நியான் விளக்கு வெளிச்சத்துக்குப் பின்னால் இருக்கும் இருட்டு நமக்குத் தெரிவதே இல்லை - வசந்தபாலன்
Posted On Saturday, April 3, 2010 at at 9:41 AM by Muthuஅங்காடி தெரு படம் எதிர்பார்த்தது போலவே வெற்றி பெற்றிருப்பதாக படத்தின் டைரக்டர் வசந்தபாலன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், "நாம் தினசரி சந்திக்கிற மனிதர்கள்தான் அங்காடி தெரு கதையின் நாயகர்கள். அவர்களை நாம் நின்னு கவனிச்சதே இல்லை. சந்தையில் குண்டூசி விற்கும் கடையில் இருந்து குக்கர், தங்கம் விற்கும் கடைவரை தொழிலாளர்கள் நிறைந்து நிற்கிறாங்க. கம்பெனி யூனிபார்மும், ரெடிமேட் சிரிப்புமா நம்மை வரவேற்கிற அவர்களின் முகங்களை பட்டுப்புடவை, நகை தாண்டி நாம என்றைக்காவது ஏறெடுத்துக் கவனிச்சிருக்கோமோ? நியான் விளக்கு வெளிச்சத்துக்குப் பின்னால் இருக்கும் இருட்டு நமக்குத் தெரிவதே இல்லை. இந்தத் தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பற்றி தெரிஞ்சுகிட்டப்ப, எனக்கு ஆச்சர்யம் அந்த ஆச்சர்யத்தை, அனுபவத்தை 500 மணி நேரம் பதிவு செஞ்சேன். அழுக்கும், வியர்வையும் கலந்த அவர்களின் உலகத்தில் காதல், நட்பு, துரோகம், வலி, ஆச்சர்யம், நகைச்சுவை, சுவாரஸ்யம் எல்லாமே இருக்கு. ஒரு ஃபேண்டஸி கதைக்குத் தேவையான சூனியக்காரிகளும், ஆக்ஷன் படங்களுக்குத் தேவையான முரட்டு வில்லன்களும்கூட அவங்களுக்குள்ள ஒளிஞ்சுகிட்டு இருக்காங்க. வழக்கமான நடிகர்கள் இந்த கேரக்டரில் நடிக்க முடியும்னாலும், கதையின் உண்மைத்தன்மைக்குப் பக்கத்தில் ரசிகர்களைக் கொண்டு செல்ல பெரும்பாலும் புதுமுகங்களைப் பயன்படுத்தினேன்.
கற்றது தமிழ் பார்த்து ஈர்க்கப்பட்டுதான் அஞ்சலியை தேடிப் பிடிச்சேன். எப்பவும் அவர் கண்களில் எட்டிப் பார்க்கும் அந்த மென் சோகம் இந்தக் கதைக்குத் தேவையா இருந்தது. அஞ்சலியின் மொத்தத் திறமையும் இந்தப் படத்தில் தெரியும். பொரி வியாபாரம் பண்ணுகிற சாதாரண குடும்பத்திலிருந்து வந்தவர் மகேஷ். சினிமாவுக்கு ஏத்த மாதிரி தன்னை வளர்த்துக்கிட்டார். சில நேரங்களில் இயலாமை வடியும் அவரது வெறும் முகம் மட்டுமே காட்சிகளுக்குப் போதுமானதா இருந்தது. புதுமுக நடிகர்கள், நடிப்பு பயிற்சி, படப்பிடிப்பு விபத்துக்கள், காட்சிப்படுத்துவதற்கான மெனக்கெடல்கள்னு பல காரணங்களால் கொஞ்சம் தாமதமானாலும், தரமான சினிமாவாக வந்து வெற்றி பெற்றிருப்பதில் எனக்கு திருப்தி, மகிழ்ச்சி, என்று கூறியுள்ளார்.
photo arumai nanba