கோவையில் 9ம் வகுப்பு மாணவி ஓவியம் தீட்டி சாதனை முயற்சி

கோவை : கோவையைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி 300 மீ.,ஓவியம் தீட்டி, 'கின்னஸ்' மற்றும் 'லிம்கா' சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.'யுவபாரதி பப்ளிக் பள்ளி' மாணவி பாலசவுந்தர்ய லட்சுமி(13)யின் சாதனை முயற்சியை தடாகம் ரோட்டிலுள்ள, சவுடாம்பிகை அம்மன் திருமண மண்டபத்தில், பேரூர் இளையபட்டம் மருதாசல அடிகள் நேற்று துவக்கி வைத்தார்.


மாணவி பாலசவுந்தர்யலட்சுமி கூறியதாவது:எனது பெற்றோர், மசாலா பொடி தயாரிக்கும் நிறுவனம் நடத்துகின்றனர். பல்வேறு ஓவியப்போட்டிகளில் பங்கேற்று பரிசு பெற்றுள்ளேன். ஓவியம் வரைதலில் சாதனை படைக்க கோவை, தடாகம் ரோட்டிலுள்ள சவுடாம்பிகை அம்மன் திருமண மண்டபத்தில் முயற்சி மேற்கொண் டுள்ளேன். சார்ட் பேப்ரில் 300 மீ., நீளத்தில் 'கடல்சார் உயிரினங்கள்' என்ற தலைப்பில் மூன்று நாட்கள், தினமும் காலை 6.00 முதல் இரவு 10.00 மணி வரை ஓவியம் தீட்டுவேன். நாள் ஒன்றுக்கு 10 நிமிடம் வீதம் மொத்தம் 30 நிமிட இடைவேளை எடுத்துக் கொள்வேன். 'கின்னஸ்' மற்றும் 'லிம்கா' சாதனை புரிவதே எனது குறிக் கோள். எனது முயற்சி வெற்றி பெற்றால், 'உலகளவில் தனி நபர் வரைந்த மிக நீளமான ஓவியம்' என்ற சாதனை பெருமை கிடைக்கும்.இவ்வாறு, பாலசவுந்தர்ய லட்சுமி தெரிவித்தார்.

சாதனையில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...