பிகாசவின் ஓவியம் 106 மில்லியன் டாலருக்கு விற்பனை

வாஷிங்டன்: பிக்காஷோவின் ஓவியமொன்று 106 மில்லியன் டொலர்களுக்கு ஏலம் போனதன் மூலம் புதிய சாதனை படைத்துள்ளது.

கிறீன் லீவ்ஸ் அன்ட் பஸ்ட் என அழைக்கப்படும் 1932 இல் வரையப்பட்ட இந் நிர்வாண ஓவியம் நியூயோர்க்கிலுள்ள கிறிஸ்டி ஏல விற்பனை நிலையத்தில் ஏலத்தில் விடப்பட்டது. இந்த ஓவியம் 1950 இலிருந்து மறைந்த ஓவிய சேகரிப்பாளர்களான பிரான்சிஸ் மற்றும் சிட்னி புரோடிக்கு சொந்தமானதாக இருந்தது.

இந்நிலையில் தொலைபேசி மூலம் கலந்து கொண்ட போட்டியாளரொருவர் இந்த ஓவியத்தை ஏலத்தில் எடுத்தார்.

இது 106 மில்லியன் டொலர்களுக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டதன் மூலம் பெப்ரவரியில் 104.3 மில்லியன் டொலர்களுக்கு ஏலம் போன ஓவியத்தின் சாதனையை முறியடித்துள்ளது.

இந்த ஓவியம் 7090 மில்லியன் டொலர்களுக்கு ஏலம் போகுமென எதிர்பார்க்கப்பட்டதாக ஏல விற்பனை நிலையத்தின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

பெரிய தொகையொன்றுக்கு இந்த ஓவியம் ஏலத்தில் எடுக்கப்பட்டமையானது உலகளாவிய நிதிநெருக்கடியிலிருந்து கலையுலகம் மீண்டு வருகிறது என்பதற்கான அறிகுறியென அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

பி.பி.சி.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...