டாஸ்மாக்கில் 'ஃபாரின்' சரக்கு: 'குடி'மக்கள் குதுகலம்..

சென்னை: சென்னை டாஸ்மாக் மதுக்கடைகளில் வெளிநாட்டு ஸ்காட்ச், ரம், விஸ்கி, ஒயின் மதுவகைகள் விற்பனை செய்யப்படுகின்றன.
தமிழக டாஸ்மாக் மதுபானக் கடைகளில் பீர், விஸ்கி, பிராந்தி, ரம், ஒயின் என்ற பலவிதமான மது வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன.
ஆனால் இவையெல்லாம் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மது ரகங்கள் ஆகும். வெளிநாட்டு மது வகைகளின் விற்பனை தவிர்க்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது ஸ்காட்ச் ரகத்தில் 27 விதமான நேரடி வெளிநாட்டு மதுபானங்கள் டாஸ்மாக் கடைகளில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன.
ஜானி வாக்கர் ரெட் லேபிள் ஸ்காட்ச், பிளாக் லேபிள் ஸ்காட்ச், கட்டி சாக் ஸ்காட் விஸ்கி, பக்கார்டி கேட் பிளாங்கா ரம், பக்கார்டி பிளோட் ரம், டோரசஸ் சார்டோனி ஓயிட் ஓயின், பாம்பே சபையர் ஜின், கிளெமோரிஞ்ச் பிளாக் ஓரிஜினல் எஸ்.எம்.விஸ்கி, சோல் டி சிலி மெர்லோட் ஓயின் என பல்வேறு பிராண்டுகள் விற்கப்படுகின்றன.
குறைந்தபட்ச விலையாக ரூ.1,395 (சோல் டி சிலி மெர்லோட் ஓயின்) முதல் அதிகபட்சம் ரூ.5,580 (கிளெமோரிஞ்ச் பிளாக் ஓரிஜினல் எஸ்.எம். விஸ்கி) வரை விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஸ்பென்சர், அண்ணா நகர் மேற்கு உள்பட 4 டாஸ்மாக் கடைகளில் இவை கிடைக்கும். வரும் மார்ச் மாதம் முதல் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் வெளிநாட்டு மதுபானங்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
எனவே 'குடி'மக்கள் வெளிநாட்டு சரக்கைத் தேடி அலைந்து திரிந்து அவதிப்படத் தேவையில்லை. டாஸ்மாக் கடைகளிலேயே அவர்களது அனைத்துத் தேவைகளும் இனி பூர்த்தியாகி விடும்!

Posted in Labels: |

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...