தினமும் ஒரு பீர்
Posted On Wednesday, February 17, 2010 at at 10:00 PM by Twilight Senseபுதுடில்லி:தினமும் ஒன்று அல்லது இரண்டு கோப்பை பீர் குடித்தால் எலும்புகள் பலமடையும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.ஐம்பது வயதுக்கு மேற்பட்ட பெண்களில் இருவரில் ஒருவர், ஆண்களில் மூன்றில் ஒருவருக்கு எலும்புகள் பலமிழக்கின்றன. இதனால், ஒரு கட்டத்தில் எலும்பு முறிவு ஏற்படுகிறது. சுண்ணாம்பு சத்து அதிகம் உள்ள பால், முட்டைகோஸ், சோயா, மற்றும் மீன்கள், பாதாம் பருப்பு, பீன்ஸ் ஆகியவற்றை சாப்பிடுவதால் எலும்புகளின் பலம் கூடுகிறது என, மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
டில்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனை டாக்டர் அம்ரீஷ் மித்தல் கூறியதாவது:தினமும் ஒன்று அல்லது இரண்டு கோப்பை பீர் அருந்தினால் எலும்புகள் வலுப்பெறுவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பீரில் உள்ள சிலிகான், திரவ வடிவத்தில் உள்ளதால் உடலில் எளிதில் உறிஞ்சப்பட்டு எலும்புகள் பலமடைய உதவுகின்றன. அரை லிட்டருக்கும் குறைவாக உட்கொண்டால் தான் இந்த பலன் கிடைக்கும். 500 மில்லி லிட்டருக்கு அதிகமானால், எதிர்விளைவுகளை ஏற்படுத்தி விடும், என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர். அதிகப்படியான பீர் உடலில் உள்ள நோயின் தன்மையை அதிகரித்து விடும். அதாவது,நீரிழிவு, மாரடைப்பு ஆகியவையெல்லாம் அதிகரிப்பதற்கு கூடுதலான பீர் வழிவகுத்துவிடும்.இவ்வாறு அம்ரீஷ் கூறினார்.