கேரளாவில் தமிழுக்கு கட்டுப்பாடு
Posted On Tuesday, April 6, 2010 at at 1:55 PM by Muthuதமிழ்ப் படங்கள் கேரளாவில் மே 1-ம் தேதி முதல் இரண்டு வாரங்கள் கழித்தே ரிலீஸ் செய்யப்பட வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம் மற்றும் இந்திப் படங்களையும் இதே போலத்தான் வெளியிட வேண்டும் என முடிவு செய்துள்ளனர்.
கேரள திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் இந்த முடிவை அறிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களாக விண்ணைத் தாண்டி வருவாயா, வேட்டைக்காரன், 3 இடியட்ஸ், அவதார், 2012 போன்ற படங்கள் அதிக வசூலுடன் ஓடிக் கொண்டுள்ளன கேரளாவில். குறிப்பாக ஷாரூக்கானின் மை நேம் ஈஸ் கான் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது கேரளாவில்.
விஜய்யின் சுறா பட கேரள விநியோகத்துக்கு பெரும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதனால் மலையாளப் படங்கள் அடியோடு புறக்கணிக்கப்படுவதாக கேரள சினிமாக்காரர்கள் மத்தியில் புலம்பல் ஆரம்பித்தது. பெரிய நடிகர்கள் மோகன்லால், மம்முட்டி போன்றவர்கள் கேரளாவில் பிற மொழிப் படங்கள் வெளியாவதைத் தடுத்தால் இந்த நிலை மாறும் என பேசி வந்தனர்.
இதைத் தொடர்ந்து, இனி தமிழ், இந்தி மற்றும் ஆங்கிலப் படங்கள் நாட்டின் பிற பகுதிகளில் வெளியாகும் நேரத்தில் கேரளாவில் வெளியாகக் கூடாது என்றும், இரு வாரங்கள் கழித்தே வெளியிட வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல, தமிழ் உள்ளிட்ட பிற மொழிப் படங்களை மட்டும் வெளியிடும் திரையரங்குகள் இனி கட்டாயம் மலையாளப்படங்களையும் வெளியிட்டாக வேண்டும் என்றும், இந்த முடிவுகள் வரும் மே 1-ம் தேதி முதல் கட்டாயமாக அமல்படுத்தப்படும் என்றும் கேரள திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
தங்கமே தமிழுகில்லை கட்டுப்பாடு ஒரு சரக்கு இருக்குது முறுக்கு இருக்குது மேட்டு போடு.