சினிமா ஒரு glamour உலகம்
Posted On Tuesday, March 30, 2010 at at 9:48 AM by Twilight Senseசினிமா ஒரு கிளாமர் உலகம். இங்கு ஜெயித்தால் ஆகாயத்துக்கு தூக்குவார்கள். தோற்றால் படு பாதாளத்தில் தள்ளி விடுவார்கள் என்று நடிகை நயன்தாரா கூறியுள்ளார். சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில், 2003ம் ஆண்டு சினிமாவுக்கு வந்தேன். ஒரு படத்தோடு எல்லாம் முடிஞ்சிடும்னு நினைச்சேன். ஆனால் காலம் என்னை எங்கேயோ கொண்டு வந்து நிறுத்திடுச்சி. ஏகப்பட்ட பெயர், புகழ் கிடைத்திருக்கிறது. நிறைய வதந்திகளையும் சந்தித்து விட்டேன். என் படம் வெற்றிப்பெற்றால் சந்தோஷப்படுவேன். தோல்வியானால் ரொம்ப வருத்தப்படுவேன். இடைப்பட்ட காலத்தில் அப்படி வருத்தப்பட அவசியம் இல்லாமல் போச்சு. தமிழில் நடித்த ஆதவன், மலையாளத்தில் நடித்த பாடிகார்ட், தெலுங்கில் அடூர் ஆகிய மூன்று படங்களும் அடுத்தடுத்து ரிலீசாகி வெற்றிப்படமாக அமைந்தன. இதைவிட பெரிய சந்தோஷம் என்ன இருக்கு. இந்த படங்களில் நடிக்கும் போது அவை ஜெயிக்கும் என்று நம்பினேன். என் கணிப்பு பலித்துவிட்டது, என்று கூறியுள்ளார்.
திருமணம் பற்றி நயன்தாரா கூறுகையில், என்னை சந்திக்கிறவர்கள் பலர் மீனா, நவ்யா நாயருக்கு திருமணம் முடிந்து விட்டது. ரம்பாவுக்கு திருமணம் நடக்கப்போகிறது. உங்கள் திருமணம் எப்போது என்று கேட்கிறார்கள். இந்த கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை. திருமணம் முக்கியமானது. அது நடக்கும்போது நடக்கும். எனக்கு ஒரு வேளை காதல் திருமணம் நடந்தால் அது என் அப்பா, அம்மா, துபாயில் வசிக்கும் அண்ணன் போன்றோரின் சம்மதத்துடன்தான் நடக்கும், என்றார்.
சினிமா நடிகைகள் எது செய்தாலும் அது பரபரப்பான செய்தியாகி விடுகிறது. நான் மூக்கூத்தி அணிந்ததை கூட ஏதோ ரகசியம் இருக்கு என்று கிசுகிசுவாக்கிவிட்டார்கள். மூக்குத்தி போட்டால் நல்லா இருக்கும் என்று சொன்னதால்தான் போட்டேன். குறிப்பிட்ட ஹீரோக்களுடன்தான் நடிப்பேன் என்று நான் சொல்வது இல்லை. கதையும் கேரக்டரும் சிறப்பா இருந்தால் யாருடன் வேண்டுமானாலும் நடிப்பேன். எனக்கு எந்த பேதமும் இல்லை. என்னைப் பற்றி நிறைய வதந்திகள் வருகின்றன. அவற்றுக்கு பதில் அளிக்க விருப்பம் இல்லை. ஆரம்பத்தில் இந்த வதந்திகள் என் மனதை பாதித்தது. இப்போது பழகி விட்டேன். வருத்தப்படுவது இல்லை. என்னை நம்புபவர்கள் இருக்கிறார்கள். சினிமா ஒரு கிளாமர் உலகம். இங்கு ஜெயித்தால் ஆகாயத்துக்கு தூக்குவார்கள். தோற்றால் பாதாளத்தில் தள்ளி விடுவார்கள் என்பதை நன்றாக புரிந்து வைத்திருப்பதாகவும் நயன்தாரா கூறியுள்ளார்.
இன்டர்நெட் மூலம் அறிமுகமாகும் பெண்களுடன் செக்ஸ் உறவு வைத்து விட வேண்டும் என்று பெரும்பாலான ஆண்கள் நினைக்கிறார்கள்.
Posted On Sunday, March 28, 2010 at at 11:16 AM by Muthuலண்டன்: இங்கிலாந்தில் செக்ஸ் தொடர்பான நோய்களின் அதிகரிப்புக்கு ஃபேஸ்புக் முக்கியக் காரணமாக திகழ்வதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
செக்ஸ் நோய்கள் அங்கு பல மடங்கு அதிகரித்து விட்டதாம். இதற்கு ஃபேஸ்புக்தான் முக்கிய காரணமாக இருப்பதாக அந்த ஆய்வுத் தகவல் தெரிவிக்கிறது.
இங்கிலாந்தில் சிபிலிஸ் நோயின் தாக்குதல் கடந்த காலங்களை விட தற்போது நான்கு மடங்கு அதிகரித்து விட்டதாம். இதற்கு முன்பின் அறியாதவர்களுடன் ஃபேஸ்புக் மூலம் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு செக்ஸ் உறவு கொள்வதுதான் காரணம் என்கிறது அந்த ஆய்வு.
இதுகுறித்து ஆய்வை நடத்திய பொது சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் பீட்டர் கெல்லி கூறுகையில், சிபிலிஸ் நோயின் தாக்குதல் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. ஏராளமான இளம் பெண்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இவர்களில் பெரும்பாலானவர்கள், இணையதளங்கள் மூலம் குறிப்பாக ஃபேஸ்புக் மூலம் அறிமுகம் இல்லாதவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு செக்ஸ் உறவு வைத்திருப்பதாக கூறியுள்ளனர்.
சோஷியல் நெட்வொர்க்கிங் இணையதளங்கள், சம்பந்தமே இல்லாதவர்களைக் கூட எளிதில் தொடர்பு கொள்ள வைக்க உதவுகிறது. இது செக்ஸ் நோய்களின் அதிகரிப்புக்குக் காரணமாக விடுகிறது.
20 ஆண்டுகளுக்கு முன்புதான் சிபிலிஸ் நோய் மிகப் பெரிய வியாதியாக இருந்தது. அப்போது ஆணுறையை அதிகம் பேர் பயன்படுத்தியதில்லை. ஆனால் இப்போது ஆணுறை குறித்த விழிப்புணர்வு அதிகம் உள்ள இந்தக் காலகட்டத்திலும் சிபிலிஸ் வேகமாகப் பரவுவது வியப்பாக உள்ளது.
பெண்களில் 20 முதல் 24 வயதுக்குட்பட்டோருக்குத்தான் சிபிலிஸ் அதிகம் தாக்கியுள்ளது. ஆண்களைப் பொறுத்தவரை 25 முதல் 34 வயது வரையிலானோரே பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்டர்நெட் மூலம் அறிமுகமாகும் பெண்களுடன் செக்ஸ் உறவு வைத்து விட வேண்டும் என்று பெரும்பாலான ஆண்கள் நினைக்கிறார்கள். இவர்களைப் போன்றோருக்கு ஃபேஸ்புக் மிகப் பெரிய வடிகாலாக உள்ளது என்றார் கெல்லி.
