ஒரே நாளில் ஒரு லட்சம்

டெல்லி: வங்கியின் ஏடிஎம் (டெபிட் கார்டுகள்) மூலம் இனி ஏடிஎம்களில் நாளொன்றுக்கு ரூ.1 லட்சம் வரை பணம் எடுக்க முடியும்.

அதேபோல டெபிட் கார்ட் மூலம் ரூ.1.25 லட்சம் வரை பொருட்களையும் வாங்கிக் கொள்ளலாம்.

மேலும் ரூ.3 லட்சம் வரை பணத்தை ஒரு கணக்கிலிருந்து மற்றொரு கணக்குக்கு ஒரே நாளில் மாற்றும் வசதியும் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இந்த அளவு தொகையை எடுக்கவோ மாற்றவோ வாடிக்கையாளர்கள் வங்கிகள் பணி நேரத்திலேயே ஒரு வங்கிக் கிளையிலிருந்து மற்றொரு வங்கிக் கிளைக்குச் செல்ல வேண்டியுள்ளது. இதைத் தவிர்க்க நாளை முதல் (ஜூன் 1) நாளொன்றுக்கு டெபிட் அட்டைகள் மூலம் ஏடிஎம்களில் வாடிக்கையாளர்கள் ரூ.1 லட்சம் எடுக்கும் வசதியை எச்டிஎப்சி வங்கி அறிமுகம் செய்யவுள்ளது.

பிற வங்கிகளும் ஜூன் 1ம் தேதிக்குப் பிறகு அறிமுகப்படுத்த உள்ளன.

இப்போது ரூ.25 ஆயிரம் மட்டுமே டெபிட் கார்ட் மூலம் ஒரு நாளைக்கு எடுக்க முடியும். அதுவும் சில வங்கிகளில் இரு தவணைகளாக எடுக்க வேண்டும். இனி இந்த சிக்கல் வாடிக்கையாளர்களுக்கு இருக்காது.

அதே நேரம் வங்கிகளிலும் கூட்டம் அலைமோதுவது தவிர்க்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Posted in Labels: |

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...