"லைலா" பெயர் உருவான கதை.

யார் இந்த பெயர் சுட்டுபவர்கள் ?





புதுடில்லி : தற்போது வங்கக் கடலில் உருவாகியுள்ள புயலுக்கு, "லைலா' என்ற பெயர் எப்படி வந்தது என்பது குறித்த சுவையான தகவல்கள் வெளியாகியுள்ளன.


இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது: வங்கக் கடல் மற்றும் அரபிக் கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும் நடைமுறை 2004ம் ஆண்டில் உருவானது. இந்திய வானிலை ஆய்வு மையம், இந்தப் பிராந்தியத்தில் உள்ள சிறப்பு வாய்ந்த வானிலை ஆய்வு மையம் என்பதால், இந்தியா தவிர வங்கதேசம், மாலத்தீவு, மியான்மர், ஓமன், பாகிஸ்தான், தாய்லாந்து மற்றும் இலங்கைக்கும் வானிலை தொடர்பான முன் அறிவிப்புகளை வழங்கும். அப்படி வானிலை பற்றிய தகவல்களைத் தரும் போது, புயல்களுக்கு என்னென்ன பெயர்கள் வைக்கலாம் என்பதை தெரிவிக் கும்படி, அந்த நாடுகளை கேட் டது. பின்னர் உறுப்பினர் நாடுகள் தெரிவித்த பெயர்களை அகர வரிசைப்படி பட்டியலிட்டுள் ளது.

இந்த பெயர்கள் சிறிய வார்த்தை கொண்டதாவும், உச்சரிப்பதற்கு எளிதாகவும் இருக்க வேண்டும். பண்பாட்டிற்கு எதிரானதாகவோ, மற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவோ இருக்கக் கூடாது. அப்படி உறுப்பினர் நாடுகள் தெரிவித்த 64 பெயர்களில், 22 பெயர்கள் இதுவரை உருவான புயல்களுக்கு சூட்டப்பட்டுள் ளன. தற்போதைய புயலுக்கு சூட் டப்பட்டுள்ள, "லைலா' என்ற பெயர் பாகிஸ்தானால், தெரிவிக்கப்பட்ட பெயர். அடுத்து ஒரு புயல் உருவானால், அதற்கு, "பந்து' என, பெயரிடப்படும். இந்தப் பெயரை இலங்கை அரசு பரிந்துரை செய் துள்ளது. மாலத்தீவு பரிந்துரைத்த "அய்லா', இந்தியா பரிந்துரைத்த "பிஜ்லி' ஆகிய பெயர்கள், கடந்த ஆண்டு ஏற்பட்ட புயல்களுக்கு வைக்கப்பட்டன.

புயல்களுக்கு பெயரிடும் வழக்கம் 20ம் நூற் றாண்டின் முற்பகுதியிலும் இருந்துள்ளது. அப்போது, ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையத்தினர், தங்களுக்கு பிடிக்காத அரசியல் வாதிகளின் பெயர்களை புயல்களுக்கு சூட்டியுள்ளனர். அமெரிக்காவில் 1954ம் ஆண்டில் புயல்களுக்கு பெயர் சூட்டும் நடைமுறை வந்துள்ளது. வானிலை ஆய்வு மையங்கள் பல விதமான பெயர்களைச் சூட்டி குழப்பம் உண்டாக்குவதை தடுக்கவும், இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. லைலா என்றால், கருங்கூந்தல் அழகி என்று பெயர் அல்லது பாரசீக இரவு என, அர்த்தமாகும். இவ்வாறு வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறினார்.

Posted in Labels: , |

1 comments:

  1. ரோஸ்விக் Says:

    தகவலுக்கு நன்றி நண்பரே!

    Kindly remove word verification for comments. :-)

Related Posts Plugin for WordPress, Blogger...