சச்சினுக்கு பாரத் ரத்னா விருது
Posted On Saturday, July 23, 2011 at at 10:02 PM by Twilight Sense
டெல்லி: இந்திய கிரிக்கெட் கடவுள் என ரசிகர்களால் வர்ணிக்கப்படும் சச்சின் டெண்டுல்கருக்கு பாரத் ரத்னா கிடைப்பதற்கான வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.
இதுவரை பாரத் ரத்னா விருதுக்குரிய பிரிவுகளில் விளையாட்டுத் துறை இல்லாமலிருந்தது. இப்போது இந்தத் துறையையும் சேர்க்க பிரதமர் அலுவலகத்துக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சச்சினுக்காகவே இந்த பரிந்துரை என தகவல் வெளியாகியுள்ளதால், உலகெங்கும் உள்ள சச்சின் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி கொண்டுள்ளனர்.
ப சிதம்பரம் தலைமையிலான மத்திய உள்துறை அமைச்சகம்தான் இந்த பரிந்துரையை பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பியுள்ளார்.
ஏற்கெனவே சச்சினுக்கு பாரத் ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் உள்பட மத்திய அமைச்சர்கள் பலரும் பிரதமருக்கு வலியுறுத்தல் கடிதம் கொடுத்துவிட்டனர். மும்பை கிரிக்கெட் சங்கமும் பரிந்துரைத்துள்ளது.
எனவே இந்த ஆண்டே சச்சினுக்கு இந்த புதிய கவுரவம் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதுவரை ஜவஹர்லால் நேரு, பெருந்தலைவர் காமராஜர், அமரர் எம்ஜிஆர், நெல்சன் மண்டேலா, டாக்டர் அப்துல் கலாம் உள்பட 41 தலைவர்கள் மற்றும் சாதனையாளர்களுக்கு பாரத் ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது.