மத்திய பட்ஜெட் 2010-11
Posted On Friday, February 26, 2010 at at 12:29 PM by Muthu'ரூ. 5 லட்சம் to 8 லட்சம் வருமானம் உள்ளவர்களுக்கு 20% வருமான வரி'
டெல்லி: நாடாளுமன்றத்தில் இன்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்து வரும் butjet முக்கிய அம்சங்கள்:
-இந்த வருமான வரி சலுகையால் ரூ. 26,000 கோடி இழப்பு ஏற்படும்
-நீண்டகால அடிப்படைக் கட்டமைப்புத் திட்ட பத்திரங்களில் முதலீடு செய்தால் ரூ. 20,000 முதலீடு செய்தால் வரி சலுகை கிடைக்கும்
-இந்த புதிய வருமான வரி சலுகை மூலம் 60 சதவீத வருமான வரி செலுத்துவோர் பயன் பெறுவர்.
-ஆண்டுக்கு ரூ. 1.6 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு முழு வருமான வரி விலக்கு தொடரும்
-ரூ. 1.6 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு வரி 10 சதவீதமாக இருக்கும். (இதுவரை ரூ. 3 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு 20 சதவீத வருமான வரி இருந்தது.)
-ரூ. 5 லட்சத்தி்ல் இருந்து 8 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி 20 சதவீதம்
-ரூ. 8 லட்சத்துக்கு மேல் வருட வருமானம் உள்ளவர்களுக்கு வரி 30 சதவீதமாக தொடரும்
-பாதுகாப்புத்துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ. 6,000 கோடி அதிகரிப்பு
-உணவுப் பற்றாக்குறையை தனியார் துறை உதவியோடு வெல்வோம்
-பாதுகாப்புத் துறைக்கு ரூ. 1.47 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு
-ஒருங்கிணைந்த தேசிய அடையாள அட்டை திட்டத்துக்கு ரூ. 1900 கோடி
-இந்த ஆண்டு நிதிப் பற்றாக்குறை 6.9%. 2011ம் ஆண்டில் இதை 5.5 சதவீதமாக குறைக்க திட்டம்
-திட்ட செலவுகள் 15 சதவீதம் அதிகரித்துள்ளது
-மொத்த வரி வருமானம் ரூ. 7.46 லட்சம் கோடியாக இருக்கும்
-பெண் விவசாயிகள் நலத் திட்டத்துக்கு ரூ. 100 கோடி
-சிறுபான்மையினர் நலத்துறைக்கு ரூ. 2600 கோடி
-ரூ. 20 லட்சம் வரையிலான வீட்டுக் கடன்களுக்கு 1 சதவீத வட்டிச் சலுகை.
-ரூ. 1000 கோடியில் அங்கீகரிக்கப்படாத தொழில் பிரிவினருக்கான சமூக பாதுகாப்பு நிதியம்.
ஊரக வளர்ச்சிக்கு ரூ. 66,1000 கோடி ஒதுக்கீடு
-குறைந்த விலை வீடுகளுக்கான மானியம் நீட்டிப்பு. குடிசையில்லா நகர்களை உருவாக்க திட்டம்
-மகளிர், குழந்தைகள் நலனுக்கு ரூ.22,300 கோடி
-தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட பணியாளர்களுக்கு 'ஸ்மார்ட் கார்ட்'
-தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட பணியாளர்களுக்கு காப்பீட்டு திட்டம்
-மகளிர், குழந்தைகள் நலனுக்கான நிதி 50 சதவீதம்
அதிகரிப்பு
-நகர்ப்புற வளர்ச்சி, நகர்ப்புற ஏழைகள் நலனுக்கு ரூ. 5,400 கோடி
-இந்திரா ஆவாஸ் யோஜனா திட்டத்திற்கு ரூ. 10,000 கோடி
-புந்தல்கந்த் வறட்சி நிவாரணத்திற்கு ரூ. 1200 கோடி நிதியுதவி
-2000 மக்கள் தொகை கொண்ட எல்லா கிராமங்களிலும் வஙகிகள் திறக்கப்படும்
-பாரத் நிர்மான் திட்டத்திற்கு ரூ. 48,000 கோடி
-தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு ரூ. 40,100 கோடி ஒதுக்கீடு
-பள்ளிக் கல்வித் திட்டங்களுக்கு ரூ. 31600 கோடி
-சுகாதாரத் துறை திட்டங்களுக்கு ரூ. 22,300 கோடி
-இப்போதைய பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதமாக உள்ளது
மத்திய பட்ஜெட் 2010-11 முக்கிய அம்சங்கள்
-2020ம் ஆண்டில் 20,000 மெகாவாட் சூரிய மின்சக்தி உற்பத்தி திட்டம்
-ஊரக வளர்ச்சிக்கான நிதி 25 சதவீதம் அதிகரிப்பு
-உணவுப் பாதுகாப்பு சட்ட மசோதா தயார்
-மின் சக்தித் துறைக்கு ரூ. 5130 கோடி
-சாலை கட்டமைப்பு வசதியைப் பெருக்க ரூ. 19894 கோடி
-அடிப்படைக் கட்டமைப்பு வசதி மேம்பாட்டுக்கு ரூ. 1.73 லட்சம் கோடி
-மரபு சாரா எரிசக்தித் திட்டங்களுக்கு ரூ. 1000 கோடி நிதி ஒதுக்கீடு.
-தேசிய மாசு இல்லா எரிபொருள் நிதியம் அமைக்கப்படும்
-விவசாயக் கடன்களுக்கு 2 சதவீத மானியம்
-திருப்பூர் ஜவுளித்துறையின் வளர்ச்சிக்கு மாநில அரசுக்கு ரூ. 200 கோடி நிதியுதவி
வங்கித் துறையில் தனியாரை ஊக்குவிக்க நடவடிக்கை
சில்லறை வர்த்தகம் தொடர்பான உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
-2011ம் ஆண்டில் ரூ. 3.75 லட்சம் கோடி விவசாயக் கடன் வழங்க இலக்கு.
-5 மாபெரும் உணவுப் பூங்காங்கள் அமைக்கப்படும்
-தினந்தோறும் 20 கி.மீ புதிய தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்படும்
-அதிக பொருளாதார மண்டலங்கள் அமைக்க திட்டம்
-நெடுஞ்சாலைகள் மேம்பாட்டுக்கு 13 சதவீத கூடுதல் நிதி
-வறட்சி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கடனை திருப்பிச் செலுத்த கால அவகாசம் மேலும் 6 மாதம் நீட்டிப்பு
-வட கிழக்கில் விவசாயத்துறையை ஊக்குவிக்க ரூ. 400 கோடி நிதியுதவி
-ஏற்றுமதியை ஊக்குவிக்க 2 சதவீத வரி சலுகை நீட்டிப்பு
-அரசு வங்கிகள் விவசாய கடன்களை அதிக அளவில் அளித்து வருகின்றன
-ஊரக வங்கிகளை மேலும் ஸ்திரப்படுத்த கூடுதல் நிதி
-விவசாய வளர்ச்சிக்கு 4 அம்ச திட்டம்
-அரசு பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ. 16,000 கோடி உதவி
-பெட்ரோலிய விலைகள் குறித்த பாரிக் கமிட்டி பரிந்துரையை அமலாக்க யோசனை
-2 மாதங்களில் பணவீக்கம் கட்டுப்படுத்தப்படும்
-வெளிநாட்டு நேரடி முதலீட்டு கொள்கை மேலும் எளிமையாக்கப்படும்.
-மேலும் அதிக தனியார் வங்கிகளுக்கு லைசென்ஸ்கள் தரப்படும்
-சமூக பொருளாதார திட்டங்களுக்கு அதிக நிதி
-தனியார் முதலீடுகளால் 9 சதவீத வளர்ச்சி நிச்சயம் சாத்தியம்
-நேரடி வரிகள் தொடர்பாக ஏப்ரல் 1ம் தேதி முதல் புது திட்டம்
-உரங்கள் மீதான மானியம் குறைக்கப்படும்
-இந்த ஆண்டு பொதுத்துறை நிறுவனங்களில் இருந்து ரூ. 25,000 கோடி அரசு முதலீட்டை வாபஸ் பெற இலக்கு
-விரைவில் 10 சதவீத பொருளாதார வளர்ச்சி எட்டப்படும்
-அரசுச் செலவீனங்களைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்
-இரண்டு இலக்க பணவீக்கம் பெரும் கவலையளிக்கிறது
-உலக பொருளாதார சிக்கலால் அறிமுகப்படுத்தப்பட்ட பொருளாதார சலுகைளை மறுபரிசீலனை செய்ய வேண்டியுள்ளது
-உற்பத்தித்துறை 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெரும் வளர்ச்சி கண்டுள்ளது
-பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வால் பணவீக்கம்-விலைவாசி உயர்ந்தது
-உலக பொருளாதார சிக்கலை இந்தியா திறம்பட சமாளித்தது
-உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முயற்சி
-ஊரக அடிப்படை கட்டமைப்பு வளர்ச்சிக்கு முக்கியத்துவம்
-அதிக பொருளாதார வளர்ச்சியை எட்டுவதே முக்கிய இலக்கு
-8 வருடங்களுக்கு முன்பிருந்ததை விட பொருளாதாரம் சிறப்பாக உள்ளது
-தென் மேற்கு பருவ மழை பொய்த்ததால் உணவு உற்பத்தி பாதிப்பு
-கடந்த பட்ஜெட்டின்போது பொருளாதார நிலைமை மிக மோசமாக இருந்தது. இப்போது நிலைமை மிகவும் முன்னேறியுள்ளது