வசூல் ராஜாக்கள் - பிபி, எல்.எஸ்.எஸ்,சூப்பர் டீலக்ஸ், அல்ட்ரா டீலக்ஸ்......
Posted On Friday, May 14, 2010 at at 11:02 PM by Muthuவிருதுநகர்: சாதாரண பேருந்துகளை நிறுத்தி விட்டு பிபி, எல்.எஸ்.எஸ்,சூப்பர் டீலக்ஸ், அல்ட்ரா டீலக்ஸ் என பெயரை மாற்றி மக்களிடம் கட்டணத்தை அதிகமாக வசூலிக்கின்றனர் என்று சிஐடியு மாநில பொதுச் செயலாளர் அ.சவுந்தரராசன் குற்றம் சாட்டினார்.
இது குறித்து விருதுநகரில் சிஐடியு மாநில பொதுச் செயலாளர் அ.சவுந்தரராசன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
புதிய போக்குவரத்து வழித் தடங்களை அரசே இயக்காமல் தனியாருக்கு தாரைவார்க்கப்படுகின்றது.
தனியார் பேருந்து வேகமாக செல்ல அனுமதிக்கப்படுகிறது. ஆனால், அரசு பேருந்து வேகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், தனியாரோடு போட்டி போட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
சென்னையில் மட்டும் மினி பஸ்சை அரசு இயக்கும் என அமைச்சர் அறிவிக்கிறார். ஆனால் மற்ற பகுதிகளில் அதை செய்யவில்லை.
அரசு விரைவுப் பேருந்துகளை விட 2 மடங்கு கட்டணம் கூடுதலாக ஆம்னி பஸ்களில் வசூல் செய்யப்படுகிறது. இதற்கு நீதி தேடி நீதிமன்றம் சென்றாலும் உரிய பலன் கிடைக்கவில்லை. வெறும் அபராதம் மட்டுமே போடப்படுகிறது.
பராமரிப்பு பிரிவில் 17 ஆயிரம் வேண்டும். ஆனால் தற்போது 12 ஆயிரம் பேர் மட்டுமே உள்ளனர். பணி உயர்வு இல்லை. ஏற்கெனவே போட்ட ஒப்பந்தத்தில் இன்னும் 19 சரத்துகள் அமலாகவில்லை.
விபத்து ஏற்பட்டால் கொலைக் குற்றவாளியை போல் பார்க்கும் நிலை உள்ளது. அதை விபத்தாகத்தான் பார்க்க வேண்டும். ஜாமீன் மறுப்பு, லைசென்ஸ் ரத்து போன்றவை செய்யப்படுகிறது. இதனால் போக்குவரத்து தொழிலாளர்கள் குடும்ங்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன.
தமிழகத்தில் மறைமுக பேருந்து கட்டண உயர்வு செய்துவிட்டு அமைச்சர் உயர்த்தவில்லை என்கிறார்.
தற்போது சாதா பேருந்துகளை நிறுத்தி விட்டு பிபி, எல்.எஸ்.எஸ்,சூப்பர் டீலக்ஸ், அல்ட்ரா டீலக்ஸ் என பெயரை மாற்றி மக்களிடம் கட்டணத்தை அதிகமாக வசூலிக்கின்றனர் என்று குற்றம் சாட்டினார்.