மின்சாரம் இன்றி விவசாயிகள் பெரும் வேதனை அடைந்துள்ளனர் - பழ.நெடுமாறன்
Posted On Monday, April 12, 2010 at at 8:41 PM by Muthu
நெய்வேலி: தமிழகத்தில் மின் பற்றாக்குறை நிலவுவதால் வெளி மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின் வினியோகத்தை தடை செய்ய வேண்டும் என்று தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் வலியுறுத்தி உள்ளார்.
நெய்வேலியில் நேற்று நிருபர்களை சந்தித்தபோது பழ.நெடுமாறன் கூறியதாவது:
தமிழகத்தில் மின் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தொழில்களுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஏராளமான தொழிற்சாலைகள் மூடப்பட்டு விட்டன. பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்கள் வேலைகளை இழந்துள்ளனர்.
மின்சாரம் இன்றி விவசாயிகள் பெரும் வேதனை அடைந்துள்ளனர். இதனால் கோடை காலத்தில் பயிரிட்ட பயிர்கள் அனைத்தும் கருகி பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் நெய்வேலி நிலக்கரி உற்பத்தி நிலையம், கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் இருந்தும் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 80 சதவீதம் பிற மாநிலங்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.
தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தமிழகத்திற்கு மட்டுமே பயன்படுத்த பட வேண்டும்.
அண்மையில் கர்நாடக அரசு உற்பத்தி செய்யும் மின் உற்பத்தியை வெளி மாநிலங்களுக்கு அனுப்புவதை தடை விதித்துள்ளது.
இதனை தமிழக அரசு பின்பற்றி மின்சாரத்தை வெளி மாநிலங்களுக்கு அனுப்புவதை தடை செய்ய வேண்டும்' என்றார்.
காச நோயின் ஜீன் - இந்திய விஞ்ஞாணிகள் கண்டுபிடிப்பு ..
Posted On at at 2:49 PM by Twilight Senseஇந்திய விஞ்ஞானிகள் காசநோயை ஏற்படுத்தும் ஜீனை மேப்பிங் செய்திருப்புத இதுவே முதல் முறையாகும். இதன் மூலம் ஆண்டு தோறும் இந்தியாவில் 3 லட்சத்து 30 ஆயிரம் இநதியர்களின் உயிரைப் பறித்து வரும் காச நோய்க்கு விலை மலிவான, தரமான, சக்தி வாய்ந்த மருந்தைக் கண்டுபிடிக்கும் பணிகள் எளிதாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதகுறித்து அறிவியல் தொழிலக ஆய்வு கவுன்சில் (CSIR)தலைவர் சமீர் பிரம்மச்சாரி கூறுகையில், 100 அறிவியல் மாணவர்களுடன் இணைந்து இந்த ஆய்வில் இந்திய விஞ்ஞானிகள் குழு ஈடுபட்டிருந்தது. ஆய்வு தொடங்கிய சில மாதங்களிலேயே இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
அடுத்த 18 முதல் 24 மாதங்களுக்குள், மருத்துப் பரிசோதனைக் கட்டத்தை நாம் எட்ட முடியும் எதிர்பார்க்கிறோம்.
இந்திய விஞ்ஞானிகளின் இந்த சாதனை மெய் சிலிர்க்க வைக்கிறது. இதுவரை இப்படி ஒன்றை நாம் செய்ததில்லை. இதில் ஈடுபட்ட அனைவரும் பிரமப்பூட்டும் வகையில் செயல்பட்டுள்ளனர். இந்த முயற்சியில் உலகில் உள்ள யாரும் நம்முடன் இணைந்து செயல்படலாம் என வரவேற்கிறோம் என்றார்.
காசநோய்க்கு உலகம் முழுவதும் ஆண்டு தோறும் பத்தரை லட்சம் பேர் வரை உயிரிழந்து வருகின்றனர். ஆனால் காசநோய்க்கு கடந்த ஐம்பது ஆண்டுகளாக புதிய மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படாமலேயே உள்ளது குறிப்பிடத்தக்கது.
காசநோய்க்கு புதிய வகை மருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில்தான் இந்திய விஞ்ஞானிகள் குழு ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
