இன்றைய சிந்தனை. 8

* மனிதனுக்கு எட்டுவித பந்தங்கள் இருக்கின்றன. அதை வெட்கம், வெறுப்பு, அச்சம், ஜாதிச்செருக்கு, வம்சவழிச்செருக்கு, சீலம், துயரம், உள்ளத்தில் ஒளித்துவைத்தல் என்பனவாகும். குரு கடாட்சமின்றி இவற்றை யாரும் விட்டு விட முடியாது.
* மலத்தில் உதித்து மலத்திலேயே வாழ்ந்துவருகிற புழு ஒன்று, சந்தனத்தில் எடுத்துவைத்தால் அது செத்துப்போகும். அதுபோன்று கலகப் பற்றுடைய ஒருவனை நல்லார் இணக்கத்தில் சேர்த்துவைத்தால் அவன் பெருந்துன்பத்துக்கு ஆளாவான்.

* உலக வாழ்க்கையில் சத்து ஒன்றும் இல்லை. ஆயினும் உலகப் பற்றுடையவன் அதைத் தெரிந்திருந்தும் அதை விட்டுவிடமாட்டான்.

* கயமையில் உழல்பவர்களுக்குக் கடவுள் விசுவாசம் வருவதில்லை. அவர்கள் எப்பொழுதும் சந்தேகப் பேர்வழிகள். ஆனால் சந்தேகம் யாருக்குமே அடியோடு அகன்று போவதில்லை. பிரம்மஞானம் அடைய பெற்றவனுக்குத்தான் சந்தேகம் ஒன்றும் வருவதில்லை.

* உலகில் பெரும் பற்றுதல் வைத்து சுக ஜீவனம் செய்து வருபவர்களிடம் உலகிலுள்ள கஷ்ட நஷ்டங்களைப்பற்றி மிகைபடப் பேசலாகாது.

* உலகப் பற்றுடையான் வெறும் பொய் வேஷக்காரன். கடவுளை நேசிப்பவன் போன்று அவன் பாசாங்கு பண்ணுகிறான். உண்மையின் சகலப் பொருள்களிடத்துதான் அவன் பற்றுதல் வைத்திருக்கிறான். ஈசனே அனைத்துக்கும் இறைவன் என்னும் மெய்ஞ்ஞானம் வரும் வரையில் மனிதனுக்குப் பிறவிகள் தொடர்ந்து கொண்டேயிருக்கும்.

* ஒருவனுக்கு தேகாத்ம புத்தி இருக்கும்பொழுது பிறப்பு, இறப்பு, பிணி, துயரம், இன்பம், துன்பம் ஆகியவைகளைப் பற்றிய உணர்வு இருக்கிறது. ஆனால் ஆத்மாவோ இவைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது

- ராமகிருஷ்ண பரமஹம்சர்.

Posted in Labels: |

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...