள்:
எஸ்ஏ சந்திரசசேகரன்...
"இந்துக்களுக்கு கீதை, முஸ்லிம்களுக்கு குரான், கிறிஸ்தவர்களுக்கு பைபிள்... ஆனால் மனித குலத்துக்கே புனித நூல் இந்த ஜீவன் முக்தி!"
விவேக்...
"30 வயதில் கலைஞர் பராசக்தி படத்துக்கு வசனம் எழுதினார். ஆனால் இங்கே பராசக்தியே (நித்யானந்தா!!) 30 புத்தகங்களை எழுதியிருக்கிறது...
கதவைத் திறந்த வச்சா திருடன் வந்துடறான், ஜன்னலைத் திறந்து வச்சா பீரோ புல்லிங்... ஆனால் மனசைத் திறடா மகிழ்ச்சி பொங்கும்னு சொன்னாரே என் தலைவன் (நித்யானந்தன்)... அதற்கு இணையான எளிய தத்துவத்தை யாராவது சொல்ல முடியுமா... வாழ்க்கையின் தத்துவங்களை டிசைன் டிசைனா சொல்லியிருக்கும் அரிய பொக்கிஷம் இந்தப் புத்தகம்...."
பார்த்திபன்...
"மனித குலத்துக்கே ஒளிதரும் அரிய ஆன்மீகப் பேரொளி... இந்தப் புத்தகத்தில் இல்லாத விஷயங்களே இல்லை... இந்த ஒரு புத்தகம் வாங்கினால் போதும், ஒரு லைப்ரரியே நம் வீட்டுக்குள் வந்த மாதிரி..."
சரத்குமார்...
"மனிதகுலத்தின் மிகச் சிறந்த குரு நித்யானந்தர்..."